மச்ச அவதாரம்


 மச்ச அவதாரம்

வழங்கியவர் :- ஶ்ரீல பிரபுபாதர்

🍁🍁🍁🍁🍁🍁🍁


    பரமபுருஷ பகவான் தம்மை ‘ஸ்வாம்சம்’ எனப்படும் (அவரது சுய அம்சங்களாகவும்), ‘விபின்னாம்சம்’ எனப்படும் (ஜீவராசிகளாகவும்) விரிவடையச் செய்கிறார். பகவத் கீதையில் (4.8) கூறப்படுவதைப் போல், ‘பரித்ராணாய ஸாதூனாம் வினாசாய ச துஷ்க்ருதாம்:’ பரமபுருஷ பகவான், சாதுக்கள், அல்லது பக்தர்களைக் காக்கவும், துஷ்டர்கள், அல்லது அசுரர்களை அழிக்கவும் இவ்வுலகில் தோன்றுகிறார். குறிப்பாக பசுக்களுக்கும், பிராமணர்களுக்கும், தேவர்களுக்கும், பக்தர்களுக்கும் மற்றும் வேத முறைப்படியுள்ள மதத்திற்கும் பாதுகாப்பு அளிப்பதற்காகவே அவர் அவதரிக்கிறார். இவ்வாறாக சிலசமயங்களில் ஒரு மீனாகவும், சிலசமயங்களில் ஒரு பன்றியாகவும், சிலசமயங்களில் நரசிம்ஹ தேவராகவும், சிலசமயங்களில் வாமன தேவராகவும், இன்னும் பல்வேறு உருவங்களில் அவர் தோன்றுகிறார். ஆனால் எத்தகைய உருவத்தில் அல்லது அவதாரத்தில் அவர் மூன்று இயற்கைக் குணங்களைக் கொண்ட இச்சூழ்நிலைகளின் வந்தாலும், அவர் பாதிப்படைவதில்லை. இது அவரது தெய்வீகமான ஆளும் சக்திக்குரிய ஒரூ அடையாளமாகும். அவர் பௌதிக சூழ்நிலைக்குள் வந்த போதிலும், மாயையால் அவரைத் தொடமுடியாது. ஆகவே, எந்த பௌதிக குணங்களையும் எந்த அளவிலும் அவர் மீது சுமத்த முடியாது.


    ஒருமுறை, முந்திய கல்பத்தின் முடிவில், ஹயக்ரீவன் எனும் அசுரனொருவன் பிரளய காலத்தின்போது பிரம்ம தேவரிடமிருந்து வேத அறிவை பறித்துக்கொள்ள விரும்பினான். ஆகவே சுயம்புவ மனுவின் ஆட்சிக்காலத்தின் துவக்கத்தில் பரமபுருஷ பகவான் ஒரு மீனின் அவதாரத்தை ஏற்று வேதங்களைக் காப்பற்றினார். சாக்ஷுஷ மனுவின் ஆட்சிக்காலத்தில் சத்தியவிரதன் எனும் பெயர் கொண்ட ஓரரசன் இருந்தார். அவர் மிகச்சிறந்த ஒரு பக்திமானாக இருந்தார். அவரைக் காப்பாற்றுவதற்காக பகவான் இரண்டாவது முறையாக மீன் அவதாரமாகத் தோன்றினார். பிற்காலத்தில் சத்தியவிரத மகாராஜன் சூரியதேவனின் மகனாகப் பிறந்து ஸ்ராத்ததேவன் என்று அழைக்கப்பட்டார். பரமபுருஷ பகவானால் அவர் மனுவின் பதவியில் அமர்த்தப்பட்டார்.


    பரமபுருஷ பகவானின் ஆதரவைப் பெற விரும்பிய சத்தியவிரத மகாராஜன், உயிர் வாழ்வதற்கு நீரை மட்டுமே பருகி தவமியற்றினார். ஒருமுறை, கிருதமாலா நதிக்கரையில் இத்தவத்தை அவர் செய்து கொண்டி இருக்கும்போது, நீரை தர்ப்பணம் செய்வதற்காக அதை உள்ளங்கைகளால் அள்ளி எடுத்தார். அப்போது உள்ளங்கை நீரில் ஒரு சிறிய மீன் இருப்பதைக் கண்டார். அந்த மீன் தன்னை பாதுகாப்பான ஓரிடத்தில் வைத்துக் காப்பாற்றுமாறு அரசரை வேண்டிக் கொண்டது. பரமபுருஷரே மீன் வடிவில் தோன்றியிருப்பதை அரசன் அறியவில்லை என்றாலும், அரசன் என்ற முறையில் அவர் மீனுக்கு புகலிடம் கொடுத்து, அதை ஒரு நீர் ஜாடிக்குள் விட்டார். பரமபுருஷரான அந்த மீன் சத்தியவிரத மகாராஜனுக்குத் தமது சக்தியைக் காட்ட விரும்பினார். இவ்வாறு அவர் உடனே தமது உடலை ஜாடியில் வாழ முடியாத அளவிற்குப் பெரிதாக வளரச் செய்தார். அரசன் அந்த மீனைப் பிறகு ஒரு பெரிய கிணற்றினுள் விட்டார். ஆனால் கிணறும் சிறியதாகும் வகையில் மீன் பெரிதாக வளர்ந்தது. பிறகு அரசர் மீனை ஒரு ஏரிக்குள் விட்டார். ஆனால் அந்த ஏரியும் கூட பொருத்தமற்றதாக ஆயிற்று. இறுதியாக மீனை அரசன் கடலுக்குள் விட்டார். ஆனால் அந்த கடலும் மீனுக்குப் போதுமானதாக இல்லை. இவ்வாறாக அந்த மீன் பரமபுருஷரைத் தவிர வேறொருவருமில்லை என்பதைப் புரிந்துகொண்ட அரசன், பகவானை அவரது மீன் அவதாரத்தைப் பற்றி விளக்கும்படி வேண்டினார். அரசரிடம் திருப்தியடைந்த பகவான், ஒரு வாரத்திற்குள் பிரபஞ்சம் முழுவதிலும் ஒரு பிரளயம் ஏற்படப் போகிறது என்றும், அப்போது மீன் அவதாரத்தின் கொம்புடன் பிணைக்கப்பட்ட ஒரு படகில் அரசரையும், அவருடன் ரிஷிகளையும், மூலிகைகளையும் விதைகளையும், மற்ற ஜீவராசிகளையும் ஏற்றிக்கொண்டு தாம் அவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதாகக் கூறியபின் பகவான் மறைந்துவிட்டார். சத்தியவிரத மகாராஜன் பரமபுருஷருக்குத் தமது பணிவான வணக்கங்களைச் செலுத்தி தொடர்ந்து அவரை மனதிற்குள் தியானித்தார். உரிய காலத்தில் பிரளயம் ஏற்பட்டது. அரசனும் ஒரு படகு அருகில் வருவதைக் கண்டார். கற்றறிந்த பிராமணர்களுடனும், முனிவர்களுடனும் படகில் ஏறிக்கொண்ட பின், அவர் பரமபுருஷ பகவானிடம் பிரார்த்தனைகளைச் செய்து அவரை வழிபட்டார். பரமபுருஷர் அனைவருடைய இதயத்திலும் இருக்கிறார். இவ்வாறாக சத்தியவிரத மகாராஜன் மற்றும் ரிஷிகள் ஆகியோரின் இதயத்தில் இருந்து கொண்டு பகவான் அவர்களுக்கு வேத ஞானத்தைப் பற்றி போதித்தார். சத்தியவிரத மகாராஜன் அவரது அடுத்த பிறவியில், பகவத் கீதையில் குறிப்பிடப்பட்டுள்ள வைவஸ்வத மனுவாகப் பிறந்தார். ‘விவஸ்வான் மனவே ப்ராஹ:’ சூரியதேவன் பகவத்கீதையின் தத்துவத்தை அவரது மகனான மனுவுக்கு உபதேசித்தார். விவஸ்வானின் மகன் என்பதால் இந்த மனு வைவஸ்வத மனு எனப்படுகிறார்.



(ஶ்ரீல பிரபுபாதர் /  ஶ்ரீமத் பாகவதம் எட்டாம் காண்டம் / இருபத்திநான்காம் அத்தியாயம் )


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆


சுத்த பக்தி https://t.me/suddhabhaktitami

Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more