🌿💦🌿💦🌿💦🌿💦
எல்லையற்ற மெய்ப்பொருளான பகவான், மனோதத்துவக் கற்பனையால் முதலில் அருவ பிரம்மமாக உணரப்படுகிறார். ஆனால் பகவானின் கருணையால், அருவவாதி ஒருவனுக்கு ஸ்ரீமத் பாகவதத்தைப் பற்றிய உயர்ந்த தத்துவங்களில் ஞான ஒளியூட்டப்படக்கூடும். அப்போது முழுமுதற் கடவுளாகிய ஸ்ரீகிருஷ்ணரின் சிறந்த பக்தனாக அவன் மாற்றப்படுவான். பூரண மெய்ப்பொருளின் குறிப்பிடத்தக்க தோற்றத்தை நம்மால் ஏற்க முடியவில்லை. இதற்கு அறிவு பற்றாக்குறையே காரணம். அத்துடன் புத்தியில் தாழ்ந்தவர்களான அருவவாதிகள் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் சொந்த நடவடிக்கைகளை வருந்தத்தக்க வகையில் உருமாற்றி விடுகின்றனர். ஆனால் பரிபூரண மெய்ப்பொருளை அணுகக் கூடிய உன்னத முறையுடன் தர்க்கமும், நியாயமும் இணையும்போது, உறுதியான அருவவாதியும் கூட பகவானின் தெய்வீகச் செயல்களால் கவரப்படுவதற்கு அது உதவுகிறது. சுகதேவ கோஸ்வாமியைப் போன்றவர்கள் பௌதிக செயல்களால் கவரப்படுவதில்லை. ஆனால் அத்தகையவர்கள் உயர்வான ஒரு வழிமுறையில் நம்பிக்கையைப் பெறும் பொழுது, பகவானின் தெய்வீகச் செயல்களால் உறுதியாகக் கவரப்படுகின்றனர். பகவானைப் போலவே அவரது செயல்களும் உன்னதமானவையாகும். அவர் செயலற்றவரோ அல்லது அருவமானவரோ அல்ல
( ஶ்ரீமத் பாகவதம் 2.1.9 / பொருளுரை - ஶ்ரீல பிரபுபாதர்)
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
Comments
Post a Comment