(ஶ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் மத்யலீலை 16.78 முதல் 16.81 )
💐💐💐💐💐💐💐
குளிர் காலத்தின் தொடக்கத்தில் ஓடன ஷஷ்டி என்று அறியப்படும் விழா ஒன்று உள்ளது. அந்த நாளிலிருந்து பகவான் ஜெகன்நாதருக்கு குளிர் காலத்திற்கு உகந்த போர்வைகளை அணிவிக்க வேண்டும் என்பதை இந்த விழா சுட்டிக்காட்டுகிறது. அந்த போர்வை நெசவாளர்களிடம் இருந்து நேரடியாக வாங்கப்படுகிறது. அர்ச்சன வழிமுறையின்படி, துணியை முதலில் நன்றாக துவைத்து அதிலுள்ள கஞ்சியை எடுத்து விட வேண்டும், அதன் பின்னரே அதனை பகவானுக்கு போர்த்த வேண்டும் ஆனால் பகவான் ஜெகநாதரின் பூஜாரி அந்த விதியினை புறக்கணித்து கஞ்சியுடன் கூடிய உடைகளை ஜெகநாதருக்கு அணிவித்தார். அதைப் பார்த்த புண்டரீக வித்யாநிதி, பக்தர்களிடம் குற்றம் காண்பதற்கான தனது எண்ணத்தினால், கடும் கோபம் கொண்டார்
பகவான் ஜெகன்நாதருக்கு கஞ்சியுடன் கூடிய ஆடை வழங்கப்பட்டதை கண்டபோது புண்டரீக வித்யாநிதி சற்று வெறுப்படைந்தார். அதனால் அவரது மனம் கலங்கமுற்றது.
அன்றிரவில் சகோதரர்களான பகவான் ஜகன்னாதரும் பலராமரும் புண்டரீக வித்யாநிதியிடம் வந்து புன்னகைத்தபடி அவரை அறையத் தொடங்கினர்.
அறை வாங்கியதால் அவரது கன்னங்கள் வீங்கிய போதிலும் புண்டரீக வித்யாநிதி தமக்குள் பெரும் மகிழ்ச்சியுற்றார்.
இந்த சம்பவத்தில் இருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால், ஒரு உயர்ந்த பக்தரிடம் இருந்து கூட பகவான் தனது சேவக பக்தர்களுக்கு எதிரான குற்றங்களைப் பொறுத்துக் கொள்வதில்லை என்பதையும், மனதினால் கூட இதுபோன்ற அபராதத்தை (குற்றத்தை) செய்யும் ஒரு பக்தரை அவர் தண்டிப்பதையும் நாம் அறிந்து கொள்ளலாம்.
ஒரு தூய பக்தர் பகவானிடம் இருந்து கிடைக்கும் இத்தகைய தண்டனையை மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறார் என்பதையும் இதன் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். இது பகவானின் கருணையின் வெளிப்பாடாகவும் அவருடைய பக்தர்கள் மீது அவர் கொண்டுள்ள அன்பையும் அக்கறையையும் வெளிப்படுத்துகிறது. இது அபராதம் (குற்றம்) செய்யக்கூடியவர்களுக்கும் அத்தகைய அபராதத்திற்கு (குற்றத்திற்கு) காரணமாக இருப்பவர்களுக்கும் பொருந்தும். தூய பக்தரானவர், பகவான் தன்னை சரி செய்ததற்காகவும் மேலும் குற்றங்கள் செய்வதிலிருந்து தன்னை தடுத்தாட்கொண்டதற்காகவும் பகவானுக்கு நன்றி செலுத்துகிறார். மேலும் அவர் தனது இதயத்தினுள் மிகுந்த மகிழ்ச்சியையும் உணர்கிறார்.
Comments
Post a Comment