🍁🍁🍁🍁🍁🍁
பகிரங்க (புற) சக்தியின் ஜடக் குணங்களில் சிக்கிக் கொண்டுள்ளவர்கள் மட்டுமே வெவ்வேறு வகையான ஜட இன்பங்களால் அடிமைப்படுத்தப் பட்டுள்ளனர். அதாவது,ஆன்மீகிக்கு பௌதிக ஆசைகள் கிடையாது. ஆனால் உலகாயதவாதியோ எல்லா வகையான ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்ள விரும்புகிறான். மேலே குறிப்பிடப்பட்டுள்ளது போல், பௌதிக இன்பத்திற்கு ஆசைப்பட்டு வெவ்வேறு தேவர்களின் உதவியை நாடும் உலகாயதவாதிகளின் புலன்கள் அவர்களின் கட்டுப்பாட்டில் இல்லாததால், தங்களை அபத்தங்களுக்கு அர்ப்பணித்து விடுகின்றனர். ஒருவன் பரமபுருஷ பகவானை வழிபடுவதற்குப் போதுமான அறிவு படைத்தவனாக இருந்தால், எவ்விதமான ஜட இன்பத்தையும் அவன் விரும்பக்கூடாது. புத்தியற்றவர்களின் தலைவர்கள் இன்னும் அதிக புத்தியற்றவர்களாக இருக்கின்றனர். ஏனெனில் எந்த தேவரை ஒருவன் வழிபட்டாலும் அதன் பலன் ஒன்றுதான் என்று அவர்கள் வெளிப்படையாகவும், முட்டாள்தனமாகவும் பிரச்சாரம் செய்கின்றனர். இதைப் போன்ற பிரச்சாரம் பகவத் கீதை அல்லது ஸ்ரீமத் பாகவதத்தின் போதனைகளுக்கு எதிரானது மட்டுமல்லாமல், முட்டாள்தனமானதும் ஆகும். இது எந்த பிரயாணச் சீட்டை வாங்கினாலும் ஒரே இலக்கை அடைய முடியும் என்று முட்டாள்தனமாக உரிமை கொண்டாடுவதைப் போன்றதாகும். பரோடாவிற்குச் செல்லும் பிரயாணச் சீட்டை வாங்குவதால், பம்பாயிலிருந்து டெல்லியை ஒருவரும் சென்றடைய முடியாது. பல்வேறு ஆசைகளால் நிரப்பப்பட்டு உள்ளவர்களுக்கு பல்வேறு குணங்களிலுள்ள வழிபாடுகள் உள்ளன என்று இங்கு தெளிவாக வரையறுக்கப் பட்டுள்ளது. ஆனால் ஜட இன்பத்தில் ஆசை இல்லாதவன் பரமபுருஷரும், முழுமுதற் கடவுளுமாகிய ஸ்ரீகிருஷ்ணரை வழிபட வேண்டும். இத்தகைய வழிபாட்டு முறை பக்தித் தொண்டு என்று அழைக்கப்படுகிறது. தூய பக்தித்தொண்டு என்பது, பலன் நோக்குச் செயல், மனோதத்துக் கற்பனை மற்றும் பௌதிக ஆசைகள் ஆகியவை அறவே இல்லாமல் பகவானுக்குத் தொண்டு செய்வதாகும்.
( ஶ்ரீமத் பாகவதம் 2.3.9/ பொருளுரை )
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
Comments
Post a Comment