ஶ்ரீ ஜெகதீஷ பண்டிதர்


 ஶ்ரீ ஜெகதீஷ பண்டிதர்


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஜெகதீஷ பண்டிதரைப் பற்றிய விளக்கங்கள் சைதன்ய பாகவதம் ஆதி காண்டம், அத்தியாயம் ஆறு, மற்றும் சைதன்ய சரிதாம்ருதம், ஆதிலீலை, அத்தியாயம் 14ல் காணப்படுகிறது. இவர் சாகதஹ இரயில் நிலையத்திற்கு அருகில் நதீயா மாவட்டத்திலுள்ள யஷடா என்னும் ஊரைச் சார்ந்தவர். அவரது தந்தையான கமலாக்ஷர், பட்ட நாராயணன் என்பவரின் மகனாவார். ஜெகதீஷருடைய தாய், தந்தையர் இருவரும் பகவான் விஷ்ணுவின் சிறந்த பக்தர்களாவர். அவர்களுடைய மரணத்திற்குப் பிறகு ஜெகதீஷர், அவருடைய மனைவி துக்கினி, சகோதரர் மகேஷர் ஆகிய மூவரும் சொந்த ஊரைவிட்டு ஶ்ரீ மாயாபூருக்கு  வந்தனர். அங்கே ஶ்ரீ ஜகந்நாத மிஸ்ரர் மற்றும் இதர வைஷ்ணவர்களின் சங்கத்தில் அவர்கள் வாழ தொடங்கின்ர். சைதன்ய மகாபிரபு ஜெகதீஷரை ஜகந்நாத புரிக்குச் அழைத்துச் செல்லுமாறும் ஹரி நாம ஸங்கீர்த்தன இயக்கத்தை பிரச்சாரம் செய்யும்படியும் கேட்டுக்கொண்டார். ஜகந்நாத புரியிலிருந்து திரும்பிய பின்னர், பகவான் ஜகந்நாதரின் கட்டளைக்கிணங்க, அவர் யஷடா கிராமத்தில் ஜகந்நாதரின் விக்ரஹங்களை  பிரதிஷ்டை செய்தார். ஜெகதீஷ பண்டிதர் ஜகந்நாதரின் விக்ரகத்தினை யஷடா கிராமத்திற்குக்  கொண்டு வந்தபோது, வலுவான அந்த விக்கிரகத்தினை ஒரு குச்சியில் கட்டி கொண்டுவந்தார் என்று கூறப்படுகிறது. ஜெகதீஷ பண்டிதர் ஜகந்நாத விக்ரஹத்தைக் கொண்டுவருவதற்கு உபயோகித்த அக்குச்சியினை கோயிலின் பூஜாரிகள் இன்றும் காண்பிக்கின்றனர்.


( ஶ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் / ஆதிலீலை / 11.30 )



ஜெகதீஷர் மற்றும் ஹிரண்யரின் இல்லத்தில் ஏகாதசி நாளன்று விஷ்ணுவின் பிரசாதத்தினை மகாப்பிரபு ஏற்றுக் கொண்ட சம்பவம், சைதன்ய பாகவதம், ஆதி காண்டம், ஆறாவது அத்தியாயத்தில் முழுமையாக விவரிக்கப்பட்டுள்ளது. ஏகாதசியன்று விரதமிருப்பது பக்தர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட போதிலும், பகவான் விஷ்ணுவுக்கு விரதம் ஏதும் கிடையாது என்பதால், அவருக்கு ஏகாதசியன்றும் பொதுவான பிரசாதமே அர்ப்பணிக்கப்படுகிறது. ஒருமுறை ஏகாதசி நாளன்று ஜெகதீஷர் மற்றும் ஹிரணிய பண்டிதரின் இல்லத்தில், பகவான் விஷ்ணுவுக்குச் சிறப்பான பிரசாதத்தினைச் சமைப்பதற்கான ஏற்பாடுகள் நிகழ்ந்து கொண்டிருந்தன. ஸ்ரீசைதன்ய மஹாபிரபு தமக்கு உடல் நலம் சரியில்லை என்று காரணம் கூறி, விஷ்ணுபிரசாத்தினை  அவர்களிடம் கேட்குமாறு தனது தந்தையிடம் வேண்டினார். ஜெகதீஷர் மற்றும் ஹிரண்ய பண்டிதரின் இல்லமானது ஜகநாத மிஸ்ரரின் இல்லத்திலிருந்து சுமார் இரண்டு மைல் தொலைவில் இருந்தது. ஜகந்நாத மிஸ்ரர், ஸ்ரீசைதன்ய மஹாபிரபு வின் வேண்டுகோளின்படி ஜெகதீஷர் மற்றும் ஹிரண்யரிடம் பிரசாத்த்தினை  கேட்கச் சென்றபோது, அவர்கள் சற்று வியப்புற்றனர், "பகவான் விஷ்ணுவிற்கு விசேஷமான பிரசாதம் தயாரிக்கப்படுவதே இந்த சிறுவன் எவ்வாறு தெரிந்து கொண்டான் ? " நிமாயிடம் இயற்கைக்கு அப்பாற்பட்ட யோக சித்திகள் இருக்க வேண்டுமென்று அவர்கள் உடனடியாக முடிவு செய்தனர். இல்லாவிடில், அவர்கள் சிறப்பான பிரசாரதத்தினை தயாரிக்கின்றனர் என்பதை அவரால் எவ்வாறு புரிந்து கொள்ள முடிந்தது ? எனவே, அவர்கள் உடனடியாக ஶ்ரீ சைதன்ய மஹாபிரபுவிற்கு அவரது தந்தை ஜகநாத மிஸ்ரரின் மூலமாக உணவைக் கொடுத்து அனுப்பினர். நிமாய் உடல்நிலை சரியில்லாததைப் போல இருந்தார். ஆனால் விஷ்ணு பிரசாதத்தை உண்ட மாத்திரத்தில் குணமடைந்தார். பிரசாதத்தினை தம்முடன் விளையாடிக் கொண்டிருந்தவர்களுக்கும் விநியோகம் செய்தார்.


(ஶ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் / ஆதிலீலை / 14.42 / பொருளுரை )



 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க



ஆன்மீக கதைகளை படிக்க 👇

உத்வேக கதைகள் https://t.me/udvegakathaigal

Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more