கோகுலத்தில் ஆயர்குலச் சிறுவர்களுக்குத் தரப்படும் முதல் பொறுப்பு கன்றுகளைப் பராமரித்தல், குழந்தைப் பருவத்திலிருந்தே சிறுவர்களுக்கு இதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது. எனவே கிருஷ்ணரும் பலராமரும் மற்ற ஆயர்குலச் சிறுவர்களுடன் மேய்ச்சல் நிலங்களில் கன்றுகளைக் கவனித்தபடி விளையாடினார்கள். கன்றுகளைப் பொறுப்பேற்று அழைத்துச் செல்லும் போது சகோதரர்களான கிருஷ்ணரும் பலராமரும் சில வேளைகளில் புல்லாங்குழலை இசைத்தார்கள். சில வேளைகளில் அவர்கள் ஆமலகீப் பழங்களையும் பலாப்பழங்களையும் எடுத்துப் பந்தாடினார்கள். சில சமயங்களில் அவர்கள் கால் சலங்கைகள் ஒலிக்க நர்த்தனம் செய்தனர். சில வேளைகளில் அவர்கள் கம்பளங்களால் தங்களை மூடிக்கொண்டு எருதுகள் போலவும் பசுக்கள் போலவும் பாவனை செய்து விளையாடினர். பலராமரும் கிருஷ்ணரும் இப்படி விளையாடினார்கள். பசுக்களையும் எருதுகளையும் போல் உருமிக் கொண்டு சண்டை போடுவார்கள். இப்படியாக அவர்கள் சாதாரணக் குழந்தைகளைப் போல் குழந்தைத்தனமான விளையாட்டுக்களில் ஈடுபட்டிருந்தனர்.
ஒருநாள், கிருஷ்ணரும் பலராமரும் யமுனை நதிக்கரையில் விளையாடிக் கொண்டிருந்தபோது வத்ஸாசுரன் என்ற பெயருடைய அரக்கன் ஒரு கன்றின் வடிவை மேற்கொண்டு இரு குழந்தைகளையும் கொல்லும் நோக்கத்துடன் அங்கு வந்தான். கன்றின் வடிவத்தை எடுத்திருந்ததால் அவன் மற்றக் கன்றுகளுடன் சேர்ந்து கொள்ள முடிந்தது. ஆனால் கிருஷ்ணர் இதைக் கவனித்துவிட்டார். உடனே அவர் அரக்கன் வந்திருப்பதை பலராமருக்குத் தெரிவித்தார். பின்னர் இரு சகோதரர்களும் ஓசைப்படாமல் அரக்கனை அணுகினார்கள். கிருஷ்ணர் அரக்கனான கன்றின் இரு பின்னங்கால்களையும் வாலையும் பிடித்துச் சுழற்றி அடித்து ஒரு மரத்தின் மேல் வீசி எறிந்தார். அரக்கன் உயிரிழந்து மரத்தின் உச்சியிலிருந்து தரையில் விழுந்தான். அரக்கன் தரையில் இறந்து கிடந்ததைக் கண்ட தோழச் சிறுவர்கள் கிருஷ்ணரைப் பாராட்டினார்கள். தேவர்கள் மனமகிழ்ந்து ஆகாயத்திலிருந்து மலர் மாரி பொழிந்தனர். இவ்வாறு, பிரபஞ்சப் படைப்பின் பாதுகாவலர்களான கிருஷ்ணரும் பலராமரும் ஒவ்வொரு நாட்காலையிலும் கன்றுகளை அழைத்துச் சென்று, விருந்தாவனத்தின் இடைச்சிறுவர்களாக, பால்ய லீலைகளில் களித்திருந்தார்கள்.
வத்ஸாசுரனை நம் இதயத்தில் குடி கொண்டிருக்கும் தீய செயல்களுக்கும் குழந்தைத்தனமான பேராசைக்கும் ஸ்ரீல பக்திவினோத தாகூர் ஒப்பிடுகிறார். தீய செயல்களின் தன்மை இதயத்திலிருந்து நீங்கி அப்பாவித்தனம் குடி கொண்டால் மட்டுமே நாம் ஆன்மீகப் பாதையில் முன்னேற முடியும்.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண🙏
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
வத்ஸாசுரனை நம் இதயத்தில் குடி கொண்டிருக்கும் தீய செயல்களுக்கும் குழந்தைத்தனமான பேராசைக்கும் ஸ்ரீல பக்திவினோத தாகூர் ஒப்பிடுகிறார். தீய செயல்களின் தன்மை இதயத்திலிருந்து நீங்கி அப்பாவித்தனம் குடி கொண்டால் மட்டுமே நாம் ஆன்மீகப் பாதையில் முன்னேற முடியும்.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண🙏
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment