🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஶ்ரீ ராதா ரமணர் கோவில், ஶ்ரீல கோபாலபட்ட கோஸ்வாமியினால் தோற்றுவிக்கப்பட்டதாகும். இவர் பிருந்தாவனத்தின் ஆறு கோஸ்வாமிகளில் ஒருவராவார். ஸ்ரீல கோபாலபட்ட கோஸ்வாமி, சைதன்ய மகாபிரபுவின் போதனைகளை மிகவும் கண்டிப்புடன் பின்பற்றி வந்தார். இவர் வழிபட்ட சாளகிராமத்திலிருந்து தோன்றிய ஶ்ரீ ராதா ரமணர் விக்கிரகமானது மிகவும் அழகாகவும், மந்தகாசப் புன்னகையுடன் கூடியதுமாகும். 500 ஆண்டுகளுக்கு முன் பிருந்தாவனத்தில் சாளகிராமத்திலிருந்து சுயம்புவாக ஶ்ரீல கோப்பாலபட்ட கோஸ்வாமியின் வேண்டுதலுக்கிணங்கி ஶ்ரீ ராதா ரமணன் விக்ரகமாக மாறினார். இங்கு மிக உயர்ந்த தரத்திலான வழிபாடுகள் நடைபெற்று வருகின்றது.
ஸ்ரீ ராதா ரமணன் விக்ரஹம் 30 செ.மீ உயரமுள்ளது. கோபால பட்ட கோஸ்வாமியின் பிற சாள கிராமங்களும் இங்கு ஒன்றாக வழிபடப்படுகின்றன. ஸ்ரீ ராதா ரமணரின் விக்ரஹம் பிருந்தாவன கோஸ்வாமிகளின் விக்ரஹங்களில் தொன்மையானதாகும்.
இத்திருக்கோயிலில் ஸ்ரீமதி ராதாராணியின் அர்சா விக்ரகம் இல்லை. ஸ்ரீமதி ராதாராணியின் பெயரே வழிபாட்டில் உள்ளது. ஏனெனில் வேதங்களின் கூற்றுப்படி பகவானின் திருஉருவத்திற்கும் திருநாமத்திற்கும் வித்தியாசமில்லை, இரண்டும் ஒன்றே என்பதே அதன் கூற்று.
ஶ்ரீ ராதா ரமணரின் தோற்றம்
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
பகவான் ஶ்ரீ சைதன்யரின் மறைவிற்குப்பின் கோபாலப்பட்ட கோஸ்வாமி பகவானின் பிரிவை மிகவும் தீவிரமாக உணர்ந்தார். பகவான் தன் பக்தனின் மன வருத்தத்தை போக்க அவர் கனவில் தோன்றி, என் தரிசனம் வேண்டுமெனில் நேபாளத்திற்கு செல் என்றார்.
கோபால பட்ட கோஸ்வாமி நேபாளத்தில் புகழ்பெற்ற கண்டகி நதியில் ஸ்நானம் செய்தார். அப்போது அவருடைய கமண்டலத்தை, நீரில் அமிழ்த்திய போது, நிறைய சாளக்கிராம சிலாக்கள் கமண்டலத்தில் நிறைந்திருப்பதை கண்டு ஆச்சரியமடைந்தார். பின் மீண்டும் அவற்றை நதியிலேயே விட்டு விட்டார். மீண்டும் கமண்டலத்தை நீரில் முக்கிய போது மீண்டும் கமண்டலத்தில் சாளக்கிராமங்கள் வந்திருந்தன. அவர் மீண்டும் அதை நதியிலேயே விட்டார் இதுபோல இரண்டு, மூன்று முறை விட்டபோதும், சாளக்கிராம சிலாகள் மீண்டும் மீண்டும் கமண்டலத்தில் வந்தன. இறுதியில் 12 சாளக்கிராமங்கள் அவருடைய கமண்டலத்தில் அமர்ந்திருப்பதை பார்த்து, இது பகவானுடைய கருணையே அன்றி, வேறொன்றும் இல்லை என்பதை உணர்ந்தார். பிருந்தாவனத்துக்கு திரும்பிவரும் போது தன்னுடன் அந்த 12 சாளகிராம சிலாகளை எடுத்து வந்து வழிபட்டு வந்தார். அவர் எங்கு சென்றாலும் ஒரு துணியில் கட்டி தன்னுடன் எடுத்துச் செல்வது வழக்கம்
ஒருநாள் ஒரு செல்வந்தர், பிருந்தாவனத்திற்கு வந்த போது , மிக அழகான ஆடைகளையும் விலை உயர்ந்த ஆபரணங்களை அளித்து பகவத் கைங்கர்யத்திற்காக உபயோகிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் விண்ணப்பித்தார். ஆனால் கோபாலபட்ட கோஸ்வாமி தன் உருண்டை வடிவ சாளகிராமத்திற்கு அந்த ஆடை ஆபரணங்களை அணிவிக்க முடியவில்லை. அதனால் அவைகளை வேறு யாருக்காவது அளிக்கும்படி செல்வந்தரிடம் கூறினார். ஆனால் செல்வந்தர் மறுத்துவிட்டார். இந்நிலையில் கோபாலபட்ட கோஸ்வாமி, பகவான் நரசிம்மர் எவ்வாறு ஹிரண்யகசிபுவின் அரண்மனையில் பாதி சிங்கம் பாதி மனிதனாக தூணிலிருந்து திவ்யமாக தன்னை வெளிப்படுத்தி லீலை புரிந்தார் என்பதை நினைத்து அந்த திவ்ய காட்சிகளில் லயித்திருந்தார். தெய்வீகமான அந்த சூழ்நிலையில் அவர் பகவானிடம் " ஓ பகவானே நீங்கள் பக்தர்களின் விருப்பத்தை அறிவீர்கள் ,தங்களுக்கு சேவை செய்யும் பொருட்டு அழகிய புஜங்களையும், பாதங்களையும், தாமரை கண்களையும் அழகிய புன்னகையுடன் கூடிய முக கமலத்தையும் ஒருங்கே அமைந்த ஓர் அற்புத தெய்வீக விக்ரகத்தை எனக்கு அளியுங்கள் என்று வேண்டினார். அவ்வாறு தனக்கு அளித்தால் அதை மிக அழகாக ஆடை ஆபரணங்களால் அலங்கரித்து நான் பூஜித்து மகிழ்வேன் என்று வேண்டினார்.
மாலையில் கோபாலபட்ட கோஸ்வாமி சாளக்கிராமங்களுக்கு மிகச்சிறந்த ஆராதனை மற்றும் மிகவும் சுவையான நைவேத்தியம் அளித்து பின் அவைகளை ஒரு அழகான கூடையில் மூடி வைத்து ஓய்வெடுக்க செய்தார் . அதிகாலையில் எழுந்து யமுனை நதியில் நீராடி திரும்பியதும் பூஜைக்காக சாளகிராமம் உள்ள கூடையை திறந்தபோது, அதில் மிகவும் அழகிய புல்லாங்குழல் ஊதும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் விக்கிரகம் த்ருபங்க வடிவில் (மூன்று வளைவுகள் கொண்ட ) சாளக்கிராமங்களுக்கிடையில் இருந்ததை பார்த்தார். தற்போது அங்கு 12 சாளகிராமங்களில் ஒரே ஒரு சாளக்கிராமம் அழகிய கிருஷ்ணராக மாறி இருப்பதை பார்த்து ஆனந்த பரவசத்தில் நிலத்தில் விழுந்து தனது பணிவான வணக்கங்களை அர்ப்பணித்து, பலவிதமான பிரார்த்தனைகளையும், கீர்த்தனைகளையும் செய்து வழிபட்டார்.
இந்த அற்புதமான ஶ்ரீ ராதா ரமண அவதார தினம் பகவான் நரசிம்ம சதுர்த்தசிக்கு மறுநாள் நிகழ்ந்தது . ஆகையால் அன்றைய தினம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ ராதா ரமணரின் அவதார தினத்தன்று 500 லிட்டர் பால் மற்றும் பிற இனிப்பு வகைகள் பகவானின் மகிழ்ச்சிக்காக அர்ப்பணிக்கப்படுகிறது. ராதா ரமணரின் அவதார தினத்தில் மிக உயர்ந்த தரத்திலான ஸ்ரீ விக்ரக ஆராதனை நடைபெறுகிறது.
ரூப கோஸ்வாமி விக்ரகத்திற்கு பெயர் சூட்டுதல்
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
இந்த அதி அற்புத நிகழ்வினை கேள்வியுற்ற ஶ்ரீல ரூப கோஸ்வாமியும் , ஸ்ரீல ஸநாதன கோஸ்வாமியும் பகவானை காண விரைந்து வந்தனர். இப்பூவுலக மக்களையும், பிற கிரகங்களில் வாழ்பவர்களையும் திகைக்க செய்யும் பகவானின் அதி அற்புதமான ஶ்ரீ விக்ரகத்தை பார்த்த மாத்திரத்தில் கண்ணீர் மல்க, அவரை பணிந்தனர்.
ஶ்ரீல ரூப கோஸ்வாமி அந்த அதி அற்புத விக்கிரகத்தை ஸ்ரீ ராதா ரமணன் என்றழைத்தார். ஏனெனில் அவர் தோன்றிய அந்த இடம் விரஜ பூமியில் " நிதுவனம்" என்று அழைக்கப்படுகிறது. அந்த இடத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஶ்ரீமதி ராதா ராணிக்கு அளப்பரிய ஆனந்தத்தை அளிக்கிறார் என்று பொருள்.
ஸ்ரீ ராதா ரமணர் தனது தோற்றத்தை 1542 ஆம் ஆண்டு வைகாசி திங்களில் பௌர்ணமி நாளில் நிகழ்த்தினார். விருந்தா தேவியை தவிர ராதா ரமணர் மட்டுமே பிருந்தாவனத்தை விட்டு ஜெய்ப்பூர் செல்லாத ஒரே ஸ்ரீ விக்ரகம் ஆவார்.
ஶ்ரீ ராதா ரமணன் ஜி இன்றளவும் நிதுவன் குஞ்சு என்ற இடத்தில் வழிபடப்படுகிறார் ராதா ரமணா விக்ரகத்தில் வேறு எந்த விக்ரகத்திலும் காண முடியாத மிக நுணுக்கமாக நகங்கள் பற்கள் காணப்படுகின்றன. இந்த அர்சா விக்ரகத்தின் பின்புறம் எந்த சாளக்கிராம சீலா விலிருந்து அவர் தோன்றினாரோ அந்த சிளாவின் முதன்மையான தோற்றத்தை காணலாம். இங்கு ஸ்ரீமதி ராதாராணிக்கு அர்சா விக்ரகம் கிடையாது ஏனெனில் ராதா ராணிக்கு சுயம்புவாக தோன்றவில்லை. தற்போது இந்தக் கோவிலானது 1826 ஆம் ஆண்டு சார் பிஹாரி ராஜ் என்பவரால் 9 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டது அவர் லக்னோவை சேர்ந்தவர்
இங்குள்ள பூஜைமுறைகள் முதலில் சாளகிராமத்திற்கும் பின் ராதா ரமணாருக்கும் பின் கோபாலபட்ட கோஸ்வாமி க்கும் கொண்டருள செய்கின்றனர். இங்குள்ள மடப்பள்ளி நெருப்பானது தொடர்ந்து 450 ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கிறது. நவீன தீப்பெட்டியோ வேறு ஏதும் பயன்படுத்துவதில்லை தற்போதைய திருக்கோவில் கட்டப்படுவதற்கு முன் இருந்த கோவில் மடப்பள்ளி யாக மாற்றப்பட்டிருக்கிறது.
திருக்கோவிலுக்கு இடப்புறம் கோபால பட்ட கோஸ்வாமியின் சமாதி அமைந்துள்ளது கோஸ்வாமி தனது 85-வது வயதில் மறைந்தார் சைதன்ய மகாபிரபு 1596ஆம் ஆண்டு மறைந்த பின், அடுத்து வரும் நூறாவது ஆண்டில் சிரவண மாதத்தில் சுக்லபட்ச பஞ்சமி திதியில் கோபால பட்ட கோஸ்வாமியின் மறைந்த திதி கொண்டாடப்படுகிறது. இங்கு தினமும் பாகவதம் உபன்யாசம் கீர்த்தனைகள் நடைபெறுகிறது ஶ்ரீ ராதா ரமணரின் மகா பிரசாதம் தினமும் இருமுறை இங்கு வழங்கப்படுகிறது.
ஸ்ரீ ராதா ரமணருக்கு ஜெய்....
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
சுத்த பக்தி https://t.me/suddhabhaktitami
Comments
Post a Comment