ஸ்ரீ சாரங்க முராரி தாகூர்
🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅
ஸ்ரீ சாரங்க முராரி தாகூர், மோதத்ருமத்வீப மாம்-காச்சி என்ற இடத்தில் வாழ்ந்து வந்தார். அவர் வழிபட்ட ஸ்ரீ ஸ்ரீ ராதா-கோபிநாத் விக்கிரஹங்கள் இன்றும் அங்கு உள்ளன.ஸ்ரீ சாரங்க முராரி தாகூரின் குரு , ஸ்ரீ சாரங்கரின் கோவில் முற்றத்தில், மிகவும் பழமையான பகுல் மரம் ஒன்று இருந்தது. இம்மரம் தொடர்பான உள்ளூர் புராணக்கதை ஒன்று உண்டு. ஒருநாள் ஸ்ரீ மஹாப்ரபு அங்கு வந்தபோது, ஸ்ரீ சாரங்கரின் கோவில் முற்றத்தில் உள்ள பகுல் மரம் பட்டுபோய், அழிவதைப் பார்த்தார். மஹாப்ரபு சாரங்கரைப் பார்த்து, 'இம்மரம் பட்டுபோய்யுள்ளது; நீர் என்ன செய்யப்போகிறீர்கள்' எனக் கேட்டார்.
'இம்மரத்தைக் காப்பாற்ற, உங்கள் கருணையைத் தவிர எனக்கு வேறு எந்த நம்பிக்கையும் இல்லை' என சாரங்க தாகூர் பதில் கூறினார்.
உடனே மஹாப்ரபு, பட்டுபோன அம்மரத்தைத் தழுவிக்கொண்டார். மரம் இன்றளவும் பெரிதாகவும், உறுதியாகவும் உள்ளது.
சாரங்க தாகூரா சீடர்களை ஏற்பதில்லை என உறுதியாக இருந்தார். ஆனால் பகவான் ஶ்ரீ சைதன்ய மஹாப்ரபு, அவரிடம் சீடர்களை ஏற்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தினார்.. இறுதியில், சாரங்க தாகூர் சீடர்களை ஏற்பதாக, மனமில்லாமல் ஒப்புக்கொண்டார். அடுத்த நாள் காலை, தான் காணும் முதல் நபரை தெய்வீகமந்திரம் மூலம் தீட்சை தந்து சீடராக்கி கொள்வதாக கூறினர்.
அடுத்த நாள் அதிகாலை, கங்கையில் நீராட சாரங்க தாகூர் கிளம்பினார். கங்கையில் நுழைந்ததும், ஒரு இறந்த சிறுவனின் உடல், தற்செயலாக அவர் காலில் பட்டது. அந்த உடலைத் தூக்கி, 'நீ யார்? எழுந்திரு', என்றார், சாரங்க தாகூர். இதைப் பின்புறமிருந்து பார்த்துக்கொண்டிருந்த மஹாப்ரபு, 'சாரங்கா! மந்திரத்தை அவர் காதில் கூறு' என்றார். சாரங்க தாகூர் மந்திரத்தை, இறந்த சிறுவனின் காதில் கூறியதும், அச்சிறுவன் உணர்வு பெற்றான். 'என் பெயர் முராரி; நான் உங்கள் சீடன்; உங்கள் கருணையை என்மீது பொழியுங்கள்' என அச்சிறுவன் கூறினான்.
அச்சிறுவனுக்குப் பூணல் அணிவிக்கும் நாளன்று, பாம்பு கடித்து இறந்தான். அக்காலத்தில் குல வழக்கப்படி, ஆண் குழந்தைகளின் இறந்த உடலை எரிக்காமல், வாழைமரப் பட்டைகளில் வைத்து, உடலை கங்கையில் மிதக்க விடுவார்கள். இதே போல் முராரியின் அவனது உறவினர்கள் உடலை வாழைமரப் பட்டைகளில் வைத்து, கங்கையில் மிதக்க விடுட்டனர். இறந்த தங்கள் மகன் சாதுவின் கருணையினால் உயிர் பிழைத்ததை கேட்டு, அவனை திரும்ப பெற பெற்றோர் அங்கு வந்தனர். ஆனால் சிறுவன் முராரியோ, பெற்றோரிடம் செல்ல மறுத்து. 'எனக்கு உயிர் கொடுத்தவருக்கு நான் கடமைப்பட்டுள்ளேன்; நான் இனிமேல் அவருக்குச் சேவகம் செய்வேன்' என்றான். சாரங்க தாக்கூரால் தீட்சை பெற்றமையால் அவனை சாரங்க முராரி என்றே அழைத்தனர்.
ஸ்ரீ சாரங்க முராரி தாகூர் பற்றி விருந்தாவன தாசதாகுர் கூறுகிறார்: முராரி தாகூர் பிரச்சாரம் செய்ய காட்டு வழியாக போகும் போது, புலிகளைப் பின்தொடர்ந்து காட்டில் நுழைவார்; சில நேரத்தில் அவர், புலியின் மேல் குதிப்பார்; அவரின் ஆற்றலால், புலி அமைதியாக இருக்கும். சில நேரத்தில், அவர் ஒரு பாம்பைத் தன் மடியில் வைத்து விளையாடுவர். 'அவதூத மகாசயா' என்னும் நித்யானந்த பிரபுவின் கருணையால், புலிகளோடும், பாம்புகளோடும் அவரால் இவ்வாறு விளையாட முடிந்தது. ஸ்ரீ நித்யானந்த ராயர் தன் உதவியாளர்களிடம் அன்பு கொண்டவர். அவரின் சிறு கண் அசைவினால், அவர்கள், பிரம்மாவிற்கும் கிட்டாத இன்பம் அனுபவித்தனர்.
ஸ்ரீ சாரங்க முராரி தாகூர் எப்போதும் தன்னை மறந்த நிலையிலும், தன் உள் ஆனந்தத்தில் அமிழ்ந்த நிலையிலும் இருப்பார். சில நேரங்களில், இரண்டு மூன்று நாட்கள் கூட, எவ்வித உடல் வருத்தமும் இன்றி, தன்னுணர்விலேயே இருப்பார். உயிரற்றவர்போல் அவர் காணப்படுவர்; அதனால் அவரின் செயல்கள் உணரமுடியாதவையாக இருந்தன. அது அவரின் மாபெரும் சக்தியின் வலிமை. அவரின் தெய்வீக உணர்வுகளின் இடைவிடா மாற்றங்களை நான் எவ்வளவு வர்ணிப்பேன்? [சைதன்ய பாகவதம்--அந்த்ய லீலை--5:426-434]. அவரின் குடும்ப வழித்தோன்றல்கள், பர்தமன் மாவட்டத்திலுள்ள ஷர்கம் நகரிலே வசிக்கின்றனர்.
வ்ரஜ லீலையில், ஸ்ரீ சாரங்க முராரி தாகூரா, நந்தி-முகியாக இருந்தார் என கவுர்-கணோதேச தாகூர் கூறுகிறார் [செய்யுள் 172]
"வ்ரஜே நந்தமுகி யாசித்
சாத்திய சாரங்க தாகூரா
ப்ரஹ்லாதோ மன்யதே கைஷ்சின்
மத்-பித்ரா ந ஸ மன்யதே"
வ்ரஜ ப்ரஹ்மணி நந்திமுகி தேவி, ஸ்ரீ சாரங்க முராரி தாகூராவாகத் தோன்றினார். ஸ்ரீ சாரங்க முராரி தாகூரா, ப்ரஹ்லாதரின் அவதாரம் எனச் சிலர் கூறுகின்றனர். என் தந்தை [சிவானந்த சேனா --கவிகர்ணபுராவின் தந்தை] இக்கருத்தை ஏற்கவில்லை.
Comments
Post a Comment