ஶ்ரீ ஶ்ரீ நந்த நந்தன அஷ்டகம்

 

ஶ்ரீ ஶ்ரீ நந்த நந்தன அஷ்டகம்

பதம் 1

ஸுசாரு வக்த்ர மண்டலம்

ஸுகர்ணரத்ன குண்டலம்

ஸுசர்சிதாங்க சந்தனம்

நமாமி நந்த³நந்த³னம்

மொழிபெயர்ப்பு

வசீகரிக்கும் அழகிய வட்டமான திருமுகமும்,  அழகிய (மாதுளை பூ போன்ற) காதுகளை ரத்தின குண்டலங்கள் அலங்கரிக்க,    அவருடைய திருமேனி சுகந்தமான சந்தன கூழினால் பூசப்பட்டு வசீகரத்துடன் காட்சியளிக்கும் நந்த மகாராஜாவின் புதல்வரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை நான் வணங்குகிறேன்.

பதம் 2

ஸுதீர்கநேத்ர பங்கஜம்

சிகீசிகண்டமூர்தஜம்

அனங்ககோடி மோஹனம்

நமாமி நந்த நந்தனம்

 

மொழிபெயர்ப்பு

அழகிய தாமரை இதழ் போன்ற நீண்ட கண்களையுடையவரும் சிரசில் மயில்பீலிகளால் அலங்கரிக்கப்படும் பல கோடி கோடி மன்மதன்களை மயக்கும் நந்த மகாராஜாவின் புதல்வரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை நான் வணங்குகிறேன்.

பதம் 3

ஸுநாஸிகாக் மௌக்திகம்

ஸ்வச்சந்த பங்க்திகம்

நவாம்புதாங்க சிக்கணம்

நமாமி நந்த நந்தனம்

மொழிபெயர்ப்பு

அவரது மூக்கின் நுனியில் யானையின் தந்தங்களினால் செய்யப்பட்ட மின்னும் அழகிய முத்து தொங்குகின்றது.  இயற்கையிலேயே பிரகாசிக்கும் முத்துக்கள் போன்ற பல் வரிசையும் புத்தம் புதிய மழை மேகம் போன்று பிரகாசிக்கும் திருமேனியும் கொண்ட நந்த மகாராஜாவின் புதல்வரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை நான் வணங்குகிறேன்.

பதம் 4

கரேண வேணு ரஞ்ஜிதம்

தி: கரீந்த் ஞ்ஜிதம்

துகூல பீதஸோபநம்

நமாமி நந்த நந்தனம்

மொழிபெயர்ப்பு

அவருடைய கரங்களை புல்லாங்குழல் அலங்கரிக்கின்றது யானையின் அரசனான கஜராஜனை தோற்கடிக்கும் வசீகரமான நடையுடையவரும் மஞ்சள் பட்டாடையில் (பீதாம்பரம்) அலங்கரிக்கப்பட்டவருமான நந்த மகாராஜாவின் புதல்வரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை நான் வணங்குகிறேன்.

பதம் 5

த்ரிபங்க தேஹஸுந்தரம்

நகத்யுதி: ஸுதாகரம்

அமூல்ய ரத்நபூஷணம்

நமாமி நந்த நந்தனம்

மொழிபெயர்ப்பு

மூன்று இடங்களில் வளைந்து திரிபங்க ரூபியாக வசீகரமாக காட்சியளிக்கின்றார்.  அவருடைய நகங்கள் சந்திரன் போன்று ஒளிர்கிறது.  விலைமதிப்பற்ற ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டவரும் நந்த மகாராஜாவின் முதல்வருமான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை நான் வணங்குகிறேன்.

பதம் 6

ஸுகந்த அங்கஸௌரபம்

உரோ விராஜி கௌஸ்துபம்

ஸ்புரத் ஶ்ரீவத்ஸலாஞ்சநம்

நமாமி நந்த நந்தனம்

மொழிபெயர்ப்பு

அவருடைய திருமேனி அசாதாரணமாக மயக்கும் நறுமணத்தை வெளியிடுகின்றது. அவரது பரந்து விரிந்த மார்பு ஒளிரும் கௌஸ்துப மணி மற்றும் ஸ்ரீவத்ஸ குறியை தாங்கியவருமான நந்த மகாராஜாவின் புதல்வரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை நான் வணங்குகிறேன்.

பதம் 7

வ்ருந்தாவனஸுநாகரம்

விலாஸாநுக வாஸஸம்

ஸுரேந்த் ர்வமோசநம்

நமாமி நந்த நந்தனம்

மொழிபெயர்ப்பு

அவர் பிருந்தாவனத்தை மிக நேர்த்தியாக காத்து அருள் பாலிக்கின்றார்.  அவர் ஆடை தரித்திருக்கும் விதமானது அவரது அழகிய விளையாட்டுத்தனமான லீலைகளை மேம்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.  இந்திரனை அவரது கர்வத்திலிருந்து விடுதலை அளித்த நந்த மகாராஜாவின் புதல்வரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை நான் வணங்குகிறேன்.

 

பதம் 8

வ்ரஜாங்க நாஸுநாயகம்

ஸதா ஸுக ப்ரதா யகம்

ஜகந்மந:ப்ரலோபநம்

நமாமி நந்த நந்தனம்

மொழிபெயர்ப்பு

பிருந்தாவனத்தை கோபியரின் காதலரும் எப்பொழுதும் எல்லா உயிர்களுக்கும் மகிழ்ச்சியைளிப்பவரும் அவர்களது மனதை மயக்குபவருமான நந்த மகாராஜாவின் புதல்வரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை நான் வணங்குகிறேன்.

பதம் 9

ஶ்ரீ நந்த நந்த னாஷ்டகம்

படேத்: ஸ்ரத் யான்வித:

தரேத் வாப்திம்  துஸ்தரம்

லபேத்  ததங்க்ரியுக்மகம்

மொழிபெயர்ப்பு

யாரொருவர் நந்த மகாராஜாவின் புதல்வரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் புகழ்பாடும் இந்த எட்டுப் பதங்களை நம்பிக்கையுடன் பாராயணம் செய்கின்றார்களோ அவர்கள்  கடப்பதற்கு மிக அரிதான இந்த பௌதீக பெருங்கடலை மிகச் சுலபமாக கடந்து வெற்றி அடைவார்கள் மற்றும் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் தாமரை பாதத்தில் அடைக்கலமும் அடைவார்கள் என்பது நிச்சயம்.

 

 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.



 

 


Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more