கிருஷ்ண உணர்வில் முழுமையாக ஆழ்ந்திருப்பவன், நிச்சியமாக ஆன்மீக உலகை அடைவான்.


 கிருஷ்ண உணர்வில் முழுமையாக ஆழ்ந்திருப்பவன், நிச்சியமாக ஆன்மீக உலகை அடைவான்.


💐💐💐💐💐💐💐💐💐💐


ப்ரஹ்மார்பணம் ப்ரஹ்ம ஹவிர்
ப்ரஹ்மாக் னெள ப்ரஹ்மணா ஹுதம்
ப்ரஹ்மைவ தேன கந்தவ்யம்
ப்ரஹ்ம-கர்ம-ஸமாதினா

மொழிபெயர்ப்பு
********************

கிருஷ்ண உணர்வில் முழுமையாக ஆழ்ந்திருப்பவன், நிச்சியமாக ஆன்மீக உலகை அடைவான்; ஏனெனில், அவன் ஆன்மீக செயல்களுக்காகத் தன்னை முழுமையாக சமர்ப்பித்துள்ளான். பிரம்மனை இலக்காகக் கொண்ட இச்செயல்கள் அதே ஆன்மீக இயற்கையின் மூலம் அர்ப்பணிக்கப்படுவதாகும்.

பொருளுரை
******************

கிருஷ்ண பக்தியின் செயல்கள் எவ்வாறு இறுதியில் ஆன்மீக இலக்கை நோக்கிக் கொண்டுச் செல்கின்றன என்பது இங்கே விளக்கப்பட்டுள்ளது. கிருஷ்ண பக்தியில் பல்வேறு செயல்கள் உள்ளன. அவை பின்வரும் பதங்களில் விளக்கப்படும். ஆனால் தற்போது கிருஷ்ண உணர்வின் அடிப்படைக் கொள்கை மட்டும் விளக்கப்பட்டுள்ளது. பௌதிகக் களங்கத்தினால் பந்தப்பட்டுள்ள கட்டுண்ட ஆத்மா, ஜடச் சூழ்நிலையில் செயலாற்றுவது நிச்சியம். இருப்பினும், அத்தகு சூழ்நிலையிலிருந்து அவன் வெளியேற வேண்டும். கட்டுண்ட ஆத்மா பௌதிகச் சூழ்நிலையிலிருந்து வெளியேறும் முறையே கிருஷ்ண உணர்வாகும். உதாரணமாக, அளவுக்கு அதிகமாக பால் பொருள்களை உட்கொண்டதால் வயிற்றைக் கெடுத்துக் கொண்டு துன்புறும் ஒரு நோயாளி, மற்றொரு பால் பொருளான தயிரின் மூலம் குணப்படுத்தப்படுகிறான். இங்கே கீதையில் கூறப்பட்டுள்ளது போல், ஜடத்தில் மூழ்கியுள்ள கட்டுண்ட ஆத்மாவை கிருஷ்ண உணர்வினால் குணப்படுத்த முடியும். இந்த வழிமுறை பொதுவாக யக்ஞ, அல்லது விஷ்ணுவின் (கிருஷ்ணரின்) திருப்திக்காக மட்டும் செயலாற்றப்படும் செயல்கள் (யாகங்கள்) எனப்படும். ஜடவுலகின் செயல்கள் எந்த அளவிற்கு விஷ்ணுவிற்காக மட்டும் (கிருஷ்ண உணர்வில்) செய்யப்படுகின்றனவோ, அந்த அளவுக்கு சூழ்நிலை ஆன்மீகயமாக்கப்படுகிறது. ப்ரஹ்ம (பிரம்மன்) என்ற வார்த்தைக்கு "ஆன்மீகம்" என்று பொருள். இறைவன் ஆன்மீகமானவர், அவரது திவ்யமான உடலிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் பிரம்மஜோதி, அவரது ஆன்மீக தேஜஸ் என்று அழைக்கபடுகின்றது. இருப்பவை அனைத்தும் இந்த பிரம்மஜோதியிலேயே நிலைபெற்றுள்ளன. ஆனால் இந்த ஜோதியானது, மாயையினாலோ புலனுகர்ச்சியினாலோ மறைக்கப்படும்போது அது பௌதிகம் எனப்படும். இந்த பௌதிகத் திரையினை கிருஷ்ண உணர்வால் உடனடியாக அகற்றிவிட முடியும். இவ்விதமாக, கிருஷ்ண உணர்வில் அர்ப்பணிக்கபடும் பொருள், அந்த அர்ப்பணத்தை ஏற்றுக்கொள்பவர், அர்ப்பணிப்பதற்கான வழிமுறை, அர்ப்பணம் செய்பவர், மற்றும் அர்ப்பணத்தின் விளைவு—இவையெல்லாம் சேர்ந்ததே பிரம்மன் அல்லது பூரண உண்மை எனப்படும். பூரண உண்மை மாயையால் மறைக்கப்படும்போது, பௌதிகம் என்று அழைக்கப்படுகிறது. பூரண உண்மையின் தொண்டில் பௌதிகம் உபயோகப்படுத்தப்படும் போது, அது தனது ஆன்மீக உணர்வை மீண்டும் அடைகின்றது. மாயையில் உள்ள உணர்வை பிரம்மனிடம் (பரமனிடம்) மாற்றும் வழிமுறையே கிருஷ்ண உணர்வு. மனம் கிருஷ்ண உணர்வில் முழுமையாக ஆழ்ந்திருக்கும் நிலை ஸமாதி எனப்படும். இத்தகு உன்னத உணர்வில் செய்யப்படும் அனைத்துச் செயல்களும் யக்ஞ (பரமனுக்காகச் செய்யப்படும் யாகம்) என்று அழைக்கப்படுகின்றன. இத்தகு ஆன்மீக உணர்வில், அர்ப்பணிப்பவர், உதவியாக இருப்பவை, செலவிடப்படுவது, யாகத்தைச் செய்பவர் (யாகத்தின் தலைவர்), விளைவு (இறுதி இலாபம்) — இவையனைத்தும் பூரணமான பரபிரம்மனில் ஒன்றாகிவிடுகின்றன. இதுவே கிருஷ்ண உணர்வின் வழிமுறையாகும்.



(பகவத் கீதை உண்மையுருவில் / அத்தியாயம் நான்கு / பதம் 24)


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க


ஆன்மீக கதைகளை படிக்க 👇

Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more