🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
தாமோதர மாதத்தின் கடைசி ஐந்து நாட்களை பீஷ்ம பஞ்சகம் அல்லது விஷ்ணு பஞ்சகம் என்று அழைக்கப்படும். பிதாமகர் பீஷ்மர் கார்த்திகை மாதத்தில் கடைசி ஐந்து நாட்கள் தூய கிருஷ்ண உணர்வில் மிகவும் கடுமையான இந்த விரதத்தை மேற்கொண்டு. பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தூய பக்தி தொண்டில் ஈடுபட , தனது முழு கவனத்தை பகவான் ஶ்ரீ கிருஷ்ணரில் மூழ்க செய்தார்.
பீஷ்ம பஞ்சகம், சதுர்மாஸத்தில் வரும் கடைசி ஐந்து நாட்கள் அதாவது உத்தான ஏகாதசி முதல் பௌர்ணமி வரை அனுஷ்டிக்க படுகிறது. இந்த நாட்களில் விரதம் இருப்பவர்களுக்கு மிகவும் விரைவில் ஆன்மிக பலன்களடைவார்கள். அதுமட்டுமின்றி ஆன்மிக சேவைகளில் வரும் தடைகள் நீங்கி விரைவில் முன்னேற இந்த விரதம் உதவும்.
விரத முறைகள்
🍁🍁🍁🍁🍁🍁
ஒரு பக்தருக்கு சாதிக்கும் என்றால் பரம புருஷ பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை ப்ரீத்தி படுத்த சில பட்சணம் பதார்த்தங்கள் தவிர்த்து உபவாசம் அனுஷ்டிக்க முடியும் என்று ஹரி பக்தி விலாசம் என்னும் கிரந்தத்தில் கூறப்பட்டுள்ளது. இருந்தாலும் இது நிர்ப்பந்தம் அல்ல அவரவர் சௌகரியத்தை பொருத்தது.
🍁🍁🍁🍁🍁🍁🍁
முதல் நிலை
🍁🍁🍁🍁🍁🍁
பீஷ்ம பஞ்சகம் நாட்களில் பல பக்தர்கள் முழுமையான விரதம் இருப்பார்கள் அதாவது நிர்ஜலம் -நீர் கூட அருந்தாமல் விரதம் இருப்பார்கள். (இது ஒருவருடைய உடல் நிலை பொருத்து கடைபிடிக்க வேண்டும்)
அல்லது , இந்த ஐந்து நாட்களில் ஒவ்வொரு நாள் ஒரு முறை ஒரு சிறிய தேக்கரண்டி( ஸ்பூன்) அளவிற்கு பஞ்ச கவ்யத்தில் ஏதாவது ஒன்றை குடிக்கலாம் வேறு எதையும் உண்ணக்கூடாது
🌷முதல் நாள் : பசும் சாணம் உண்ணலாம்
🌷இரண்டாவது நாள் : பசும் கோமியம் அருந்தலாம்
🌷மூன்றாவது நாள் : பசும் பால் அருந்தலாம்
🌷நான்காவது நாள் : பசும் தயிர் உண்ணலாம்
🌷ஐந்தாவது நாள் : பஞ்ச கவ்யம் (சாணம், பால், கோமியம், தயிருடன் நெய்யும் சேர்த்து உண்ணலாம் )
இரண்டாவது நிலை
🍁🍁🍁🍁🍁🍁
முதல் நிலை விரதம் அனுஷ்டிக்க முடியாதவர்கள் .இந்த ஐந்து நாட்களில் பழங்களும்( கொய்யா பழம், மாதுளம் பழம் போன்ற நிறைய விதை உள்ள பழங்களை தவிர்தல் நல்லது) பேரிச்சம் பழம், உலர்ந்த திராட்சை போன்றவை எடுத்து கொள்ளலாம். வாழைக்காய் , கிழங்கு வகைகளும் வேகவைத்து பகவான் ஶ்ரீ கிருஷ்ணருக்கு நைவேத்தியம் செய்து பின் அந்த மகா பிரசாதத்தை உண்டு விரதத்தை கடைபிக்கலாம்.
ஐந்து நாட்களுக்கு தினமும் கீழ்க்கண்ட மலர்கள் மற்றும் வாசனை திரவியம் அர்பணிக்க வேண்டும்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🌷முதல் நாள் : தாமரைப் பூ
( பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திருவடியில் தாமரை பூவை சமர்ப்பிக்க வேண்டும் )
🌷இரண்டு நாள் : வில்வ இலை
(பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திரு-தொடையில் வில்வ இலை சமர்ப்பிக்க வேண்டும்)
🌷மூன்றாம் நாள்: வாசனை திரவியம்
(பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் நாபிகமலத்தில் வாசனை திரவியதை அர்ப்பணிக்க வேண்டும்
🌷நான்காம் நாள் : செம்பருத்தி பூ
( பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திருத் தோளில் செம்பருத்தி பூவை சமர்ப்பிக்க வேண்டும் )
🌷ஐந்தாம் நாள் : மாலதி மலர்
( பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சிரசில் கொடிமல்லிகை அல்லது பிச்சிப்பூவை சமர்ப்பிக்க வேண்டும்.)
தினமும் ஒருவர் கங்கையிலோ அல்லது மற்ற புனித நதிகளிலோ நீராட வேண்டும். மேலும் பின்வரும் மந்திரத்தைக கூறி பீஷ்மருக்கு மூன்று முறை தர்பணம் வழங்க வேண்டும்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
தர்பணம்
ஓம் வையாஹ்ர பத்ய கோத்ராய
ஸம்க்ரருதி ப்ரவராய ச
அபுத்ராய ததாம்யேதத்
ஸலீலம். பீஷ்மவர்மணே
அரஹ்க்ய
வாஸுநாமாவதாராய
ஸாந்தநோரத்மஜாய ச
அர்ஹ்க்யம் ததாமி பீஷ்மாய
அஜன்ம ப்ரஹ்மசாரிணே
ப்ரணாம்
ஓம் பீஷ்ம: ஸந்தானவோ பீர:
ஸத்யவதி ஜிதேந்த்ரிய:
அபிரத்பிரவப்னாது
புத்ரபௌத்ரோசிதம் க்ரியம்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
ஹரே கிருஷ்ண🙏
ReplyDelete