ஸ்ரீ பிரம்ம சம்ஹிதை
*****************************************************************************
பதம் 1
ஈஸ்வர: பரம: க்ருஷ்ண: சச்சிதான்ந்த விக்ரஹ:
அனாதிர் ஆதிர் கோவிந்த: சர்வகாரண காரணம்
மொழிபெயர்ப்பு
கோவிந்தன் எனப்படும் க்ருஷ்ணர் முழுமுதற்கடவுள். அவரது சரீரம் நித்ய ஆனந்தமயமானது. அவர் ஆதியற்றவர். பல காரணங்களுக்கும் அவரே காரணமானவர்.
பதம் 29
சிந்தாமணி-ப்ரகர-ஸத்மஸு கல்பவ்ருக்ஷ
லக்ஷாவ்ருதேஷு ஸுரபிர் அபிபாலயந்தம்
லக்ஷ்மி-ஸஹஸ்ர-சத-ஸம்ப்ரம-ஸேவ்யமானம்
கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
மொழிபெயர்ப்பு
நான் கோவிந்தனை வழிபடுகிறேன். அவர் ஆதிபுருஷன் முதல் புருஷனான அவர் பசுக்களை மேய்ப்பவர். இந்த இடம் ஆன்மீக விலையுயர்ந்த கற்களால் கட்டப்பட்டது. சுற்றிலும் லக்ஷக்கணக்கான கேட்டவரமளிக்கும் கல்பதருக்கள். இந்த ஆதி புருஷனுக்கு ஆயிரமாயிரம் லக்ஷ்மிகள் அல்லது கோபியர் சேவை புரிகின்றனர்.
பதம் 30
வேணும் க்வனந்தம் அரவிந்த-தலாயதாக்ஷ்ம்
பர்ஹாவதம் அஸிதாம்புத ஸுந்தராங்கம்
கந்தர்ப-கோடி-கமனீய-விசேஷ-சோபம்
கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
மொழிபெயர்ப்பு
ஆதி புருஷனான கோவிந்தனை நான் வணங்குகிறேன். புல்லாங்குழல் இசைப்பதில் அவர் தன்னிகரற்றவர். அவரது மொட்டு விரிந்தது போன்ற மலர்க்கண்கள், தலையில் மயிற்பீலி. அவரது கொள்ளை கொள்ளும் அழகு நீல மேகங்கள் போன்றது. அவரது ஒப்பற்ற எழில் உருவம் லக்ஷ்கணக்கான கோபியரை வசீகரிக்கக்கூடியது.
பதம் 31
ஆலோல-சந்த்ரக-லஸத்-வனமால்ய வம்சீ-
ரத்னாங்கதம் ப்ரணய-கேலி-கலா-விலாஸம்
ஷ்யாம்ம் த்ரி-பங்க-லலிதம் நியத-ப்ரகாசம்
கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
மொழிபெயர்ப்பு
ஆதி புருஷனான கோவிந்தனை நான் வணங்குகிறேன். அவரது கழுத்தில் சந்திர உருவம் பதித்த தொங்கட்டான், பூமாலை, அவரது இரு கரங்களும் முரளியும் அணிகலன்களும் தரித்துள்ளன. அவர் எப்பொழுதும் இன்ப லீலைகளில் ஆழ்ந்திருப்பவர். அவரது சியாமசுந்தர மூன்று வளையும் தோற்றம் எப்பொழும் வெளியில் தெரிகின்றது.
பதம் 32
அங்கானி யஸ்ய ஸகலேந்த்ரிய-வ்ருத்தி
மந்தி பஷ்யந்தி பாந்தி கலயந்தி சிரம் ஜகந்தி
ஆனந்த-சின்மய-ஸத்-உஜ்வல-விக்ரஹஸ்ய
கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
மொழிபெயர்ப்பு
யாருடைய உருவம் ஆனந்தம் உண்மை முழுமை நிரம்பியதோ (கண்ணைக் கூசும் பிரகாசமானது) அத்தகைய முழுமுதற்கடவுளை நான் வணங்குகிறேன். அந்த ஆன்மீக உருவத்தில் ஒவ்வொரு அவயவமும் எல்லா அவயவங்களின் வேலைத்திறனையும் கொண்டது. அத்தகைய முழுமுதற்கடவுள் என்றென்றும் பார்த்து பரிபாலித்து ஆன்மீக மற்றும் ஜட புவனங்களை இயக்கிவருகிறார்.
பதம் 33
அத்வைதம் அச்யுதம் அநாதிம் அனந்த-ரூபம்
ஆத்யம் புராண-புருஷம் நவ-யௌவனம் ச
வேதேஷு துர்லபம் அதுர்லபம் ஆத்ம-பக்தௌ
கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
மொழிபெயர்ப்பு
வேதங்களாலும் அடையமுடியாத ஆனால் ஆத்மார்த்த பக்தியினால் மட்டுமே அடையக்கூடிய அந்த உன்னத புருஷனை புருஷோத்தமனை வணங்குகிறேன். அவர் ஈடு இணையற்றவர். அழிவற்றவர் ஆதி இல்லாதவர் முடிவற்ற வடிவம் கொண்டவா. அவரே முதலும் நிரந்தமுமான புருஷன். இப்படி அன்றும் இன்றும் என்றென்றும் இருப்பவா. இளமை ததும்பும் வாலிபன்.
பதம் 34
பந்தாஸ் து கோடி-சத-வத்ஸர-ஸம்ப்ரம்யோ
வாயோர் அதாபி மனஸோ முனி-புங்கவானம்
ஸோ“பி அஸ்தி யத் ப்ரபத-ஸீம்னீ அவிசிந்த்ய
தத்த்வே கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
மொழிபெயர்ப்பு
ஆதி புருஷனான கோவிந்தனை நான் வணங்குகிறேன். எண்ணற்ற யோகிகள் அவரது தாமரைத் திருவடியின் கால் கட்டை விரலின் ஒரு விளிம்பையே காண்கின்றனர். இவர்கள் ஆன்மீக விருப்பத்தினால் உந்தப்பட்டு மூச்சுக்கட்டுப்பாடான ப்ராணாயாமத்தை மேற்கொள்கிறார்கள். இதே கால்கட்டை விரல் விளிம்பை கண்ணோக்கும் ஞானிகள் கூட உருவற்ற பிரம்மத்தை ஆண்டாண்டு காலமாய்த் தேடிக் கொண்டேயிருக்கிறவர்கள். பலவற்றை தவிர்த்த பிறகே பரமனைக் காண்பவர்கள்.
பதம் 35
ஏகோ”பி அஸௌ ரசயிதும் ஜகத்-அண்ட-கோடிம்
யச்-சக்திர் அஸ்தி ஜகத்-அண்ட சயா யத் அந்த:
அண்டாந்தர-ஸ்த-பரமாணு-சயாந்தர-ஸ்தம்
கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
மொழிபெயர்ப்பு
அவர் ஓர் பாகுபாடற்ற வஸ்து. ஏனென்றால் சக்திக்கும் அதனை உடையவருக்கும் இடையில் பாகுபாடில்லை. கோடானுகோடி உலகங்களைப் படைக்கும் அவர் தொழிலில் அவரது சக்தி அவரிடமிருந்து பிரிவதில்லை. எல்லா பிரபஞ்சங்களும் அவரிடத்தில் அவர் ஒவ்வொரு அணுவிலும் முழுமையாக உள்ளார். இந்த அணுக்கள் ஒரே சமயத்தில் பிரபஞ்சம் முழுவதிலம் சிதறிக்கிடக்கின்றன. இத்தகைய ஆதி கோவிந்தனை நான் வணங்குகிறேன்.
பதம் 36
யத்-பாவ-பாவித-தியோ மனுஜாஸ் ததைவ
ஸம்ப்ராப்ய ரூப-மஹிமாஸன-யான-பூஷா:
ஸுக்தர் யமேவ நிகம ப்ரதிதை: ஸ்துவந்தி
கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
மொழிபெயர்ப்பு
ஆதி புருஷனான அதே கோவிந்தனை வணங்குகிறேன். பக்தி சொரிந்த மாந்தர்கள் இந்த ஆதி புருஷனை துதிபாடுகின்றனர். வேதங்கள் வழங்கும் மந்த்ர ஸுக்தத்தை ஓதுகின்றனர். இப்படியாக அவர்கள் தகுந்த அழகு பெருமை சிங்காதனங்கள். ஊர்திகள், அணிகலன்கள் முதலானவற்றைப் பெறுகின்றனர்.
பதம் 37
ஆனந்த-சின்மய-ரஸ-ப்ரதிபாவிதாபிஸ்
தாபிர் ய ஏவ நிஜ ரூபதயா கலாபி:
கோலோக ஏவ நிவஸதி அகிலாத்ம-பூதோ
கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
மொழிபெயர்ப்பு
கோலோகத்தில் ராதையுடன் வசிக்கும் ஆதிபுரு‘னான கோவிந்தனை நான் வணங்குகிறேன். ராதை அவரது சொந்த ஆன்மீக சாயல் கொண்டவள். பரமபுருஷன் ஆயக்கலைகள் 64 கினையும் நேயக்கற்றவர். ராதையின் தோழிகளுடன் கூடிய கூட்டத்தில் கோவிந்தன் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருப்பவர். ராதையின் சகிகள் அவளது விரிவுகள். ஒவ்வொரு கோபியிடமும் ராதையின் நிரந்தர ஆனந்த ஆன்மீக ரஸம் பட்டு பரவியிருக்கிறது.
பதம் 38
ப்ரேமாஞ்சஜன-ச்சுரிதா-பக்தி-விலோசனேன
ஸந்த: ஸதைவ ஹ்ருதயேஷு விலோகயந்தி
யம் ஷ்யாமசுந்தரம் அசிந்த்ய-குண-ஸ்வரூபம்
கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
மொழிபெயர்ப்பு
கண்ணனேயான சியாமசுந்தரனை, கோவிந்தனை, ஆதிபுருஷனை வணங்குகிறேன். அவர் எண்ணமுடியாத குணாதிசயங்கள் கொண்டவர். அவரை தூய பக்தர்கள் தங்கள் இதயத்தின் இதயத்தில் வைத்து அஞ்சனம் தீட்டியது போல அன்பு தீட்டிய விழிகளால் காண்கின்றனர்
பதம் 39
ராமாதி மூர்த்திஷு கலா நியமேன திஷ்டன்
நானாவதாரம் அகரோத் புவனேஷு கிந்து
க்ருஷ்ண: ஸ்வயம் ஸம்பவத் பரம: புமான் யோ
கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
மொழிபெயர்ப்பு
எந்த ஆதி புருஷன் கோவிந்தன். ராமன், நரசிம்மன், வாமனன் போன்ற அவதாரங்கள் எடுத்தவனோ அவரையே நான் வணங்குகிறேன்.
பதம் 40
யஸ்ய ப்ரபா-ப்ரவதோ ஜகத்-அண்ட-கோடி-
கோடீஷ்வ அசேஷ-வஸுதாதி-விபூதி-பின்னம்
தத் ப்ரஹ்ம நிஷ்கலம் அனந்தம் அசேஷ-பூதம்
கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
மொழிபெயர்ப்பு
உபநிஷதங்கள் எதை பிரம்மம் என்று வர்ணிக்கின்றதோ, அதன் தோற்றுவாய் சுயம்பிரகாசமான ஆதிபுருஷன் கோவிந்தன். இந்த கோவிந்தன் வகுபடாத வரம்பற்ற எல்லையற்ற சத்யன். இவரை நான் வணங்குகிறேன்.
பதம் 41
மாயா ஹி யஸ்ய ஜகத்-அண்ட-சதானி ஸூதே
த்ரைகுண்ய-தத் –விஷய்ய-வேத-விதாயமானா
ஸத்வாவலம்பி-பர-ஸத்வ-விசுத்த-ஸத்வம்
கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
மொழிபெயர்ப்பு
அனைத்து இருப்பிற்கும் ஆதாரமான இறுதி உண்மையான மெய்பொருளான புருஷனான கோவிந்தனை வணங்குகிறேன். அவரது புறச்சக்தி சத்வ ரஜ தம குணங்களைத் தழுவியது. ஜட உலகம் பற்றிய வேத அறிவை பரப்பச்செய்வது.
பதம் 42
ஆனந்த சின்மய ரஸாத்மதயா மன: ஸு
ய: ப்ராணினாம் ப்ரதிபலன் ஸ்மாதாம் உபேத்ய
லீலாயிதேன புவனானி ஜயதி அஜஸ்ரம்
கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
மொழிபெயர்ப்பு
ஆதி புருஷனான கோவிந்தனை நான் வணங்குகிறேன். அவரது புகழ் ஜட உலகில் ஆட்சி செலுத்துகின்றது. அவரது திருவிளையாடல்கள் அகிலம் பரந்தவை. சச்சிதானந்த சொரூபமாய் அவரது மாட்சிமை அகிலத்தில் நிலவுகின்றது.
பதம் 43
கோலோக-நாம்னி நிஜ-தாம்னி தலேச தஸ்ய
தேவி-மஹேச-ஹரி-தாமஸு தேஷு தேஷு
தே தே ப்ரபாவ-நிசயா விஹிதாஸ் ச யேன
கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
மொழிபெயர்ப்பு
தேவிதாமம் என்ற இருப்பிடம் அனைத்து உலகங்களிலும் மிகமிகத் தாழ்மையான உலகம் அதற்கு சற்றுமேலாக மஹேச தாம ம் என்ற சிவலோகம் அதற்கு மேலாக ஹரிதாமம் என்ற வைகுந்தலோகம் எல்லாவற்றுக்கும் சிகரமாய் கோலோகம் அது பகவான் கிருஷ்ணின் வசிப்பிடம் படிப்படியான உலகங்களை உரிய ஆளுநர்களுக்கு வழங்கிய ஆதிபுருஷனான கேசவனை நான் வணங்குகிறேன்.
பதம் 44
ஸ்ருஷ்டி-ஸ்திதி-ப்ரளய-ஸாதன-சக்திர் ஏகா
சாயேவ யஸ்ய ய புவனானி பிபர்தி துர்கா
இச்சானுரூபம் அபி யஸ்ய ச சேஷ்டதே ஸா
கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
மொழிபெயர்ப்பு
சித் சக்தியின் நிழலான மாயா (புறசக்தி) மக்களால் துர்காதேவியாக வழிபடப்படுகிறாள். அவளே இந்த ஜகத்தைப் படைத்து காத்து அழிப்பவள். யாருடைய சித்தப்படி துர்காதேவி நடந்துகொள்கிறாளோ அந்த ஆதி புருஷனான கோவிந்தனை நான் வணங்குகிறேன்.
பதம் 45
க்ஷிரம் யதா ததி விகார-விசேஷ-யோகாத்
சஞ்ஜாயதே ந ஹி தத: ப்ருதக்-அஸ்தி ஹேதோ:
ய: சம்புதாம் அபி ததா ஸமுபைதி கார்யாத்
கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
மொழிபெயர்ப்பு
அமிலங்களால் பால் தயிராகத் திரிகிறது. இருப்பினும் இந்த தயிர் பாலும் அல்ல. பாலிலிருந்து தன்மையில் மாறுபட்டதுமல்ல. அதே போன்ற ஆதி ஆண்மகனாகிய கோவிந்தனை நான் வணங்குகிறேன். இந்த ஆதி புருஷனிடமிருந்து திரிபடைந்தவா சிவபெருமான். அழிக்கும் தொழிலின் அதிபதி.
பதம் 46
தீபார்சிர் ஏவ ஹி தசாந்தரம் அப்யுபேத்ய
தீபாயதே விவ்ருத-ஹேது-ஸமான-தர்மா
யஸ் தாத்ருக் ஏவ ஹி ச விஷ்ணுதயா விபாதி
கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
மொழிபெயர்ப்பு
ஒரு தீபம் மற்றொறு தீபத்தை ஏற்றினாலும் தன்னொளி குறைவதில்லை. அதேபோல தன்னை பல விதங்களில் தோன்றச் செய்யும் பிரபு கோவிந்தனை நான் வணங்குகிறேன்.
பதம் 47
ய: காரணார்ணவ-ஜல பஜதி ஸ்ம யோக-
நித்ராம் அனந்த-ஜகத்-அண்ட-ஸ-ரோம-கூப:
ஆதார-சக்திம் அவலம்ப்ய பராம் ஸ்வ-மூர்த்திம்
கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
மொழிபெயர்ப்பு
ஆதிபுருஷன் கோவிந்தனின் ஓர் அம்சமான அனந்தன் என்ற ஆதிசேஷன். காரணக்கடலில் ஆதிசேஷன் மீது படுத்த நிலையில் யோகநித்ரை புரிகிறார் கோவிந்தன். அவரது கேச நுண்துளைகளில் இந்த பிரபஞ்சமே அடங்கியிருக்கிறது. அத்தகைய கோவிந்தனை நான் வணங்குகிறேன்.
பதம் 48
யஸ்யைக-நிச்வஸித-காலம் அதாவலம்ப்ய
ஜீவந்தி லோம-வில-ஜா ஜகத்-அண்ட-நாதா:
விஷ்ணுர் மஹான் ஸ இஹ யஸ்ய கலா விசேஷோ
கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
மொழிபெயர்ப்பு
பிரம்மனும் இதர ஜட உலக அதிகாரிகளும் மஹாவிஷ்ணுவின் முடியின் நுண் துளையிலிந்து தோன்றியவர்கள். மஹாவிஷ்ணு மூச்சை உள்ளிழுக்கும் வரையில் இவர்கள் உயிருடன் இருப்பார்கள். யாரின் அங்கத்தின் அங்கம் மஹா விஷ்ணுவோ அன்னவரை நான் வணங்குகிறேன். அவரே ஆதி புருஷரான கோவிந்தன்.
பதம் 49
பாஸ்வான் யதாச்ம சகலேஷு நிஜேஷு தேஜ:
ஸ்வீயம் கியத் ப்ரகதயதி அபி தத்வத் அக்ர
ப்ரஹ்மா ய ஏஷ ஜகத்-அண்ட-விதான-கர்தா
கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
மொழிபெயர்ப்பு
ஆதி புருஷரான கோவிந்தனிடமிருந்து பிரிந்தவர் அவரது அங்கமான பிரம்மா. இந்த மண்ணுலகத்தை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான அதிகாரத்தை அவர் கோவிந்தனிடம் இருந்தே பெறுகிறார். தன் பெயரையே கொண்டசூர்யகாந்தக் கற்கள் மேல் சூரிய ஒளிபட்டு பிரகாசிப்பதில்லையா அது போன்று இது. அத்தகைய முழுமுதற்கடவுளான கோவிந்தனை வணங்குகிறேன்.
பதம் 50
யத்-பாத-பல்லவ-யுகம் வினிதாய கும்ப-
த்வந்த்வே ப்ரணாம-ஸமயே ஸ கணாதிராஜ:
விக்னான் விஹந்தும் அலம் அஸ்ய ஜகத்-த்ரயஸ்ய
கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
மொழிபெயர்ப்பு
ஆதி ஆடவனான கோவிந்தனின் தாமரைத்திருவடிகளை கணேசன் தன் தந்தங்களில் தாங்குகிறார். எதற்கென்றால் மூவுலகங்களிலும் முன்னேற்றப்பாதையில் தென்படும் தடைகளை நீக்குவதற்கான சக்தியை அதிகாரத்தைப் பெறுவதற்கு அத்தகைய கோவிந்தனை நான் வணங்குகிறேன்.
பதம் 51
அக்னிர் மஹி ககனம் அம்பு மருத்திசஸ் ச
காலஸ் ததாத்ம மனஸீதி ஜகத் த்ரயாணி
யஸ்மாத் பவந்தி விபவந்தி விசந்தி யம் ச
கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
மொழிபெயர்ப்பு
நெருப்பு மண் அண்டைவெளி தண்ணீர் காற்று திசை காலம் ஆத்மா மனது என்ற ஒன்பது மூலகங்களால் மூவுலகும் நிறைந்துள்ளது. யாரிடமிருந்து இவை தோன்றுகிறதோ யாரிடம் இவை இருக்கின்றதோ ஊழி நாசத்தின் போது யாரிடம் இவை அடைக்கலம் புகுகின்றதோ அந்த கோவிந்தனை நான் வணங்குகிறேன்.
பதம் 52
யச்-சக்ஷுர் ஏஷ ஸவிதா ஸகல க்ரஹாணாம்
ராஜா ஸமஸ்த-ஸுரமூர்த்திர் அசேஷுதேஜா:
யஸ்யாஜ்ஞயா ப்ரமதி ஸ்ம்ப்ருத-கால-சக்ரோ
கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
மொழிபெயர்ப்பு
எல்லா கிரகங்களின் அரசன் சூரியன் இதன் ஒளி அளப்பரியது. நல்லாத்ம சொரூபன் சூரியன் இவ்வுலகத்தின் கண் போன்றது. சூரியன் காலசக்ரத்தில் ஏறி புவனத்தை பவனி வரும் சூரியன். பிரபு கோவிந்தனின் ஆணைப்படி நடப்பவர் அந்த கோவிந்தனை நான் வணங்குகிறேன்.
பதம் 53
தர்மோ”த பாப நிசயா: ஸ்ருதயஸ் தபாம்ஸி
ப்ரஹ்மாதி-கீட-பதகாவதயஸ் ச ஜீவா:
யத்-த த்த-மாத்ர-விபவ-ப்ரகட-ப்ரபாவா
கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
மொழிபெயர்ப்பு
நான் ஆதி ஆடவனான கோவிந்தனை வழிபடுகிறேன். இவர் வழங்கிய அதிகாரம் எல்லா பாவங்கள் புண்ணியங்கள் வேதங்கள் தவங்கள் ஜீவன்கள். பிரம்மா முதல் அற்ப பூச்சிவரை நிறைந்துள்ளன.
பதம் 54
யஸ் த்வ இந்த்ர-கோபம் அதவேந்த்ரம் அஹோ ஸ்வ-கர்மா
பந்தானுரூப-பல பாஜனம் ஆதனோதி
கர்மாணி நிர்தஹதி கிந்து ச பக்தி-பாஜாம்
கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
மொழிபெயர்ப்பு
கோவிந்தன் பக்தர்களின் கர்ம வினைகளை வேரோடு சுட்டெரித்து அழிக்கிறார். ஒவ்வொருவரும் தங்கள் வினைகளுக்கேற்ற பலனை அனுபவிக்குமாறு அவர் செய்கிறார். எந்தெந்த துறையில் மக்கள் இருந்தாலும் அவர்களின் முன் வினைகளில் பலனை அது இன்பமானாலும் துன்பமானாலும் அனுபவிக்கச் செய்கிறார். இந்திரகோபம் என்ற அற்ப பூச்சியானாலும் இந்திரனேயானாலும் அவரின் இந்த கட்டளையை மீற முடியாது.
பதம் 55
யம் க்ரோத-காம-ஸஹஜ-ப்ரணயாதி-பீதி-
வாத்ஸல்ய-மோஹ-குரு-கௌரவ-சேவ்ய-பாவை:
ஸஞ்சிந்த்ய தஸ்ய ஸ்த்ரூஷீம் தனும் ஆபுர் ஏதே
கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி
மொழிபெயர்ப்பு
சினம் காமஇச்சை இயல்பான நட்பு போன்ற அன்பு பயம் பெற்றோர் வாஞ்சை. ஏமாற்றம் மரியாதை விரும்பி செய்யும் சேவைபோன்ற மனநிலைகளில் கோவிந்தனை தியானிப்பவர்கள் தங்கள் தியான நிலைக்கேற்ப தேகத்தைப் பெறுகின்றனர். அப்படிப்பட்ட கோவிந்தனை நான் வணங்குகிறேன்.
பதம் 56
ஸ்ரிய: காந்தா: காந்த: பரம-புருஷ: கல்ப-தரவோ
த்ருமா பூமிஸ் சிந்தாமணி-கண-மயி தோயம் அம்ருதம்
கதா கானம் நாட்யம்ட கமனம் அபி வம்சீ ப்ரிய-ஸகீ
சித் ஆனந்தம் ஜ்யோதி: பரம் அபிதத் ஆஸ்வாத்யம் அபி ச
ஸ யத்ர க்ஷீராப்தி: ஸ்ரவதி ஸுரபிப்ஸ்ச ஸு மஹான்
நிமேஷார்தாக்யோ வா வ்ரஜதி ந ஹி யத்ராபி ஸமய:
பஜே ச்வேத த்வீபம் தமஹமிஹ கோலோகம் இதியம்
விதந்தஸ்தே சந்த: க்ஷதி-விரல-சாரா: கதிபயே
மொழிபெயர்ப்பு
ஸ்வேத தீபம் எனும் அந்த தெய்வீக இருப்பிடத்தை நான் வணங்குகிறேன். அங்கே பகவானின் அன்பு பத்தினியர் லக்ஷ்மிகள். இவர்கள் கலப்படமற்ற ஆன்மீகச்சாறு. க்ருஷ்ணரை தங்களின் காதலனாக எண்ணி ஏங்குபவர்கள். இங்குள்ள ஒவ்வொரு மரமும் கேட்டது தரும் கற்பக மரம் இதன் மண்ணோ சிந்தாமணி இங்கே தண்ணீர் எல்லாம் அமுதம் ஒவ்வொரு வார்த்தையும் பாட்டு ஒவ்வொரு அசைவும் அபிநயம் இங்கு புல்லாங்குழல் பிடித்த ஏவலாள். இங்கு வீசும் ஒளி பேரானந்தமானது. இங்கு உயர்ந்த ஆன்மீக இருப்புகள் எல்லாம் அனுபவிக்கத் தகுந்ததும் சுவை நிரம்பியதுமாகும். இங்கு வாங்கக்குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் பாற்கடலாக பால் சொரிந்து தள்ளுகின்றது. இங்கு அசையாமல் காலம் ஸ்தம்பித்து நிற்கின்றது. ஆகையால் எதிர்காலம் இல்லை. அரை நொடி கூட இங்கு கழிவதில்லை. அந்த உலகம் கோலோகம் யாருக்கு என்றால் ஒரு சில தன்னையறிந்த ஆத்மாக்களுக்கே
தண்டவத் பிரணாம் பிரபுஜி.
ReplyDeleteஇந்த தளத்தில் உள்ளவையனைத்தும் மிக சிறந்தவை. தமிழ் மக்களுக்கு கிருஷ்ணபக்தியை எடுத்துச் சொல்லும் உங்களது சேவை இன்றியமையாதது.
நான் ப்ரம்ம சம்ஹிதையின் தமிழ் வரிகளை தேடிய போதுதான் இந்த வலைத்தளம் தெரியவந்தது.
இதில் தமிழ் வரிகளில் சில பிழைகள் உள்ளன:
பதம் 48
//விஷ்ணர் மஹான் ஸ இஹ கலா விசேஷோ//
இதில் விஷ்ணுர், யஸ்ய என்பது வரவேண்டும் >> விஷ்ணுர் மஹான் ஸ இஹ யஸ்ய கலா விசேஷோ.
வாசித்துக்கொண்டு வந்த போது இந்த பத்தி சந்தத்தில் வரவில்லை அதனால் இந்த் பிழையை கண்டுபிடிக்க நேர்ந்தது. முழுவதும் படித்து மேலும் இருந்தால் தெரியப்படுத்துகிறேன்.
தாஸோஸ்மி
சுதன்வா தாஸ்
(வெலிங்டன், நியுசி)
ஹரே கிருஷ்ண பிரபு . திருத்தம் செய்து விட்டேன். மேலும் ஏதாவது பிழை திருத்தம் இருந்தால் தெரிவிக்கவும்
Deleteமிகவும் நன்றி 🙏
Hari om. In addition Sanskrit lyrics also if available along with Tamil lyrics kindly share. Thank you.
ReplyDelete