நினைவில் கொள்ளுதல் என்றால் கேட்பதும் உச்சரிப்பதுமாகும்
அப்யாஸ-யோக-யுக்தேன
சேதஸா நான்ய-காமினா
பரமம் புருஷம் திவ்யம்
யாதி பார்தானுசிந்தயன்
மொழிபெயர்ப்பு
பரம புருஷ பகவானாக என்னை தியானித்து, எப்போதும் தனது மனதை நினைப்பதில் ஈடுபடுத்தி, இவ்வழியிலிருந்து சற்றும் பிறழாது பயிற்சி செய்பவன், பார்த்தனே, நிச்சயமாக என்னை அடைகிறான்.
பொருளுரை
இப்பதத்தில் தன்னை நினைப்பது எவ்வளவு முக்கியமானது என்பதை வலியுறுத்துகிறார் பகவான் கிருஷ்ணர். ஹரே கிருஷ்ண மஹாமந்திர உச்சாடனத்தின் மூலம் கிருஷ்ணரைப் பற்றிய நினைவு மீண்டும் எழுப்பப்படுகிறது. பரம புருஷரின் ஒலி அதிர்வினை கேட்பதும் உச்சரிப்பதுவுமான இந்த வழிமுறையில், காது, நாக்கு மற்றும் மனமும் ஈடுபடுத்தப்படுகின்றன. இந்த உன்னதமான தியான முறையினை பயிற்சி செய்து மிகவும் எளிதானதாகும். மேலும், இவ்வழிமுறை பரம புருஷரை அடைய உதவுகின்றது. புருஷம் என்றால் அனுபவிப்பாளர். உயிர்வாழிகள், இறைவனின் நடுநிலை சக்தியைச் சேர்ந்தவர்கள் என்றபோதிலும், பௌதிகத்தின் களங்களத்தில் உள்ளனர். தங்களை அனுபவிப்பாளராக எண்ணிக் கொண்டுள்ள போதிலும், அவர்கள் பரம அனுபவிப்பாளர் அல்ல. நாராயணர், வாஸுதேவர் போன்ற பல்வேறு தோற்றங்களாகவும் விரிவுகளாகவும் விளங்கும் பரமபுருஷ பகவானே பரமஅனுபவிப்பாளர் என்பது இங்கே தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
ஒரு பக்தன், வந்தனைக்கு உரியவரான பரமபுருஷரை அவரது எந்த ரூபத்திலும்— நாராயணர், கிருஷ்ணர், இராமர் போன்ற எந்த ரூபத்திலும்—ஹரே கிருஷ்ண உச்சாடனத்தின் மூலம் இடையறாது நினைவிற் கொள்ள முடியும். இப்பயிற்சி அவனைத் தூய்மையப்படுத்தும்; மேலும், தனது இடையறாத உச்சாடனத்தின் விளைவால், வாழ்வின் இறுதியில் அவன் இறைவனின் திருநாட்டிற்கு மாற்றப்படுகிறான். யோகப் பயிற்சி என்பது உள்ளிருக்கும் பராமாத்மாவின் மீது தியானிப்பதாகும்; அதுபோலவே, ஹரே கிருஷ்ண உச்சாடனத்தின் மூலம் ஒருவன் எப்போது தனது மனதை பரம புருஷரின் மீதுநிலை நிறுத்துகிறான். மனம் சஞ்சலமானது என்பதால், கிருஷ்ணரை நினைப்பதற்கு அதனை வற்புறுத்துவது அவசியமாகும். இவ்விஷயத்தில் அடிக்கடி கொடுக்கப்படும் ஓர் உதாரணம், பட்டுப்பூச்சி ஆக வேண்டுமென்ற விருப்பத்தினால் ஒரே வாழ்வில் பட்டுப்பூச்சியாக மாற்றம்பெறும் கம்பளிப் பூச்சியாகும். அதுபோலவே, நாம் கிருஷ்ணரை இடையாது நினைத்தால், வாழ்வின் இறுதியில் நாம் அவரைப் போன்ற உடலமைப்பை பெறுவது உறுதி.
( ஶ்ரீமத் பகவத்கீதை 8.8)
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
Telegram
🍁🍁🍁🍁🍁
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், தகவல்கள் மற்றும் போஸ்டர்களுக்கு 👇
ஆன்மீக கதைகளை படிக்க 👇
Whatsapp :-
🍁🍁🍁🍁🍁
உங்களுக்கு தெரிந்த நன்பர்களுக்கு இதை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்🙏
Comments
Post a Comment