நாமாஷ்டகம்
*****************************************************************************
பதம் 1
நிகிலா சுருதி மௌலி ரத்னா மாலா
த்யுதி நிராஜித பாத பங்கஜாந்த
அயி முக்த குலைர் உபாஸ்யமானம்
பரிதாஸ் த்வம் ஹரி நாம ஸம்ஸரயாமி
மொழிபெயர்ப்பு
ஓ ஹரி நாமமே! தங்களுடைய தாமரை மலர்பாதங்களின் விரல் நுனி, நவரத்தினங்களால் தொடுக்கப்பட்ட மாலையின் தேஜஸை போலுள்ள உபநிஷதங்களால் வணங்கப்படுகிறது. தாங்கள் அணைத்து வேதங்களின் கிரீடம். தாங்கள் நாரதர், சுகதேவர் போன்ற முக்தி அடைந்த ஆத்மாக்களால் எப்போதும் போற்றாடுகிறீர்கள். ஓ ஹரி நாமமே! நான் தங்களிடம் முழுமையாக தஞ்சமடைகிறேன்.
பதம் 2
ஜய நாமதேய முனி வ்ரிந்தா ஜெய ஹி
ஜன ரஞ்சனாய பரம் அக்சராகரித்தே
த்வம் அநாதராத் அபி மனாஃ உதிரிதம்
நிகிலோக்ரா தாப பதலிம் விழும்ப்ஸி
மொழிபெயர்ப்பு
ஓ ஹரி நாமமே! சாதுக்களால் போற்றப்படுபவரே! தங்களுடைய நாமம் பக்தர்களிடையே பேரானந்தத்தை ஏற்படுத்துகிறது; தங்களுடைய நாமத்தை ஒருவர் ஒரு முறை உச்சரித்தால் கூட அதன் முழு பலனையும் தருபவரே; யாரேனும் உங்களது நாமத்தை விமர்சிப்பதற்காக (கேலியாக) பயன்படுத்தினாலும் கூட, அவர்களின் துன்பத்தை போக்குபவரே! தங்களுக்கு என்னுடைய வணக்கங்கள்.
பதம் 3
யத் ஆபாசோ அபி உதயந் கவலித பாவ தவாந்த விபவோ
த்ரீஷாம் தத்வாந்தானாம் அபி திஸதி பக்தி பிரனாயினேம்
ஜனஸ் தாஸியோதாட்டம் ஜகதி பகவான் நாம தரனே
க்ரிதி தி நிர்வகத்தும் க இஹ மஹிமானம் பிரபாவதி
மொழிபெயர்ப்பு
ஓ ஹரி நாமத்தின் பேரொளியே! விடியற்காலை பொழுதில் உதிக்கும் சூரியனை போலுள்ள "நாமாபாஸா", பௌதிக உலகின் இருட்டில் தவிக்கும் மக்களுக்கு, இந்த ஒளியானது, "பகவான் கிருஷ்ணருடைய பக்தி தொண்டு" என்ற உண்மையை விளக்குகிறது. தங்களுடைய திவ்யமான மகிமைகளை, இந்த உலகில் தலை சிறந்த பண்டிதரும் கூட முழுமையாக விளக்க முடியாது.
பதம் 4
யத் பிரம்ம சாக்சத் கிர்தி நிஸ்தயாபி
விநாசம் ஆயதி வினா ந போகை
அபைதி நாம ஸ்புரனென தட் தே
பிராரப்த கர்மேதி விப்ருதி வேத:
மொழிபெயர்ப்பு
ஓ ஹரி நாமமே! வேதங்கள் ஒன்றை தெளிவு படுத்துகின்றன - தியானமோ அல்லது அருவ பிரம்மனின் வழிபாடோ ஒரு ஆத்மாவிற்கு முக்தி தராது. ஆனால் யாரொருவர் தங்களுடைய நாமத்தை உச்சரிக்கிறாரோ, அவருடைய கர்மங்கள் அனைத்தும் நீங்கி நிச்சயம் முக்தி பெறுவார்.
பதம் 5
அகதமான யசோதா நந்தனாவ் நந்தசுனோ
கமலநாயனா கோபிச்சந்திர விரிந்தவனேந்திர
ப்ரணதகருணைக்ரிஷ்னாவ் இதி அநேக ஸ்வரூபே
த்வயி மாமா ரதிர் உச்சர் வர்ததாம் நாமதேய
மொழிபெயர்ப்பு
ஓ ஹரி நாமமே! தங்களுடைய பல ரூபங்கள் - அகதமனா (அகாசுரனை கொன்றவர்), யசோதா நந்தன (யசோதையின் புதல்வர்), நந்தசுனு (நந்த மஹாராஜரின் புதல்வர்), கமல நயனா (தாமரை கண்கள் உடையவர்), கோபி சந்திரா (கோபியர்கள் நிலவு), விருந்தவனேந்திரா (விருந்தாவனத்தின் அரசர்), ப்ரணத கருணா (தஞ்சமடைந்த ஆத்மாக்களுக்கு கருணை காண்பிப்பவரே), கிருஷ்ணா - இந்த ரூபங்களின் மீது எனக்கு அன்பும் பக்தியும் அதிகரித்து கொண்டே இருக்க வேண்டும்.
பதம் 6
வாசியம் வாசகம் இதி உதேதி பாகவதோ நாம ஸ்வரூப த்வயம்
பூர்வசமாத் பரம் ஈவா ஹந்த கருணம் தத்ராபி ஜானிமாஹே
எஸ் தஸ்மின் விஹிதபராத நிவஹ ப்ராணி சமந்தாத் பவேத்
ஆசியேநெதம் உபாஸ்ய சோ அபி ஹி சதானந்தாம் பூதள மஜ்ஜதி
மொழிபெயர்ப்பு
ஓ ஹரி நாமமே! தாங்கள் இரு விதமாக வியாபித்திருக்கிறீர்கள் - ஹரி நாமத்தில் உள்ள முழுமுதற் கடவுள், ஹரி நாமத்திலிருக்கும் ஒலி அதிர்வு. இந்த இரண்டையும் ஒப்பிட்டு பார்க்கையில், முதலாவதை காட்டிலும் இரண்டாவது மிகவும் கருணை வாய்ந்தது. ஏனெனில், முழுமுதற் கடவுளை அபராதம் (
குற்றம்) செய்தாலும் கூட, ஒருவர், ஹரி நாமத்தின் ஒலி அதிர்வில்
தன்னை ஈடுபடுத்தினால் நிச்சயம் பயனடைவான்.
பதம் 7
சூதிதாசரித்த ஜனார்த்தி ராஸயே
ரம்ய சித் கன சுக ஸ்வரூபினே
நாம கோகுல மஹோட்சவாய தி
கிருஷ்ணா பூர்ண வபுஸ் நமோ நமஹ
மொழிபெயர்ப்பு
ஓ பூரணமான ஹரி நாமமே! தீவிரமான ஆன்மீக பேரானந்தத்தின் இருப்பிடம் தாங்கள். தங்களிடம் தஞ்சமடைந்தவர்களின் துன்பங்களை நீக்குபவர் தாங்கள். கோகுலத்தில் தாங்கள் என்றென்றும் ஒரு திருவிழாவின் ஆனந்தம். நான் தங்களுக்கு மீண்டும் மீண்டும் எனது வணக்கங்களை செலுத்திகிறேன்.
பதம் 8
நாரத வீணோஜீவன
சுதோர்மி நிர்யாச மாதுரி பூர
த்வம் கிருஷ்ணா நாம காமம்
ஸ்புர மீ ரசனே ரசேன சதா
மொழிபெயர்ப்பு
ஓ கிருஷ்ணரின் நாமமே! நாரதருடைய வீணையின் உயிர் நாடியே! அமிர்தத்தை போன்ற சுவையுடையவரே! தாங்கள் விரும்பினால், பகவானுடைய அன்புடன் என்னுடைய நாவில் தோன்றும்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment