பகவான் பலராமரும், பகவான் கிருஷ்ணரும் தமது பௌகண்ட வயதினை (ஆறிலிருந்து பத்து வயது வரை உள்ள பருவம்) அடைந்த பொழுது, நந்த மகாராஜாவின் தலைமையின் கீழுள்ள ஆயர்குலப் பெரியவர்கள், கிருஷ்ணரும் பிற ஆயர்குலச் சிறுவர்களைப் போல் பசுக்களை மேய்க்கலாம் என்று முடிவு செய்தனர். விருந்தாவனத்தில் உள்ள ஆயர்குலப் பெரியோர்கள், இவர்கள் இருவரையும், பசுக்களை மேய்ப்பதற்கு பல யோசனைகளுக்கு பின் அனுமதியளித்தனர். பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அது நாள் வரை கன்றுகளை மட்டுமே கவனிக்கும் பொறுப்பில் இருந்தவர், இந்த கேபாஷ்டமி நன்நாளில் பசுக்களையும், காளைகளையும் கன்றுகளையும் பாதுகாக்கும் பொறுப்பிற்குரியவராகி விட்டார். இந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாட தீர்மானித் ஏற்பாடுகள் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் பெரும்பாலும் ஆண்களும், ஆண் பிள்ளைகளும் பங்கு கொள்வார்கள்.
ஸ்ரீமதி ராதாராணி மற்றும் அவரது நண்பர்களான இதர கோபியர்களும் இந்த லீலைகளில் பங்கெடுத்து பகவான் ஶ்ரீ கிருஷ்ணருடன் இந்த நிகழ்ச்சிகளை ரசிக்க விரும்பினர். ஸ்ரீமதி ராதாராணிக்கும் சுபலாவிற்கும் உருவ ஒற்றுமை இருந்ததால் அவர் சுபலாவின் வேஷ்டி மற்றும் இதர ஆடைகளை அணிந்துகொண்டு கிருஷ்ணரின் அந்த லீலையில் இணைந்தார். மற்ற கோபியர்களும் சேர்ந்து கொண்டனர்.
கோபாஷ்டமி திருநாளில் பக்தர்கள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் இந்த இனிமையான லீலைகளை நினைத்து மகிழ்கின்றனர்.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க
https://t.me/suddhabhaktitamil
ஆன்மீக கதைகளை படிக்க 👇
உத்வேக கதைகள் https://t.me/udvegakathaigal
Comments
Post a Comment