குவலயாபீடம் யானையின் முற்பிறவி


 குவலயாபீடம் யானையின் முற்பிறவி

ஆதாரம் :- ஸ்ரீ கர்க ஸம்ஹிதை


    பஹுலாஸ்வன மன்னர் .நாரதரிடம், நாரதரே! குவலயாபீடம் யானை முற்பிறவியில் யாராக இருந்தது? எப்படி யானைப் பிறவியை அடைந்தது? எந்தப் புண்ணியத்தால் ஸ்ரீ கிருஷ்ணனுடன் கலந்தது ? என்று கேட்டார்.

    நாரதர் கூறினார், மகாபலி சக்ரவர்த்திக்கு மந்தமதி என்ற ஒரு புதல்வன் இருந்தான். பேருருவம் கொண்ட பலசாலியானஅவன் லக்ஷ் யானை பலத்தோடு திகழ்ந்தான்.

    ஒருமுறை அவன் ஸ்ரீ ரங்கநாத க்ஷேத்திரத்திற்கு யாத்திரை கிளம்பினான். க்ஷேத்திர தரிசனம் செய்ய வந்த பக்தர்களின் இடையில் மந்தமதி ஒரு யானையைப் போல வேகத்தோடு கைகளை அசைத்து கொண்டு மக்களை நசுக்கியவாறு சென்று கொண்டிருந்தான். அவன் கைகளின் வேகத்தால். யாத்திர்களிடைய சென்று கொண்டிருந்த வயதான த்ரித முனிவர் , அவன் கையசைவின் வேகத்தால் கீழே விழுந்துவிட்டார். கோபமடைந்த அவர் பலிகுமாரனுக்கு சாபமளித்தார்.

    த்ரித முனிவர் கூறினார்: " ஸ்ரீ ரங்கநாத க்ஷேத்திரத்திற்கு பகவான் ஶ்ரீரங்கநாதரை தரிசிக்க வந்த யாத்திரீகர்களை மதங்கொண்ட யானையை போல நீ அனைவரையும் நசுக்கியவாறு சென்று கொண்டிருக்கிறாய். முட்டாளே, துர்புத்தியுடையவனே நீ யானையாககடவாய் என்று சபித்து விட்டார். இவ்விதம் சபிக்கப்பட்ட உடனேயே மந்தமதி ஒளியிழந்து அவனது உடல் பாம்பு தோலைப்போல விடுபட்டு கீழே விழுந்துவிட்டது. முனிவரின் பிரபாவத்தை அறிந்துகொண்ட அரக்கன் உடனே கைகுவித்து வணங்கினான்
    
    மந்தமதி, முனிவரை வலம்வந்து வணங்கி " முனிவரே/க்ருபாசிந்தோ (கருணைக்கடலே) தாங்கள் பிராமண சிரோமணியான யோகீந்திரர். இந்த யானைப் பிறவியிலிருந்து எனக்கு எப்போது விடுதலை கிடைக்கும் என்பதைக் கூறுங்கள். இன்று முதல் தங்களைப் போன்ற மகாத்மாக்களை ஒருபோதும் அவமதிக்க மாட்டேன். தேவா தங்களைப் போன்ற முனிவர்கள் சாபம், வரம் இரண்டையும் அளிக்க வல்லவர்கள் ஆகவே தயை கூர்ந்து கருணை காட்டுங்கள் என்று வேண்டினான்.

    நாரதர் கூறுகிறார்: "மன்னா! அந்த அரக்கனால் மகிழ்விக்கப்பட்ட முனிவர் த்ரிதரின் கோபம் தணிந்து, பின்னர் அந்த அரக்கனிடம் கூறினார் 'அரக்கனே என் சொல் பொய்யாக முடியாது. இருந்தாலும் உன் பக்தியால் நான் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். ஆகவே தேவர்களுக்கு அரிதான ஒரு திவ்ய வரமளிக்கப் போகிறேன். கவலைப் படாதே. ஸ்ரீஹரியின் நகரமான மதுராபுரியில் ஸ்ரீ கிருஷ்ணன் கையால் உனக்கு முக்தி கிடைக்கும், ஐயப்படாதே. என்று கூறினார். மேலும் அதே மந்த மதி எனும் அரக்கனே விந்திய மலை மீது குவலயாபீடம் என்னும் பெயரில் பிரசித்திபெற்ற யானையாக இருந்தான் தனியாக இவன் ஒருவனே பத்தாயிரம் யானைகளுக்குச் சமமானவனாக இருந்தான். அவனை ஜராசந்தன் லக்ஷம் யானைகள் மூலம் பிடித்தான். அரசே பின் அந்த யானையை கம்சனுக்கு வரதட்சணையாக அளித்துவிட்டான்.

பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் குவாலயபீட யானையை கொல்லுதல்

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

    பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் கம்சனை வதம் செய்ய மதுராபுரிக்கு வந்தார் மல்யுத்த களத்தில் ஒலித்த பறைகளின் ஓசையை கேட்டு கிருஷ்ணரும் பலராமரும் வேடிக்கை பார்க்க அங்கு சென்றனர். மல்யுத்த மண்டபத்தின் வாயிலில் குவலையாபீட என்ற மாபெரும் யானை ஒன்று, பணியாளர்களின் கவனிப்பில் நிறுத்தப்பட்டிருந்தது. வழியை வேண்டுமென்றே மறைக்கும் நோக்கத்தில் யானை நிறுத்தப்பட்டிருப்பதை உணர்ந்த கிருஷ்ணர், கர்ஜிக்கும் குரலில், யானையின் காவலரிடம், "கயவனே, வழியை மறித்தால் உன்னையும் உன் யானையையும் யமலோகம் அனுப்புவேன்" என்று கூறினார்.

    கிருஷ்ணரால் அவமதிக்கப்பட்ட காவலன், கோபமடைந்து தன் திட்டப்படி, கிருஷ்ணரை தாக்கும்படி யானைக்கு உத்தரவிட்டான். தவிர்க்க முடியாத மரணத்தை போல யானை கிருஷ்ணரை நோக்கி முன்னேறி, தன் துதிக்கையால் அவரை பிடிக்க முயற்சித்தது. கிருஷ்ணர் சாமர்த்தியமாக யானையின் பின் பக்கம் சென்று தப்பித்து கொண்டார். இதேபோல் யானையின் ஒவொரு தாக்குதல்களுக்கும் கிருஷ்ணர் தப்பிப்பதும் பதில் தாக்குதல் செய்வதுமாக இருந்தார். தம் சிறு வயதில் கன்றுகளின் வாலை பிடித்து இழுத்தது போல யானையின் வாலையும் பிடித்து இப்படியும் அப்படியும் இழுத்தார். யானை மிகவும் அலைக்கழிக்கப்பட்டு கோபமுடன் இருந்தது. பாகன் மேலும் விரட்டியதால் ஆவேசத்துடன் கிருஷ்ணரை நோக்கி பாய்ந்தது. கிருஷ்ணர் யானையின் துதிக்கையை பிடித்து இழுத்து, யானையையும் பாகனையும் கீழே வீழ்த்தினார். பின்பு யானையின் மீது ஏறி தாவி குதித்து யானையையும் பாகனையம் கொன்றார். முனிவர் கூறியபடி யானையின் ஜீவன் ஶ்ரீ கிருஷ்ணரில் கலந்து விட்டது.

    யானையை கொன்ற பிறகு கிருஷ்ணர் அதன் ஒரு தந்தத்தை எடுத்து தோளின் மேல் வைத்து கொண்டார். பலராமர் அதன் மற்றோரு தந்தத்தை எடுத்து தன் தோளின் மீது வைத்துக்கொண்டு. நண்பர்கள் புடை சூழ அவர்கள் மல்யுத்த களத்தினுள் பிரவேசித்தார்கள்.


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண🙏


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.





Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more