பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் மாடுகளை மேய்க்கும் லீலை




பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின்
மாடுகளை மேய்க்கும் லீலை

ஆதாரம் :- ஸ்ரீ கோபால சம்பு

    ஸ்ரீ நந்தர் மாடு மேய்க்க செல்லும் போது ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் அவருடன் செல்வர், காட்டில் நண்பர்களுடன் நாற்புறமும் சுற்றி பசுக்களிடம் விளையாடிய களைப்பில் ஸ்ரீ நந்தரின் மடியில் வந்து அமர்வார்கள், பின்னர் காட்டின் ஒவ்வொரு பொருளைப் பற்றியும் கேட்டு அறிந்து கொள்வார்கள் அந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அவர்கள் பேரின்பத்தை உணர்வார்கள். இதற்கு மேல் போகக்கூடாது என்று எச்சரித்தாலும், தடுத்தாலும், இதற்கு மேல் போகமாட்டேன் என்று கம்பீரமாகக் கூறியபடி இரண்டு, நான்கு ஆறு பசுக்களைக் கூட ஒன்றாக வசப்படுத்தி சூழ்ந்து விளையாடுவார்கள். பிறகு பரஸ்பரம் ஓடி பசுக்களை மேய்த்து, முரட்டு பசு காளைகளின் கொம்பைப் பற்றி அவற்றைத் தடுப்பார்கள். சிலசமயம் தனித்தனியே ஐந்தைந்து பசுக்களைக் கூட வசப்படுத்தி விடுவர். இப்படியே சில நாட்கள் சென்றது.

    ஒரு நாள் நந்த மஹராஜா வனம் செல்ல புறப்பட்டு கொண்டிருந்த சமயத்தில் வ்ரஜேஸ்வரி அன்போடு நந்தரைக் குறை கூறியவாறு, "இவ்விரு பிள்ளைகள் உங்களுடன் காட்டிற்குச் சென்று உங்களுக்காக அபூர்வ காரியத்தையா செய்கிறார்கள்?” என்று கேட்டாள், ஸ்ரீ கிருஷ்ண பலராமர் இதை கேட்டு வெட்கமடைவார்கள், அன்னை யசோதாவும் ரோஹிணியும் பிள்ளைகள் வனம்செல்வதை தடுக்க அன்போடு எதையாவது கூறி தடுக்க முயல்வார்கள். நந்த மஹாராஜாவும் அவர்களை ஏதாவது சொல்லி தடுக்க முயற்சிப்பார். அதனால் ஏமாற்றம் அடைந்த ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் அழலானார்கள். பிள்ளை பாசத்தில் வேறு வழியின்றி நந்த மஹாராஜா மாடுகளை மேய்க்க கூட்டிச் செல்வார். தந்தையுடன் வனம் சென்ற கிருஷ்ணரும் பலராமரும் வ்ரஜத்திற்கு அருகிலேயே உள்ள கிராமத்திற்கு சென்று கன்று மேய்க்கும் பாலகர்களுடன் குதித்து விளையாடுவார்கள்.

    ஸ்ரீ கிருஷ்ண பலராமரின் பல அற்புத காரியங்களை உணர்ந்த விரஜமன்னரும் விரஜேஸ்வரியும் ஆனந்தமடைந்தாலும் அசுரர்களின் தொல்லையால் மனதில் பயம்கொண்டு, “இவர்கள் பசுக்களோடு வனம் செல்லாமல் இருக்க முடியாது அதனால் வ்ரஜத்திற்கு மிகஅருகிலுள்ள இடத்தில் கன்றுகளை மேய்க்கட்டும்" என்று ஆலோசித்து முடிவெடுத்தனர். விரஜராஜர் உறவினர்களுடன் நன்கு ஆலோசித்து ஜோதிட வல்லுனர்களின் மூலம் நல்ல நாளை நிச்சயித்தனர். அன்று ஸ்வஸ்திவாசனம் செய்வித்து ஸ்ரீ கிருஷ்ணரையும் பலராமரையும் கன்றுமேய்க்கும் காரியத்தைத் தொடங்கச் செய்வித்தனர். மற்ற ஆயர்களும் தத்தம் புதல்வர்களை ஸ்ரீ கிருஷ்ண பலராமருடன் கன்று பாலன வேலையைச் செய்விக்கலாயினர். அன்னை யசோதை மற்றும் ரோகிணி, ஸ்ரீ கிருஷ்ண பலராமருக்கு ஆடை அணிவித்து , போஜனம், தடி, பசுகட்டும் கயிறு, குழல், மாட்டுக்கொம்பு முதலியன தரித்து அலங்கரித்தனர். இந்த கோபால ரூபத்தில் மிகுந்த பொலிவுடன் காட்சியளித்தனர்.

    ஸ்ரீ கிருஷ்ணனுக்காக பாதுகை கொண்டுவரப்பட்டதும் அதை வேண்டாம் என்று கூறி மறுத்துவிட்டார். நாம் பசுக்களை பராமரிப்பவர். பசுகள் நமது எஜமானர்கள் நாம் சேவைக்குகந்த பசுக்கள் பாதுகையணியாதபோது சேவகம் புரியும் கோபாலர் பாதுகையணிவது ஆராதனைக்குகந்ததல்ல என்று விளக்கமளித்தார். ஸ்ரீ கிருஷ்ணனின் பாவத்தையும் கருத்தையும் கேட்ட பலராமரும் அவ்வாறே செய்தார். விலங்கினமான பசுக்கள், ஸ்ரீ கிருஷ்ணனின் அந்தச் செயலை அறிந்து அவருக்கு அனுகூலம் செய்வதற்காக தங்களுடைய கூறிய குளம்புகளால் பூமியில் உள்ள கடுமையான சிறு கற்களையும் மண்ணையும் மலரின் தாதுவைப்போல் மென்மை செய்தன. ஸ்ரீ கிருஷ்ணனின் கால்கள் சஞ்சரிக்கும் பூமியை சுகமானதாக்கச் செய்தன. கிருஷ்ணரது கால்கள் சஞ்சாரத்தை அறிந்து விரஜபூமியும் விருந்தா தேவியுடன் சேர்ந்து எல்லா வகையிலும் அனுகூலத்தை அமைத்தது. கதிரவனம் போன்றவை கூட ஸ்ரீ கிருஷ்ணனின் சுக சஞ்சாரத்திற்கு மிக உன்னதமாகி விட்டது. எல்லா இடங்களிலும் ஸ்ரீ கிருஷ்ணனின் திருவடிகமலங்களின் மிக சூஷ்மமான ரேகைகள் அடையாளமிடப்பட்டன. அவற்றைக் கண்டு மக்கள் மகிழ்வெய்தினர்.

    கன்று மேய்ப்பதற்காக அழகிய வெற்றிலைப் பெட்டி, விசித்திரமான குடை, சாமரம், பட்டுப்பாதுகை போன்ற பொருள்களைக் கையில் எடுத்துக்கொண்டு உலகின் மங்களம் வளர்க்கும் தேவரை வெல்லக்கூடிய சேவக கோப்பாலகர்கள் ஸ்ரீ கிருஷ்ணரையும் பலராமரையும் பின் தொடர்ந்த கோபாலகர்கள் இதயத்தில் வர்ணிக்க முடியாத ஆனந்தத்தை உணரலாயினர். அப்போது தாய் தந்தை முதல், புதிய பெண்கள் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் வந்து பெரும் செல்வத்தை அவ்விருபாலகர்களுக்கும் சமர்ப்பித்தனர். இரத்தினங்களாலான விளக்கில் இருவருக்கும் தீபாராதனை செய்தனர். அவர்கள் மீது நன்கு மலர்ந்த நறுமணமலர்களைப் பொழிந்தனர். மங்கள கீதத்தின் மூலம் இருவரின் புகழை கீதமிசைத்தனர். வீட்டு வாசலில் ஸ்ரீ கிருஷ்ணரையும் பலராமரையும் நகர மக்கள் அனைவரும் கண்களை அகல விரித்து அவர்களின் அழகை பருகினர். பின்னர் ஸ்ரீ கிருஷ்ண பலராமர் பெரியவர்கனை வணங்கி பசுக்களோடு, ஆனந்த குதூகலத்தோடு காட்டிற்குச் சென்றனர். இந்த காட்சியை கண்ட ஸ்வர்க லோக வாசிகளான தேவர்களும் ஆனந்தம் மடைந்தார்கள்.

    பீதாம்பரதாரியான (மஞ்சள் நிற ஆடையணிபவரான ) கிருஷ்ணரும் நீலாம்பரதாரியான ( நீல நிற ஆடையணிபவரான) ஸ்ரீ பலராமரும் குழல், தடி தாமரை, ஊதுகுழல், பசுகட்டும் கயிறு, மரப்பதுமை, பந்து முதலியவற்றின் மூலம் விளையாடியவாறு கன்றுகளினிடையே பாலகர்களோடு சோபிக்கலாயினர். பிள்ளை பாசத்தால் பெற்றோர்கள் அவர்களுக்கு பின்னால் சிறிது தூரம் வரை தந்தைக்குச் சமமான வயதான விவாகமாகாத ஆயர்கள் நியமிக்கப் பட்டனர். மேய்ச்சல் நிலத்திற்குச் அவர்களை விட்டு விட்டு தகுந்த அறிவுரைகளை சொல்லி கொடுத்து புண்ணிய சாலியான அந்த பாக்கியவான்கள் திரும்பி வந்தனர். ஸ்ரீ பலராமரும் கிருஷ்ணரும் சிறிது தூரம் சென்று கன்றுகளை ஒன்றாக தங்களது எதிரில் நாற்புறமும் பசுமையான புல்லுடைய இடத்தில் ஒன்று சேர்த்தனர். சாப்பாட்டு நேரம் வரை அங்கு விளையாடினர். அங்கு அவர்கள் குழல் இசைத்தனர். பழம் முதலியவற்றை பறித்து உண்டார்கள். சலங்கை ஒலிக்கும் திருவடிகளை இங்கும் அங்கும் வைத்து சுற்றி வந்தார்கள். காளைகளைப் போல் பரஸ்பரம் சண்டையிட்டனர். சகோதரர்களும் நண்பர்களும் ஒருவர் மற்றவரை வெல்வதற்காக மிகுந்த மகிழ்ச்சியோடு ஒருவர் மற்றவரின் குதிகாலைப் பற்றி மல்யுத்தம் செய்தனர். பிறகு புல்லின் மூலம் கன்றுகளைத் திருப்தி செய்து தண்ணீர் குடிக்கச் செய்து மேற்பார்வையிடலாயினர். ஸ்ரீ கிருஷ்ணர் அவற்றில் ஒன்றின் கழுத்தைச் வருடிக்கொடுத்து தன் இரு கைகளாலும் அதன் கழுத்தைப் பற்றிக் கொண்டு “நீ உன் தாயைக் காண விரும்புகிறாய், நான் உன்னைச் சேர்த்து விடுகிறேன் என்று அதன் காதில் தன் வாயை வைத்து இனிய சொற்களை அமைத்து அதை சந்தோஷமடையச் செய்தார் அதை கண்டு தானும் ஆனந்தமடைந்தார்.

    பிறகு ஸ்ரீ கிருஷ்ண பலராமர் நண்பர்களோடு ஜல சந்தரணி விளையாடலாயினர். அலாதியான காட்டுவேஷத்தில் அலங்கரித்து ஆடியவாறு சுற்றி வந்து நாற்புறமும் அபூர்வமான பல விதமான பக்ஷிகளைக் கண்டு வியப்படையலாயினர். பின் இருவரும் பக்ஷிகளின் மொழியைப் பேச உடனே அந்த இன பக்ஷி அங்கு வந்ததும் அவர்கள் அவற்றிற்கு எதிரான பக்ஷிகளின் ஒலியில் பேசியதால் அது பயந்து பேசுவதை நிறுத்திக்கொண்டது. இப்படி பல விளையாட்டுக்களை விளையாடினர்.

    நடுப்பகலில் உணவை எடுத்துக்கொண்டு அவரவர் வீட்டுப் பணிப்பெண்கள் அங்கு வந்தனர். அவர்களைக் கண்டு நந்தலாலா ஆனந்தமடைந்து, தன் நண்பர்களை மகிழ்வித்தவாறு, குழல் இசைத்து அனைவரையும் அழைத்தார். அனைவரும் வந்து சேர்ந்ததும் மான் விழி பெண்கள் பாலகர்களை மரியாதையுடன் வரிசையாகவும் நடுவில் ஸ்ரீ பலராமரையும் கிருஷ்ணரையும் அமரச் செய்தனர்.

    தாதிப்பெண்கள் உணவு பரிமாறி போஜனம் செய்வித்தனர். அப்போது குதூகலத்திற்காக ஒருவன் ஒரு உணவை நிந்திப்பான். மற்றொருவன் புகழ்வான். அதனால் பாலகர்களோடு பெண்கள் விவாதம் பெருமளவு கோலாகலத்தை உண்டாக்கும். அது முடிந்ததும் ஒரு தாதி கிருஷ்ணரிடம், "நான் மிகவும் முயற்சியோடு பானமும் உணவுப் பொருட்களும் கொண்டுவந்திருக்கிறேன். பலராமரின் தாயார் ரோகிணி மிகவும் சிரமப்பட்டு உங்களுக்காக இவற்றைத் தயாரித்து அனுப்பியுள்ளார். அன்புள்ள கிருஷ்ணா! உனது அன்னை யசோதை இந்தப் பதார்த்தங்கள் அனைத்தும் நீ ருசிப்பதற்காக அன்புடன் செய்து தந்திருக்கிறார். இவை அனைத்தையும் உன்னிடம் கூறி உண்ண வைக்க வேண்டும் என்று பலமுறை எடுத்துரைத்து அனுப்பியுள்ளார். அதனால் எங்கள் மூவருக்காகவும் இவையனைத்தையும் மீதம் வைக்காமல் சாப்பிட்டுவிடு" என்று வேண்டினாள். இவை அனைத்தையும் நீ குதூகலத்தோடு உண்ண வேண்டும். பின்னர் சாப்பாட்டு முடிவில் ஆசமனம் செய்து, பலராமர், ஸ்ரீ தாமா முதலியவர்களுடன் வந்த ஸ்ரீ கிருஷ்ணனுக்கு தாதி கற்பூர ரஸம் நிறைந்த பாக்குப் பொடியுடன், தங்க வண்ண தாம்பூலம் பீடாவை அளித்து “கிருஷ்ணா! உங்கள் தாயின் கட்டளை குழந்தைகள் குரும்பை விட்டுவிட்டு , விரைவில் நீங்கள் விரஜமாளிகையை வந்து சேர வேண்டும் என்றாள்.

    தாதி கன்று மேய்க்கும் சிறுவர்களிடம், "ஏ கன்று மேய்ப்பவர்களே ! நீங்கள் வ்ரஜ மன்னரின் மனைவியின் உயிருக்குயிரான ஸ்ரீ கிருஷ்ணனை சீக்கிரம் வீட்டிற்கு அழைத்து வாருங்கள்” என்று கூறினாள். அந்தப் பெண்கள் சென்றதும் ஸ்ரீ கிருஷ்ண பலராமர் கன்றுகளின் வாயில் மிக மிக மெல்லிய மலர்களுடன் புல்லை அளித்து வ்ரஜத்தை நோக்கி மேய்க்கலானார்கள். நண்பர்கள் பாடல், ஆடல், சிரிப்புடன் விளையாடிக்கொண்டே சென்றனர். ஸ்வர்கவாசிகள், பிராமணர்கள், ரிஷிகள் அனைவரும் வேத வாக்கியங்களால் துதிக்கலாயினர். தேவர்கள் மலர் மாரி பொழிந்தனர். அனைவரும் தத்தம் வீடு செல்லும் வழியில் புறப்பட்டனர்

    ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் நண்பர்களும் கன்றுகளும் முறைப்படி இருப்பிடத்திற்கு சேர்த்தனர். கன்றுகள் தங்களது தாயிடம் சேர்ந்ததும் தன்யராகி அவை நன்றி தெரிவிப்பதை உணர்ந்து ஸ்ரீ கிருஷ்ணன் ஆனந்தமடைந்தார். வ்ரஜவாசிகள் காலையில் மங்களப் பொருட்களால் அவர்கள் அனுப்பி வைத்தது போல் மாலையிலும் மங்களப் பொருட்களால் கௌரவித்து வரவேற்றனர். பிள்ளைகள் அவர்கள் தாய் தந்தையரை வணங்கினர். பெற்றோர்கள் பெரும் ஆனந்தமுற்றனர். தம் வீட்டிற்கு சென்று நீராடிமுடித்து திவ்ய ஆடையணிந்து போஜனம் செய்துவிட்டு பால் கறக்கும் இடத்திற்குச் சென்று கன்றுகளின் தாய்கள் பெயரால் கன்றுகளை அழைத்தனர். கன்றுகள் வேகமாக ஓடியதால் ஏற்பட்ட தடைகளைக் கண்டு மகிழ்ந்தனர். பெருமளவு பால் கறந்து சேவகர் மூலம் வீட்டிற்கு அனுப்பச் செய்தனர். மறுபடி வீட்டிற்கு வந்து அன்னையை ஆனந்திக்கச் செய்த பின் அவரிடம் அனுமதி பெற்று ஓய்வெடுப்பதற்காக மாளிகையின் மேல் பகுதியான சந்திரசாலிகாவிற்குச் சென்று அனைவரின் மீதும் மிகுந்த மகிழ்ச்சியைப் பொழிந்தனர். ஸ்ரீ ரோஹிணி பலராமரையும், ஸ்ரீ யசோதா, ஸ்ரீ கிருஷ்ணரையும் உறங்கச் செய்தனர்.



🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண🙏


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.





Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more