🌼🌼🌼🌼🌼🌼🌼
ஆயர்குலச் சிறுவர்களெல்லாம் தினமும் கன்றுகளுக்குத் தண்ணீர் காட்டுவதற்காக அவைகளை யமுனை நதிக்கரைக்கு அழைத்துச் செல்வது வழக்கம். கன்றுகள் யமுனை நதியில் தண்ணீர் குடித்தபோது சிறுவர்களும் நீர் அருந்தினார்கள். அவ்வாறு ஒருநாள் நீர் அருந்திவிட்டு நதிக்கரையில் அவர்கள் அமர்ந்திருந்தபோது, உருவத்தில் வாத்தைப் போலவும் ஆனால் மலைபோல் பெரியதுமான ஒரு மிருகத்தைக் கண்டார்கள். அதன் அசாதாரண வடிவத்தைக் கண்டு அவர்கள் இருவரும் பயந்து போனார்கள். கம்சனின் நண்பனான அம்மிருகத்தின் பெயர்
பகாசுரன், அவன் திடீரென்று கிருஷ்ணரைத் தன் கூரிய அலகுகளினால் தாக்கி வேகமாக விழுங்கினான். கிருஷ்ணரை அரக்கன் விழுங்குவதைக் கண்ட பலராமரும் அவரின் தோழர்களும் மூச்சற்றுப் போனார்கள். ஆனால் பகாசுர அரக்கன் கிருஷ்ணரை விழுங்கியபோது தொண்டையில் ஏதோ எரிவதுபோல் உணர்ந்தான். கிருஷ்ணரின் ஒளிமிகு சக்தியின் காரணமாக உடனே அரக்கன் கிருஷ்ணரை வெளியில் எறிந்துவிட்டுத் தன் கூரிய அலகுகளால் குத்திக் கொல்ல முயன்றான்.
கிருஷ்ணர் நந்த மகாராஜாவின் குழந்தையாக நடித்தாலும் அவர்
பிரபஞ்சத்தின் சிருஷ்டி கர்த்தாவான பிரம்மனின் தந்தையான முழுமுதற் கடவுள் என்பதை பகாசுரன் அறியான். அன்னை யசோதையின் குழந்தை, தேவர்களின் மகிழ்ச்சிக்கான பெட்டகம். சாதுக்களின் காவலர், அந்த
மாபெரும் பறவையின் அலகுகளை பிடித்து, ஒரு குழந்தை புல்லைப் பிளப்பதுபோல், எளிதாக, தன்
கோபால நண்பர்களின் முன்னர், அரக்கனின் வாயைப் பிளந்தார். ஆகாயத்திலிருந்து சுவர்க்கவாசிகளான கந்தர்வர்கள் சமேலி
போன்ற நறுமண மலர்களைத் தூவி,
குழந்தை கிருஷ்ணரைப் பாராட்டினார்கள். மலர்
மாரியுடன் தாரைகளும் தப்பட்டைகளும், சங்கங்களும் ஒலித்தன.
மலர் மாரி
பொழிவதைக் கண்டும்
சுவர்க்கலோக இசையைக்
கேட்டும் சிறுவர்கள்
ஆச்சரியமடைந்தார்கள். கிருஷ்ணரைக்
கண்டதும் பலராமர்
உட்பட சிறுவர்கள்
எல்லோரும் புத்துயிர்
பெற்றதுபோல் மகிழ்ச்சியடைந்தார்கள்.
கிருஷ்ணர் தங்களை
நோக்கி வருவதைக்
கண்டதும் ஒருவர்
பின் ஒருவராய்
நந்தகுமாரனைக் கட்டிப்
பிடித்துத் தழுவிக்
கொண்டார்கள். பின்னர்,
கன்றுகளையெல்லாம் ஓரிடத்தில்
சேகரித்துக் கொண்டு
வீட்டிற்குத் திரும்பினார்கள்.
வீட்டிற்கு வந்தபின்
சிறுவர்களெல்லாரும் நந்தகுமாரனின்
அதிசயச் செயல்களைப்
பற்றி பேசினார்கள்.
நடந்த சம்பவத்தைப்
பற்றி சிறுவர்கள்
கூறியதைக் கேட்ட
கோபியரும் கோபாலர்களும்
கிருஷ்ணரிடம் தாம்
கொண்டிருந்த அன்பின்
காரணமாக மிகுந்த
மகிழ்ச்சியடைந்தார்கள். அவரின்
மகிமைகளையும் அற்புத
செயல்களையும் பற்றிக்
கேள்விப்பட்டபோது அவரிடம்
அவர்கள் கொண்டிருந்த
அன்பு பன்மடங்கு
அதிகரித்தது.
*********
பகாசுரனை நம் இதயத்தில் குடி கொண்டிருக்கும் கபடத்தனம் மற்றும் சூழ்ச்சிக்கு பக்திவினோத தாகூர் தனது சைதன்ய சிக்ஷாமிருதத்தில் ஒப்பிடுகிறார்.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண🙏
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment