கௌர ஆரதி


 

கௌர ஆரதி

அருளியவர் - பக்தி வினோத தாகூர்

*********************************************************************

(1)

(கிப) ஜய ஜய கோராசாந்தேர் ஆரதிகோ ஷோபா

ஜாஹ்னவீ-தட-வனே ஜக-மன-லோபா

மொழிபெயர்ப்பு

சந்திரனை போன்ற ஶ்ரீ சைதன்ய மகா பிரபுவின் அழகிய ஆரத்தி நிகழ்ச்சிக்கு அனைத்து மங்களமும் உண்டாகட்டும், இந்த கெளர ஆரத்தி யானது கங்கை கரையில் உள்ள வனத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஜீவன்களின் உள்ளங்களையும் இந்த ஆரத்தி யானது கவர்ந்து இழுக்கிறது


(2)

தக்ஷிணே நிதாஇசாந் பாமே கதாதர

நிகடே அத்வைத ஸ்ரீநிவாஸ சத்ர-தர

மொழிபெயர்ப்பு

ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவின் வலது புறம் நித்தியானந்த பிரபுவும், இடது புறம் ஸ்ரீ கதாதரரும் இருக்கின்றனர். அருகில் அத்வைதரும், ஸ்ரீ வாச தாகூரரும் சைதன்ய மகாபிரவிற்கு குடை பிடித்தபடி நிற்கின்றனர்.

 

(3)

பஸியாசே கோராசாந் ரத்ன-ஸிம்ம்ஹாஸனே

ஆரதி கரேன பிரஹ்மா-ஆதி தேவ-கணே

மொழிபெயர்ப்பு

நவரத்தின சிம்மாசனத்தில் சைதன்ய மகாபிரபு அமர்ந்திருக்க பிரம்ம தேவரின் தலைமையில் அனைத்து தேவர்களும் ஆரத்தி செய்கிறார்கள்.

 

(4)

நரஹரி-ஆதி கரி சாமர துலாய

ஸஞ்ஜய-முகுந்த-வாஸு-கோஷ்-ஆதி காய

மொழிபெயர்ப்பு

நரஹரி மற்றும் ஶ்ரீ சைதன்ய மகாபிரபுவின் மற்ற தோழர்கள் சாமரம் வீச, சஞ்ஜய பண்டிதர், முகுந்த தத்தர், வாஸு கோஷ் ஆகியோர் தலைமையில் பக்தர்கள் அனைவரும் இனிமையாக கீர்த்தனையை பாடுகிறார்கள்.

 

(5)

ஷங்க பாஜே கண்டா பாஜே பாஜே கரதால

மதுர ம்ரிதங்க பாஜே பரம ரஸால

மொழிபெயர்ப்பு

சங்குகள், மணிகள், கரதாளங்கள் இவைகளின் ஓசையுடன், மிருதங்கம் மிக இனிமையாக வாசிக்கப்படுகிறது, இந்த கீர்த்தனை மிக உயர்ந்த இனிமையையும், கேட்பதற்கு ஆனந்தத்தையும் உண்டு பண்ணுகிறது. 

 

(6)

பஹு-கோடி சந்த்ர ஜினி வதன உஜ்ஜ்வல

கல-தேஷே வன-மாலா கரே ஜலமல

மொழிபெயர்ப்பு

ஶ்ரீ சைதன்ய மகாபிரபுவின் முக தேஜஸானது கோடிக்கணக்கான சந்திரர்களை வெல்லக் கூடியதாக இருக்கிறது.  அவர் அணிந்திருக்கும் காட்டு புஷ்பங்கள் அவரது கழுத்தை சுற்றி  ஜொலிக்கின்றன.

 

 

(7)

ஷிவ-ஷுக-நாரத ப்ரேமே கத-கத

பகதிவினோத தேகே கோரார ஸம்பத

மொழிபெயர்ப்பு

சிவபெருமான், சுகதேவ கோஸ்வாமி மற்றும் நாரத முனிவர் அனைவரும் அங்கு கூடியுள்ளனர், அவர்கள் குரல் தழுதழுக்க தெய்வீக பேரானந்தத்தில் திழைக்கிறார்கள். இவ்வாறு பக்தி வினோத தாகூரர் பகவான் ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவின் பெருமைகளை மனக்கண்ணால் காண்கிறார்.

Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more