மஹாஜனங்கள் யார்


மஹாஜனங்கள் யார்


வழங்கியவர் : சுத்தபக்தி குழுவினர்


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


 ஸ்வயம்பூர்  நாரத: சம்பு:

 குமார: கபிலோ  மனு:

ப்ரஹ்லாதோ  ஜனகோ  பீஷ்மோ

 பலிர்   வையாசகீர் வயம்


 த்வாதஸயிதே   விஜானிமோ

 தர்மம் பகவதம் பத:

 குஹ்யம்  விசுத்தம்  துர்போதம் 

யம்  ஞாத்வாம்ருதம்   அஸ்னுதே


பிரம்ம தேவர், நாரதர், சிவ பெருமான், நான்கு குமாரர்கள், பகவான் கபிலர் (தேவஹூதியின் மகன்), சுயம்புவ மனு, பிரகலாத மகாராஜன், ஜனக மகாராஜன், பாட்டனார் பீஷ்மர், பலி மகாராஜன், சுகதேவ கோஸ்வாமி மற்றும் நான் ஆகிய பன்னிருவரும் உண்மையான சமயக் கோட்பாட்டை அறிந்தவர்களாவோம். அன்பிற்குரிய சேவகர்களே, பாகவத - தர்மம் அல்லது பரமபுருஷரிடம் அன்பு கொண்டு அவரிடம் சரணாகதியடைதல் எனப்படும் இந்த உன்னதமான சமயக் கோட்பாடு, ஜட இயற்கைக் குணங்களால் கறைப்படுத்தப்படாததாகும். இது மிகவும் இரகசியமானதும், சாதாரண மனிதர்களால் புரிந்து கொள்வதற்குக் கடினமானதுமாகும். ஆனால் அதிர்ஷ்டவசமாக இதை ஒருவன் புரிந்து கொண்டுவிட்டால், அவன் உடனே முக்தியடைந்து பரமபதத்திற்கு, பகவானின் இராஜியத்திற்குச் சென்று விடுகிறான். ( ஸ்ரீமத் பாகவதம் 6.3.20-21)



ஸ்ரீமத் பாகவத மஹாபுராணம்  பல கதைகளை தன்னகத்தே கொண்டுள்ளது.  அவற்றில் முக்கியமாக 12 தனித்துவம் வாய்ந்த நபர்களின் வாழ்க்கை மற்றும் மகிமைகளை விவரிக்கும் தகவல்களும் உள்ளன.  அவர்கள் அனைவரும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் அதீத அன்பு கொண்டுள்ள மிகச் சிறந்த பக்தர்கள் ஆவர்.  அவர்கள் பகவானுக்கு  இடையறாது சேவை செய்து நாம் அவர்களை பின்பற்றும்படிக்கு  உதாரணமாக இருந்தார்கள். அவர்கள 12 பேர்  ஒன்றாக  மஹாஜனங்கள் என்று அழைக்கப்பட்டார்கள். 


அவர்களது வாழ்க்கை இப்பொழுதும் பேசப்படுகிறது என்றால் அது பகவான் மேல் அவர்கள் கொண்ட பக்தியினால் மட்டுமல்ல.  மாறாக பகவானும் அவர்கள் மேல் அதீத அன்பு கொண்டிருந்தார். அவர்களை தனது பல லீலைகளில்  பங்கேற்க வைத்தும் தனது விளையாட்டுத்தனமான திவ்ய செயல்களில் எல்லாம் அவர்களை ஈடுபட  வைத்தும் அவர் தனது அன்பை வெளிப்படுத்தினார்.  இந்த பக்தர்களின் வாழ்க்கை நமக்கு நல்ல பாடங்களை கற்றுத் தருகிறது.  பகவானால் எது நியமிக்கப்பட்டதோ அதையே அவர்கள் செய்தார்கள்.  சாஸ்திரங்களில் பரிந்துரை செய்யாத எதையும் செய்வதிலிருந்து அவர்கள் விலகியே இருந்தார்கள்.  அனைத்துத் துன்பங்களிலிருந்தும் பகவான் நம்மை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையை முழுமையாகக் கொண்டிருந்தார்கள்.  அவர்கள் தங்களை கதியற்றவர்களாக கருதிக் கொண்டு பகவானின் உதவியையே எப்போதும் நாடி அவரது திருவடித் தாமரையில் சரணடைந்து இருந்தார்கள்.  உண்மையான உணர்வுடன் தங்களின் வாழ்க்கையை முழுவதுமாக பகவத்தொண்டிற்காக அவர்கள் அர்ப்பணித்து இருந்தார்கள்.


12  மஹாஜனங்கள்


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


1.  பிரம்மதேவர் 

2. நாரத மகரிஷி

3.  சிவபெருமான் 

4. நான்கு குமாரர்கள்

5.  கபிலதேவர்

6. மனு 

7. பிரகலாத் மஹராஜ் 

8. ஜனக மஹராஜ

9.  பீஷ்ம தேவர் 

10.  பலி மஹராஜ்

11.  சுகதேவ கோஸ்வாமி

12.  யமராஜர்




🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!

ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி

🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆


சுத்த பக்தி https://t.me/suddhabhaktitami

Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more