அர்ஜுனனின் பிரார்த்தனை




 

ஸ்ரீமத்-பாகவதம்

காண்டம் 1 / அத்தியாயம் 7 / பதம் 22- 25

*************************************************************************

பதம் 22

அர்ஜுன உவாச

க்ருஷ்ண க்ருஷ்ண மஹா-பாஹோ பக்தானாம் அபயங்கர
த்வம் ஏகோ தஹ்யமானானம் அபவர்கோஸி ஸம்ஸருதே:

மொழிபெயர்ப்பு

அர்ஜுனன் கூறினார்: எம்பெருமானே ஸ்ரீ கிருஷ்ணா, தாங்கள் சர்வ வல்லமையுடைய பரம புருஷ பகவானாவீர். தங்களுடைய பல்வேறு சக்திகளுக்கு எல்லையே இல்லை. ஆகவே தாங்கள் ஒருவர்தான் உங்களுடைய பக்தர்களின் இதயங்களுக்கு அபயமளிக்கும் திறமை பெற்றவராவீர். பௌதிக துன்பமெனும் தீயில் கருகிக் கொண்டிருக்கும் அனைவரும் உங்களிடம் மட்டுமே முக்திக்கான வழியைக் காணமுடியும்.

 

பதம் 23

த்வம் ஆத்ய: புருஷ: ஸாக்ஷாத் ஈஸ்வர: ப்ருக்ருதே:பர:
மாயாம் வ்யுதஸ்ய சிச்-சக்த்யா கைவல்யே ஸ்தித ஆத்மனி

 

மொழிபெயர்ப்பு

தாங்களே மூல முழுமுதற் கடவுளாவீர். தாங்கள் சிருஷ்டி முழுவதிலும் விரிவடைந்திருப்பவரும், பௌதிக சக்திக்கு மேற்பட்டவருமாவீர். உங்களுடைய ஆன்மீக சக்தியின் பலத்தினால் பௌதிக சக்தியின் விளைவுகளை நீங்கள் விலக்கி விடுகிறீர்கள். நீங்கள் எப்பொழுதும் நித்திய ஆனந்தத்திலும், உன்னத அறிவிலும் நிலை பெற்று இருக்கிறீர்கள்.

 

பதம் 24

ஏவ ஜீவ-லோகஸ்ய மாயா-மோஹித-சேதஸ:
விதத்ஸே ஸ்வேன வீர்யேண ஸ்ரேயோ தர்மாதி-க்ஷணம்

 

மொழிபெயர்ப்பு

தாங்கள் பௌதிக சக்திக்கு அப்பாற்பட்ட நிலையில் இருந்தபோதிலும், பந்தப்பட்ட ஆத்மாக்களின் முடிவான நன்மைக்காக, மதம் முதலான முக்திக்கான நான்கு கொள்கைகளை செயற்படுத்துகிறீர்கள்.

 

பதம் 25

ததாயம் சாவதாரஸ் தே புவோ பார ஜிஹீர்ஷயா
ஸ்வானாம் சானன்ய-பாவானாம் அனுத்யானாய சாஸக்ருத

 

மொழிபெயர்ப்பு

இவ்வாறாக, உலகின் பாரத்தை நீக்குவதற்காகவும், முக்கியமாக உங்கள் மீது ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டிருப்பவர்களும், உங்களது நண்பர்களும், உங்களுக்கே சொந்தமானவர்களுமான உங்களுடைய பக்தர்களின் நன்மைக்காகவுமே நீங்கள் இவ்வுலகில் அவதரிக்கிறீர்கள்.

Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more