ஸ்ரீல சியாமானந்த பண்டிதர்



ஸ்ரீல சியாமானந்த பண்டிதர் பகவான் ஸ்ரீ சைதன்யரின் சிறந்த பக்தரும், சிறந்த வைஷ்ணவ ஆச்சாரியர்களில் முக்கியமானவருமான, ஸ்ரீ நிவாஸ் ஆச்சாரியர் மற்றும் நரோதமதாஸ் தாகூரின் காலகட்டத்தைச் சேர்ந்தவருமாவார். இம்மூவரும் ஸ்ரீல ஜீவ கோஸ்வாமியிடம் சாஸ்திரங்களை பயின்றனர். மற்றும், பகவான் சைதன்யர் பூலோக லீலைகளை முடித்துக்கொண்டு சென்றபிறகு அவரது போதனைகளை உலகிற்கு பரப்புவதில் மிக முக்கிய பங்கு வகித்தனர். பகவான் சைதன்யரின் காலத்திற்கு பிறகு, ஒரிசா மற்றும் வங்காளத்தில் தொய்வடைந்த பக்தி இயக்கம், மீண்டும் இவர்களின் முயற்சியால் எழுச்சி பெற்றது.

பிறப்பும் குழந்தைப் பருவமும்

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


சியாமானந்தர், சித்திரை மாதம் பௌர்ணமி திங்களில், ஸ்ரீ கிருஷ்ண மண்டல் மற்றும் ஸ்ரீமதி ஶ்ரீ துரிகா என்பவர்களுக்கு உட்கல தேசத்தில் ( ஒடிசா) உள்ள தரேந்திர பாதுரபுரம் என்ற இடத்தில் பிறந்தார். அவருக்கு முன்பிறந்த பல குழந்தைகள் இறந்து விட்டதால் அவரை, எதிர்வரும் ஆபத்துக்களிலிருந்து காக்கும் என்று கருதி "துக்கி" என்று பெயர் சூட்டினர்.

துக்கி தனது சிறுவயதிலேயே மிகவும் புத்தி கூர்மையானவராகவும் ,பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் லீலைகளை கேட்க மிகவும் ஆர்வமுள்ளவராய் திகழ்ந்தார் , பகவான் ஸ்ரீ கௌரங்கர் மற்றும் நித்யானந்தரின் லீலைகளால் ஈர்க்கப்பட்டு, அவர்களின் சேவையில் தன் வாழ்வை அர்ப்பணிக்க விரும்பினார். பின்னர் பெற்றோரின் அனுமதியோடு, பகவான் சைதன்யரின் போதனைகளை கற்க விரும்பி, அவரது மிக சிறந்த பக்த்தர்ரான ஸ்ரீல ஹிருதய சைதன்யரை காண அம்பிகா கல்னா சென்றார்.

தீக்ஷை பெறுதல்

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


அம்பிகா கல்னாவை அடைந்த துக்கி ஸ்ரீல ஹிருதய சைதன்யரிடம் அடக்கமாக சேவை செய்து அவரது மணம் கவர்ந்தார். ஸ்ரீல ஹிருதய சைதன்யர், துக்கிக்கு "கிருஷ்ண தாசர்" என பெயரை வழங்கி தனது சீடராக ஏற்றார். கிருஷ்ண தாசரின் புத்தி கூர்மையையும், சேவை மனப்பான்மையையும் கண்டு, பிருந்தாவனத்தில் இருக்கும் ஸ்ரீல ஜீவ கோஸ்வாமியின் கீழ் வேத சாஸ்திரங்களை பயில அனுப்பி வைத்தார்.

பிருந்தாவனத்தில் வேத சாஸ்திரங்களை படித்தல்

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஸ்ரீல ஜீவ கோஸ்வாமி, ஹிருதய சைதன்யரின் கோரிக்கையை ஏற்று துக்கி கிருஷ்ணதாசருக்கு வேத சாஸ்திரங்களை கற்று கொடுக்க மகிழ்சியுடன் சம்மதித்தார். இவருடன் ஸ்ரீல நரோத்தம தாஸ் தாக்கூர் மற்றும் ஸ்ரீனிவாச ஆச்சார்யரும் சேர்ந்து பயிற்சி பெற்றனர்.

ஸ்ரீமதி ராதா ராணியை தரிசித்தல்

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஸ்ரீல ஜீவ கோஸ்வாமி அவர்கள் கிருஷ்ண தாசருக்கு கனன குஞ்ஞத்திலிருந்து தண்ணீர் கொண்டுவரும் சேவையை அளித்திருந்தார். மனதை ஶ்ரீ ஶ்ரீ ராதா கிருஷ்ணரின் லீலைகளில் லைத்தும், நாம சங்கீர்த்தனம் செய்தும், தண்ணீர் கொண்டு வரும் சேவையை ஆனந்தத்துடன் செய்தார். ஒரு சமயம் கிருஷ்ண தாசருக்கு கனன குஞ்ஞத்திலிருந்து திரும்பி வரும்போது ஒரு இடத்தில் ஒரு அழகிய தங்க கொலுசை கண்டார். இது யாருடையதாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டிருக்கும் பொழுது, ஒரு அழகிய இடையர் குல பெண் அங்கு வந்தாள். அவள் துக்கி கிருஷ்ணரை கண்டவுடன் தான் தன் தோழியின் கொலுசை தேடுவதாகவும், அதை உங்கள் கண்ணில் பட்டதா என வினவினார். துக்கி கிருஷ்ண தாசர் அப்பெண்ணிடம் நீங்கள் யார் என்று கேட்க, தான் இந்த கிராமத்தை சேர்ந்த ஒரு கோப்பி என்றும், நேற்று இரவு நடனத்தின் பொழுது தன் தோழியின் ஒரு கொலுசு காணாமல் போனதாக கூறினாள். கிருஷ்ணதாசரோ 'கொலுசு என்னிடம் தான் உள்ளது ஆனால் அதை உன் தோழியிடம் தான் கொடுப்பேன்' என உறுதியாக கூறிவிட்டார். இதை கேட்ட பெண்மணி தோழியை அழைத்து வருவதாக கூறிவிட்டு சென்றாள்.

அங்கே வந்த பெண் திருமதி ராதாராணியின் தோழியான திருமதி விசாகா சகியாவாள். ஶ்ரீமதி ராதாராணி துக்கி கிருஷ்ண தாசருக்கு கருணை காட்ட விசாகா தேவியுடன் அவ்விடத்தில் வந்து ஒரு மரத்தின் பின்னால் மறைந்து நின்றார். துக்கி கிருஷ்ணதாசருக்கு வந்திருப்பது யார் என்று ஊகிக்க முடிந்தது. விசாகா தேவி தனது கரத்தை நீட்டி கொலுசை கேட்க, அவர் கொலுசை விசாகசகியின் கையில் தந்தார். பின் விசாக சகி , ஶ்ரீமதி ராதாராணி உனது சேவையில் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார் .உனக்கு வேண்டிய வரங்களை கேள் உனது விருப்பத்தை விரஜ ராணி நிறைவேற்றுவார் என்றார். துக்கி கிருஷ்ணதாசரோ, நான் ஆசைபடுவது ஒன்றும் மட்டுமே, ஶ்ரீமதி ராதாராணியின் திருபாத துளி மட்டுமே . என்றும் அவரது திருபாதங்களில் அடைக்கலம் கொள்ள விரும்புகிறேன் என்று சரணம் அடைந்தார்.

விசாக சகி கிருஷ்ணதாசரை அருகில் உள்ள குளத்தில் குளித்துவர சொன்னார். அவரும் அந்த குளத்தை வலம் வந்து, அதில் முங்கி எழுந்த போது , தான் ஒரு அழகிய பெண்ணாக (கோப்பியாக) மாறியிருந்ததை கண்டார். பின் அந்த பெண்ணை விசாக சகி, ராதா ராணியிடம் அழைத்து சென்றார், அங்கே ராதா ராணி, இப்புது கோபிக்கு நன்றிகூறி, கொலுசை தன் பாதத்தில் உள்ள குங்குமத்தால் அவரது நெற்றியில் திலகம் இட்டார்.பின்னர் " இனி தங்கள் நெற்றியில் இத்திலகம் எப்பொழுதும் இருக்கும் மேலும் தங்களின் பெயர் " சியாமானந்தர்" என அழைக்கப்படும்' என ஆசி கூறினார். துக்கி கிருஷ்ணதாசர் சுயநினைவு பெற்று எழும்பிய போது குலத்தின் அருகே கிடந்திருந்தார். அவ்விடத்தில் எவரும் இல்லை அனால் அவர் நெற்றில் திலகம் இருந்தது. பரமானந்தம் அடைந்தார். ராதாரணியை மீண்டும் மீண்டும் நமஸ்கரித்து அப்பூமியில் உருண்டு பல துதிகளை பாடினார்.

பின்னர் ஸ்ரீல ஜீவ கோஸ்வாமியிடம் சென்று நடந்ததை கூறினார். அவரும் மிகவும் மகிழ்ந்து, 'நீங்கள் மிகவும் பாக்கியம் செய்தவர். ஶ்ரீமதி ராதா ராணி, திருபாதத்தை அலங்கரித்த கொலுசை தங்கள் மார்பில் வைத்திருந்தீர். என்ன பாக்கியம் செய்தீர்'. திருமதி ராதாரணி , தனது பாத சலங்கை திரும்ப பெற்று மிக மகிழ்ச்சியடைந்திருப்பாள். அதனால் சியாமாநந்தரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார். இன்றிலிருந்து தங்களின் திருநாமம் 'சியாமானந்தர்' என அழைக்கப்படும். தொடர்ந்து ஜீவ கோஸ்வாமி, 'தங்கள் நெற்றியில் தோன்றிய இத்திலகவடிவம் கொலுசின் குறி ஆகும். இன்றுமுதல் இந்த திலகத்திற்கு பெயர் 'சியாமனந்தி திலகம்' என அறியப்படும். என்றார்.இந்த அற்புதமான நிகழ்வுகளை யாரிடமும் சொல்லவேண்டாம் என்று கட்டளையிட்டார்.

துக்கி கிருஷ்ண தாசர் , ஸ்ரீல ஜீவ கோஸ்வாமியிடம் இரண்டாம் தீக்ஷை ஏற்று தனது பெயரை சியாமாநந்த என்று மாற்றிக்கொண்டதாக வைஷ்ணவ சமூகத்தில் உள்ள பலர் பலவிதமாக பேச துவங்கினர். இந்த செய்தி அம்பிகா காலணாவில் வசிக்கும் ஹிருதயானந்தருக்கு செவிகளில் எட்டியது. சியாமானந்தர் வந்தபொழுது அவரின் புது விதமான திலகத்தை கண்டு சினம் கொண்டார். தனது சீடனை ஆஸ்ரமத்திற்கு வரவேண்டாம் என்றும் தான் இட்ட திலகத்தை மாற்றியதால் அவர்மேல் மிகவும் சீற்றம் அடைந்தார்.

இதை கேட்ட சியாமாநந்தர் மிகவும் வேதனை அடைந்தார், அவர் கண்களில் நீர் மல்க நின்றார். இதை கண்ட குருவானவர் இரக்கம் கொண்டு 'உனது நெற்றியில் உள்ள திலகத்தை எடுத்துவிட்டு நான் கொடுத்த திலகத்தை இட்டு கொண்டு வந்தால், நான் உன்னை ஏற்பேன்' என கூறினார்.

அன்றிரவு ஶ்ரீமதி ராதாராணி ஹிருதயாநந்தரின் கனவில் தோன்றி " துக்கி கிருஷ்ண தாசரின் சேவையில் தான் மகிழ்ச்சி அடைந்ததாகவும். தான்தான் அவருக்கு பெயரும், திலகமும் தந்ததாக கூறி மறைந்தார்.

உடனே திரு ஹிருதயாநந்தர் தனது சீடரை தேடிச்சென்றார். பின்பு தனது சீடனை கட்டியணைத்து ' ஶ்ரீமதி ராதாராணியின் கருணையை பெற்ற நீ மிகவும் பாக்கியசாலி. என கூற, இருவரும் கட்டி அனணத்துகொண்டனர். இப்படியாக குரு சிஷயரிடம் இருந்த சிறிய மன பேதம் விலகியது.

ஒரிசாவில் சைதன்ய மஹாப்ரபுவின் உபதேசங்களை பரப்புதல்

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஒரிசா மாநிலத்தில் சைதன்ய மஹாப்ரபுவின் இயக்கம் மிகவும் தொய்வு அடைந்ததை கவனித்த ஸ்ரீ ஹிருதயாநந்தர், சியாமாநந்தரை அங்கு பிரச்சாரம் செய்ய அனுப்பினார். சியாமானந்தர் ஒரிசாவில் உள்ள முக்கியமான நகரத்தில் சைதன்ய மஹாப்ரபுவின் போதனைகளை பிரச்சாரம் செய்ய தொடங்கினார். அவரின் பிரச்சாரம் மக்களின் மனதை வென்றது. மஹபிரபுவின் மறைவுக்கு பின்னர் இரண்டு தலைமுறையாக கிருஷ்ண பக்தி இயக்கதை பரப்ப சீடர்கள் இல்லாமல் போன இடத்தில், பல பக்தர்களுக்கு தீக்ஷை அளித்தார். அவர்களில் மிக பிரதானமான சீடர் ஸ்ரீல ராசிகானந்தர் ஆவார்.

மறைவு

🍁🍁🍁🍁🍁🍁🍁


இவ்வாராக மிக வெற்றிகரமாக பகவான் சைதன்யரின் பக்தி இயக்கத்தை பரப்பி , இப்பூவுலகை விட்டு சைதன்யரின் நித்திய லீலைக்கு திரும்பி சென்றார். இவரின் புஷ்பஸமாதி மற்றும் திருமதி ராதாரணியின் கால் கொலுசை கண்டு எடுத்த இடத்தை, ஸ்ரீ ஸ்ரீ ராதா சியாமசுந்தரின் கோவில் எதிர்புறத்தில் இன்றும் (விருந்தாவனம்) காணலாம்.

ஹரே கிருஷ்ணா !


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!

ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி

🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆


சுத்த பக்தி https://t.me/suddhabhaktitami


Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more