குருவாயூர் கேசவன்


 குருவாயூர் கேசவன்

வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர்


🔆🔆🔆🔆🔆🔆🔆



கேரளாவில் புகழ்பெற்ற குருவாயூரப்பன் திருக்கோயில் உள்ளது .அங்கே வீற்றிருக்கும் பகவான் கிருஷ்ணன்  வாசுதேவ கிருஷ்ணராக பக்தர்களுக்கு அருள்பாளிக்கிறார். பக்தர்களும் பகவத் கைங்கர்யத்தில் ஈடுபட்டு, பல விதமான திருவிழாகள், கோலாகலமான ஊர்வலங்கள், பிரசாத வினியோகம் போன்றவைகளில் பகவானை ப்ரீத்திபடுத்துகின்றனர்.  இறை சேவையில் பாகுபாடு கிடையாது.அனைத்து வகையான ஜீவராசிகளும் பகவானின் சேவைகளில் ஈடுபடலாம். அதுவே எல்லா ஜீவராசிகளுக்கும் உள்ள ஸ்வரூப நிலையாகும். இதை சைதன்ய சரிதாம்ருதம் மத்திய லீலை 20.108-109 ல்


ஜீவேர ஸ்வரூப் ஹய-

க்ரிஷ்ணேர நித்ய-தாஸ


ஜீவனின் ஸ்வரூப நிலை கிருஷ்ணருடைய நித்திய சேவகனாக இருப்பதாகும்.


என்று விளக்கப்பட்டுள்ளது. அப்படி யானையின் உருவில் பகவான் நாராயணனை பிரார்த்தனை செய்த கஜேந்திரன் என்ற யானையை பற்றி ஶ்ரீமத் பாகவதம் 8 ஆம் காண்டத்தில் மிகவும் சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளது. எந்த உருவத்திலும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணருக்கு தூய்மையான சேவை செய்யலாம். அப்படி ஒரு வாய்ப்பு கேரளாவில் புகழ்பெற்ற குருவாயூரப்பன் திருக்கோயிலில் சேவை செய்த யானை "கஜராஜன் கேசவனுக்கு" கிட்டியது. அந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்தி, பகவானையும் அவரது தூய பக்தர்களையும் தனது நேர்த்தியான பகவத் சேவையாலும் அன்பினாலும் உள்ளம் கவர்ந்தார்.



குருவாயூர் கேசவன் கேரளாவின் குருவாயூரில் மிக முக்கியமான பக்தர் யானை . இது அதிசயமான மற்றும் தனித்தன்மை வாய்ந்த இறைவனுக்கு சேவை செய்த மகத்தான யானைகளில் ஒன்றாகும்.  நீலம்பூரில் இருந்த வலியா ராஜா (பெரிய மஹாராஜா) மலபார் கலகத்தில் தனது பறிக்கபட்ட சொத்துக்கள் திரும்ப பெற்றால் குருவாயூரப்பனுக்கு தனது வசம்முள்ள பல யானைகளில் ஒரு யானையினை தானமாக தருவதாக வேண்டிகொண்டார் . தனது முழு சொத்துகளையும் திரும்பப் பெற்றபின் அவர் தனது வேண்டுதலை நிறைவேற்றினார்..  (கோவிலுக்கு யானையினை தானமாக கொடுப்பது கேரள மாநிலத்தில் உள்ள பொதுவான ஒரு வழிபாட்டு முறையாகும் இதுவும் ஒரு வகையான காணிக்கையாக ஏற்றுக்கொள்ளபடுகிறது.) மகாராஜாவின் ஆசை நிறைவேறியது அதனால் அவர் வாக்குறுதியை நிறைவேற்றினார்.   1922 ஆம் ஆண்டில் யானை ஒன்றை வழங்கினார்.  அந்த யானைதான் பிரபலமான குருவாயூர் கேசவன்.



யானைக்கு கேசவன் என பெயரிடப்பட்டது. கேசவன் பொதுவாகவே மிகவும் உன்னதமான குணமும், அமைதியாகவும் சில நேரங்களில் முன்னுக்கு பின் முரணாகவும் நடந்து கொள்ளும். யானையின் செய்கைகள்  முட்டாள்தனமாக இருப்பதாக யானை பாகன் மேல்சாந்தியிடம் ( தலைமை பூஜாரி) வந்து கூற , கேசவனின் மாயையை அகற்றுவதற்கு, மேல்சாந்தி  தூய்மையான முதல்தரமான  வெண்ணெயை குருவாயூரப்பனுக்கு நைவேத்தியம் செய்து கேசவனுக்கு  வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி சீவேலியில் ( யானை ஊர்வலம்) பங்குபெற செய்து  ஹரி நாம சங்கீர்த்தனத்திலும் பங்குகொள்ள வைத்தார்கள்.   ( இந்த பிரசாத நைவேத்தியம் முட்டாள்தனத்திற்கான ஒரு சிறந்த சிகிச்சையாக கையாலபடுகிறது, )



கேசவன் வந்த போது, பத்மநாபன் என்ற யானை பகவத் கைங்கர்யத்திற்கு ஈடுபடுத்தப்பட்டிருந்தார். அவர் தான் அப்போது கஜராஜனாக இருந்தார்.( தலைமை சேவக யானை) யானை பத்மநாபனின் நடத்தை,  சைகைகள் மற்றும் மேன்மையையும் இளம் கேசவன் உள்வாங்கினார். அதுமட்டுமின்றி 1923ல் கிருஷ்ணரின் சேவையில் தீவிரமாக ஈடுபடலானார். கேசவன் தனக்குச் சில சொந்த விதிகள் வைத்திருந்தார். அவர் உணவு பழக்கங்களில் மிகவும் தேர்ந்தவர்; மற்ற கோயில் யானைகளை விட கேசவன் மிகவும் வித்தியாசமானவர். குருவாயூர் ஶ்ரீ கிருஷ்ணரின் கோவிலை தவிர வேறு கோயில்களுக்கு செல்லமாட்டார். கட்டாயப்படுத்தினாலும் அடித்தாலும் அமைதியாக அடிவாங்கிக்கொண்டு கண்ணீர் விடுவார். ரகளை செய்யமாட்டார். கேசவன் ஏகாதசி நாளில் எதுவும் உண்ணாமல் விரதமிருப்பார். குருவாயூரப்பனை தவிர வேறு எந்த விக்ரகங்களையும் தன் மீது சுமக்க அனுமதிக்க மாட்டார்.. குருவாயூரப்பன் திடம்பை ஏந்தி தன் மேல் அமர வருபவர்களுக்கு மட்டுமே கேசவன் தன் முன்னங்கால்களைத் தாழ்த்தி ஏற உதவுவார். ஆலவட்டம், குடை, வெண்சமரம் போன்றவற்றை ஏந்தி நிற்போர், பின்னங்கால் துணை கொண்டே ஏற உதவுவார். தனி மனிதனாக தன் பாகன் கூட தன் மேல் ஏறி அமர அனுமதித்ததில்லை கேசவன்.



கேசவன் யானை அவரது தோழர்களுடன் ஒப்பிடுகையில் அவரது தலையை எப்பொழுதும் உயரமாக வைத்திருப்பதோடு, ஒரு விசித்திரமான உணர்வை அல்லது ஆறாவது உணர்வை நிரூபித்ததாக மக்கள் சொல்கிறார்கள்.கேசவன் சில நேரங்களில் தூய பக்தர்களின் பாவத்தோடு விசித்திரமாகவும் மற்றும் அதிசயமாகவும் மக்களிடம் நடந்தது கொள்வார். கேசவன் தனது யானைப் பாகர்களின் நடவடிக்கைகளால் கோபமடையும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன ஆனால் அவர் ஒருவருக்கும் எந்தவொரு உடல் ரீதியான தீங்கும் ஏற்படுத்தவில்லை.



ஒருமுறை அவர் தனது யானைப் பாகர்களை மதிக்காமல் ஆலயத்திற்கு விரைந்து சென்றார். அந்த இடத்திலுள்ள எல்லோரும் அதைக் கண்டு பயந்தனர் மக்கள் பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு ஏழையான, உதவியற்ற குஷ்டரோகியை கேசவன் தனது தும்பிக்கையால் தூக்கி பாதுகாப்பான ஒரு மூலையில் பத்திரமாக வைத்தார் என்று கண்டபோது அவர்கள் ஆச்சரியம் மடைந்தார்கள். ஒரு முறை குருவாயூர் கோயிலில் ஏற்பட்ட தீவிபத்தில் இருந்து மூலவரை காக்க மணல் மூட்டைகளைக் கொண்டு வந்து தீயை அணைத்தார். 



குருவாயூரில் உள்ள மக்கள் கேசவனின் தனிப்பட்ட பக்தியை மறக்க மாட்டார்கள். கேசவன் கோவிலில் முன்னணி யானையாக மாறிய போது மற்றொரு யானை குருவாயூரப்பனை  சுமந்து கொண்டு சென்ற போது, கேசவன் அந்த யானையைத் தாக்கி அவரை விரட்டியடித்தார். கேசவன்  குருவாயூரப்பனை எடுத்துச் செல்ல நினைத்த போதெல்லாம், தனது கால்களைப் பிணைத்து வைத்த சங்கிலிகளால் இழுத்துச் சென்று தனது சேவையை நிறைவேற்றுவதற்கான பெரிய ஆர்வத்தை வெளிப்படுத்துவார். கேசவன் குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் சேவை செய்துள்ளார்.



1973 ஆம் ஆண்டில் கேசவன் "கஜராஜன்" (யானைகளின் அரசன்) என்ற பட்டம் அளித்துக் கோவிலில் முதல் முறையாக யானையின் சேவையை பொன்விழா ஆண்டு (கோல்ட் ஜூபிலியாகக்) கொண்டாடப்பட்டது.



1976 ஆம் ஆண்டு,  டிசம்பர் 2 ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி நாளில்  திருவிழாவில் கேசவன் தனது நித்ய சேவை செய்து கொண்டிருந்த போது, உடல்நிலை சரியில்லாமல் பலவீனமடைந்தார். அவரது பெரிய உடல் நடுங்கியது, அவர் ஊர்வலத்திலிருந்து நீக்கப்பட்டார், அருகிலுள்ள பந்தலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஓய்வெடுக்க வைத்தனர்.அங்கு இரவு முழுவதும் உண்ணாமல் உபவாசம் இருந்தார். அடுத்த நாள் மாலை, குருவாயூரப்பனின்  சீவேலி ஊர்வலம் தொடங்கும் முன் சங்கநாதமும் இசை கருவிகளும் ஒலிக்கும் சப்தத்தை கேட்ட   கேசவன் ஆலயத்திற்கு முன்பாக வணங்கினார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் இசைக் கருவிகளைக் வாசித்துக் கொண்டிருந்தபோது மாலை வேளையில் இறக்கும் தருவாயில் கோவிலின் நடையை நோக்கி தும்பிக்கையை உயர்த்திக்கொண்டு இறைவனிடம் தனது வணக்கத்தை சமர்பித்துக் கொண்டு, நமஸ்கரிக்கும் பாணியில் தனது உடலை மண்ணில் அர்ப்பணம் செய்துகொண்டே, கேசவனின் உயிர் பிரிந்தது. அவர் வைகுண்ட பிராப்தியடைந்தார்.



யானை கேசவனுக்கு  12 அடி உயரமான கான்கிரீட் சிலை பாஞ்சஜன்யம் ரெஸ்ட் ஹவுஸ் முன்பு கோவில் தேவஸ்தான உறுப்பினர்கள் மூலம் நிறுவப்பட்டது. அதுமட்டுமின்றி குருவாயூர் கோவிலில் முக்கிய நுழைவாயிலுக்கு மேலே கேசவனின் இரு  தந்தங்கள் மற்றும் சித்திரங்கள் மூலம் கேசவனின் சேவையை இன்றும்  பகவான் ஶ்ரீ குருவாயூரப்பன் அனுபவித்து கொண்டிருக்கிறார். குருவாயூர் கோவிலை சுற்றியுள்ள பல  கடைகளில் கேசவனின் வண்ணமயமான ஓவியங்கள் வியாபாரிகள் விற்கின்றனர். குருவாயூர் கேசவன் இன்றும் பக்தர்கள் மனங்களில் நிறைந்திருக்கிறார். ஒரு யானையின் உடலில் இருந்து தனிப்பட்ட பக்தியை காட்டி தனது உடலையும் செயலையும் பகவத் சேவைகாக அர்ப்பணித்த புனிதமான கேசவனின் வரலாறு பக்தியுடன் கூடிய பகவத் சேவைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே



🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.



Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.

👇


🔆🔆🔆🔆🔆🔆🔆


சுத்த பக்தி https://t.me/suddhabhaktitami

Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more