பக்தித் தொண்டில் உண்டாகும் பரமானந்தம்


 பக்தித் தொண்டில் உண்டாகும் பரமானந்தம் 


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁



பக்தித் தொண்டில் உண்டாகும் பரமானந்தம் இரு வகையாக பிரிக்கப்படுகிறது. அவை நேர்முகப் பக்தி தொண்டு மற்றும் மறைமுக பக்தி தொண்டாகும். நேர்முக பக்தி தொண்டு ஐந்து வகையானப் பரமபாவஙகள் அல்லது ரஸங்களாகப் பிரிக்கப்படுகின்றன. அதேபோல மறைமுக பக்திதொண்டு,  ஏழு வகையானப் பரம பாவங்களாகப் பிரிக்கப் படுகின்றன. 


நேர்முகப் பக்தி தொண்டுகள் பின்வருமாறு :  சாந்தம் , தாஸ்யம் , சக்யம் , வாத்ஸல்யம் , சிருங்காரம் என்பவையாகும்.


மறைமுக பக்தி தொண்டு ஹாஸ்யம் , தயா, ரௌத்ரம், வீரம், பயானகம் (அச்சம்) , அற்புதம் (ஆச்சரியம்) பிபத்ஸம் (அதிர்ச்சியடைதல் ) என்று ஏழு வகையாகப் பிரிக்கப்படுகின்றன. ஆதலினால் பக்தி தொண்டு இவ்வாறு பன்னிரண்டு வகைகளாக பிரிக்கப்படுகின்றன.

 

தாங்கிக் கொள்ளுதல்,  வெளிப்படுதல்,  விரிவடைதல், பிரதிபலித்தல், துக்கித்தல்  என்னும் ஐந்தும் மெய்மறந்த காதலில் தெளிவாகப் புலப்படும் அடையாளங்களாகும். ஆகையினால் பக்தித் தொண்டின் தகுதியானது இந்த ஐந்து அடையாளங்களின் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படுகின்றன. 


🌱) சாந்த பாவ பக்தித் தொண்டில் தாங்கிக் கொள்ளுதல் இருக்கிறது.


🌱)  வீர பாவ பக்தித் தொண்டில் விரிவடைதல் இருக்கிறது.


🌱) தயாபாவ பக்தித் தொண்டில் பிரதிபலித்தல் இருக்கிறது.


🌱ரௌத்ரபாவ பக்தித் தொண்டில் துக்கம் போன்றவையும் இருக்கிறது 



அனுபவம் இல்லாத ஒரு மாணவனுக்குப் பக்தித் தொண்டில் காணப்படும் இரங்கத்தக்க நிலை துன்பம் தர தக்கதாக தோன்றலாம். ஆனால் இந்த இரங்கதக்க நிலையில் ஒரு பக்தனிடம் தோன்றும் உணர்வுகள் உயர்ந்த பக்தர்களால் மேன்மை மிக்கவையாகக் கருதப்படுகிறது. சான்றாக இராமாயணக் கதை சில சமயம் இரங்கத்தக்கதாகவும், மனதிற்குத் துயரமளிப்பதாகவும், கருதப்படுகிறது. ஆனால் உண்மை அதுவல்ல. இராமாயணம் எவ்வாறு பகவான் ராமச்சந்திர மூர்த்தி அவருக்குப் பட்டாபிஷேகத்திற்கு முந்தினநாள் அவரது தந்தையால் காட்டுக்கு அனுப்பப் பட்டாரென்றும், ராமரைப் பிரிந்து அவரது தந்தை மரணமடைந்ததையும், காட்டில் சீதை இராவணனால் சிறைப்படுத்தப்பட்டதையும், அதனால் நடந்த பெரும் யுத்தத்தையும், சீதை இராவணனிடமிருந்து இறுதியில் சிறைமீட்க்கப்பட்டதையும், இராவணனும் அவனது அரசும் அழிந்ததையும், சீதையை ராமர் தீக்குளிக்கச் செய்ததையும், சில நாட்கள் கழித்து அவள் மீண்டும் ராமரால் காட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டதையும் விவரிக்கிறது. இராமாயணம் கூறும் இவை எல்லாம் மிகவும் இரங்கதக்கவையாகவும், படிப்பவருக்குத் துன்பந்தரத்தக்கவையாகவும் தோன்றும் .ஆனால் இவையெல்லாம் உண்மையன்று. இல்லையேல் பகவான் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின்  மிகச் சிறந்த பக்தரான ஹனுமான் ஏன் இராமாயணத்தைத் தினசரி ஓத வேண்டும்? உண்மை என்னவென்றால் மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் பக்தி தொண்டின் பன்னிரண்டு பரம பாவங்களில் எல்லாமே பரமானந்தம் தருபவையாகும்.


பக்தி ரஸாம்ருத சிந்து / அத்தியாயம் 34


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.




Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more