🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
இம்முறை, பகவான் விஷ்ணுவின் அம்ச அவதாரமான தன்வந்தரி தோன்றினார். மிகவும் அழகாக காணப்பட்ட அவர், அமிர்தத்தைக் கொண்ட ஒரு கலசத்தை ஏந்தியிருந்தார். அசுரர்கள் உடனே தன்வந்தரியின் கரத்திலிருந்த கலசத்தை வெடுக்கெனப் பிடுங்கிக்கொண்டு ஓடத் துவங்கினர். மிகவும் வருத்தமடைந்த தேவர்கள் விஷ்ணுவைச் சரணடைந்தனர். தன்வந்தரியிடமிருந்து கலசத்தை பிடுங்கிக் கொண்டபின் அசுரர்கள் தங்களுக்கிடையில் சண்டையிட ஆரம்பித்தனர். பகவான் விஷ்ணு தேவர்களுக்கு ஆறுதல் கூறியதால் அவர்கள் போரிடாமல் அமைதியாக இருந்தனர்.
மோகினீ அவதாரம்
🍁🍁🍁🍁🍁🍁🍁
அசுரர்களுக்கிடையில் சண்டை நடந்து கொண்டிருக்கும்போது, பிரபஞ்சத்திலேயே மிகவும் அழகிய பெண்ணாகிய மோகினீ அவதாரமாக பகவான் தோன்றினார். அமிர்த கலசத்தை அசுரர்கள் அபகரித்துக் கொண்டபோது, அசாதாரணமான அழகு கொண்ட ஓர் இளம்பெண் அவர்களின் முன் தோன்றினாள். அசுரர்கள் அனைவரும் அந்த இளம் பெண்ணின் அழகில் மயங்கி, அவளுக்கு அடிமைகளாயினர். இப்போது அமிர்தத்தை அடைவதற்காக அசுரர்கள் தங்களுக்கிடையில் சண்டை செய்து கொண்டிருந்ததால், தங்களுடைய சண்டை சச்சரவுகளை தீர்த்து வைப்பதற்குரிய ஒரு மத்தியஸ்தராக அழகிய இப்பெண்ணைத் தேர்ந்ததெடுத்தனர். இவ்விஷயத்தில் அவர்களுக்கு இருந்த பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்ட பரமபுருஷ பகவானின் அவதாரமாகிய மோஹினி, தாம் எந்த முடிவை எடுத்தாலும் அதற்கு அவர்கள் சம்மதிக்க வேண்டும் என்று அசுரர்களின் வாக்குறுதியைப் பெற்றுக் கொண்டாள். அசுரர்கள் இந்த வாக்குறுதியைச் செய்ததும், அழகுப் பெண்மணியாகிய மோஹினி மூர்த்தி, அமிர்தத்தைப் பகிர்ந்து அளிப்பதற்காக, தேவர்களையும் அசுரர்களையும் இரண்டு வரிசைகளாக அமரச் செய்தாள். அசுரர்கள் அமிர்தத்தைப் பருகும் தகுதியற்றவர்கள் என்பதை அவள் அறிந்திருந்தாள். ஆகவே, அவர்களை ஏமாற்றி அமிர்தம் முழுவதையும் அவள் தேவர்களுக்குப் பகிர்ந்தளித்தாள். மோஹினி மூர்த்தியின் இந்த வஞ்சனையைக் கண்ட அசுரர்கள் மௌனமாக இருந்துவிட்டனர். ஆனால் ராகு என்னும் பெயர் கொண்ட அசுரனொருவன் ஒரு தேவரைப் போல் ஆடை அணிந்து கொண்டு, தேவர்களின் வரிசையில் அமர்ந்து கொண்டான். அவன் சூரியனுக்கும், சந்திரனுக்கும் பக்கத்தில் அமர்ந்தான். ராகு ஏமாற்ற முயல்வதை அறிந்த பரமபுருஷர் அந்த அசுரனின் தலையை உடனே துண்டித்து விட்டார். ஆனால், ராகு அமிர்தத்தைச் சுவைத்து விட்டதால், அவனது தலை துண்டிக்கப்பட்டு விட்டாலும், அவன் உயிருடனேயே இருந்தான். தேவர்கள் அமிர்தத்தைப் பருகியபின், பரமபுருஷர் தமது சுய ரூபத்தை ஏற்றார்.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
சுத்த பக்தி https://t.me/suddhabhaktitami
Comments
Post a Comment