🍁🍁🍁🍁🍁🍁🍁
அர்ஜூனன் ஸ்ரீ கிருஷ்ணரின் பாதாரவிந்தங்களில் நமஸ்கரித்து, சிரத்தையுடனும் பணிவுடனும் கிருஷ்ணரிடம், " ஹே சச்சிதானந்தபரம்பொருளான ஸ்ரீ கிருஷ்ணா!, இப்பொழுது புஷ்ய மார்கழி மாதம் சுக்லபட்ச ஏகாதசியைப் பற்றி கூறுங்கள்" என்று வேண்டி நின்றான். இந்தஏகாதசியின் மகத்துவம், அதன் பெயர், அன்று வழிபட வேண்டிய தெய்வம், விரத வழிமுறைகள், இவற்றைப்பற்றி எல்லாம் விரிவாகஉபதேசிக்க வேண்டும்" என்றான்.
அர்ஜூனின் வேண்டுகோளைக் கேட்ட ஸ்ரீ கிருஷ்ணர்," ஹே ராஜனே, புஷ்ய மாதம் சுக்ல பட்ச ஏகாதசி, புத்ரதா ஏகாதசி என்னும்பெயரால் அறியப்படுகிறது. முந்தைய ஏகாதசி மஹாத்மியங்களில் கூறிய பூஜை விதிகளின் படி அன்று பூஜை செய்ய வேண்டும். விரதநாளன்று வழிபட வேண்டிய தெய்வம் ஸ்ரீமன் நாராயணன் ஆவார். இவ்வுலகில் புத்ரதா ஏகாதசி விரதத்திற்கு சம்மான விரதம் வேறுஎதுவும் இல்லை. இவ்விரதம் மேற்கொள்ளுவதால் கிட்டும் புண்ணிய பலன் ஆனது ஒருவரை தபஸ்வி, வித்வான் மற்றும் தனவான்ஆக்கும் வல்லமை பெற்றது. இந்த ஏகாதசியின் மஹிமையைக் கூறும் பிரசித்தி பெற்ற கதையை உனக்கு கூறுகிறேன். கவனத்துடன்கேள்." என்றார்.
"ஒரு சமயம், பத்ராவதி நகரில் சுகேதுமான் என்னும் பெயர் கொண்ட ராஜன், ஆட்சி புரிந்து வந்தான். அவனுக்கு புத்ர பாக்கியம்இல்லாமல் இருந்தது. அவன் மனைவியின் பெயர் ஷௌவ்யா. அவளுக்குக் குழந்தை இல்லாததால், அதைப் பற்றிய கவலையில் சதாசர்வ காலமும் (அதைப் பற்றிய) கவலையுடன் சிந்தனையில் ஆழ்ந்து இருந்தாள். ராஜாவின் மனதையும் குழந்தை இல்லா குறையும், தனக்கு பிறகு தனக்கும், தன் மூதாதையர்களுக்கும் யார் பிண்ட தானம் அளிப்பர் என்ற கவலையும் மிகவும் வருத்திக்கொண்டிருந்தது.
அவனின் மூதாதையர்களும், இவனுக்குப் பிறகு யார் தங்களுக்கு பிண்டம் வழங்குவர் என்ற கவலையால், அழுது கொண்டே அவன்வழங்கிய பிண்டத்தை பெற்றனர். ராஜாவை சுற்றியிருந்த உற்றார், உறவினர், மந்திரி, நண்பர், ராஜ்ஜியம், யானை, குதிரை எதுவும்அவனுக்கு மகிழ்ச்சியை அளிக்கவில்லை. இதற்கான ஒரே காரணம் குழந்தை இல்லை என்பது தான். புத்ரர் இல்லாமல் பித்ரு மற்றும்தேவர் கடனிலிருந்து விடுபட இயலாது. மழலைச் செல்வம் இல்லா வீட்டில் எப்போதும் இருட்டு குடி கொண்டிருக்கும்.
இப்படியாக ராஜா சுகேதுமான் இரவு - பகல் இதைப் பற்றிய சிந்தனையுடனே குழம்பித் தவித்துக் கொண்டிருந்தான். இதேசிந்தனையில் ஒரு நாள் மிகவும் துக்கமடைந்து தன் உயிரைத் தியாகம் செய்தால் என்ன என்னும் எண்ணம் தோன்றியது. ஆனால்தற்கொலை செய்வது மிகவும் கோழையான செயல் மட்டுமல்ல மிகவும் பாபகரமான செயலும் ஆதலால் அத்தகைய எண்ணத்தைகைவிட்டான்.ஒரு நாள் இதே சிந்தனையில் ஆழ்ந்து குதிரையில் அமர்ந்து வனத்தை நோக்கி பயணித்தான்.
ராஜா குதிரையில் பயணத்தின் இறுதியில் வனத்தை அடைந்தான். வனத்தில் பட்சிகளையும், விருட்சங்களையும் கண்டு கொண்டேபயணித்தான். வனத்தில் மிருகங்கள், சிங்கம், குரங்குகள், சர்ப்பம், புலி இவையெல்லாம் சஞ்சரித்துக் கொண்டு இருப்பதை கண்டான். யானைகள், தன் மனைவி மற்றும் குட்டிகளுடன் ஆனந்தமாக சஞ்சரிப்பதை கண்டான். அந்த வனத்தில் ராஜா வெகு துரத்தில்சிங்கத்தின் கர்ஜனை சப்தத்தையும், அழகிய மயில், தன் குடும்பத்தாருடன் குதூகலமாக நடனமாடுகிற காட்சியையும் கண்டான்.
வனத்தின் சந்தோஷமான காட்சிகளைக் கண்டதும், 'தான் ஒருவன் மட்டும் ஏன் புத்ர பாக்கியம் இல்லாமல் போனோம்!!' என்றகவலையால் ராஜாவின் துக்கம் அதிகமாயிற்று. இதே சிந்தனையில் நேரம் போனதே தெரியவில்லை. மத்தியான வேளைஆகிவிட்டதால், பசியும், தாகமும் ராஜாவை வருத்தியது.
அநேக யக்ஞங்கள், பிராமமணர்களுக்கு மதுரமான போஜனம் இவையெல்லாம் செய்தும், எனக்கு ஏன் இந்த துக்ககரமான நிலைஏற்பட்டது?' என்று சிந்தனையில் ஆழ்ந்தான். 'இதற்கான காரணம் என்ன? யாரிடம் சென்று என் நிலைமையை சொல்லுவேன்?. யார்என்னுடைய அவஸ்தையை கேட்பர்?' என்று பலவிதமாக எண்ணங்களால் அலைக்கழிக்கப்பட்டான். இப்படி சிந்தனையின் வசப்பட்டராஜா தாகத்தால் தவிக்க ஆரம்பித்தான். தொண்டை வறண்டு போனதால், குடிநீரைத் தேடி அலைந்தான். தேடிக் கொண்டேவந்தவனுக்கு, சற்று துரத்தில் தாமரை மலர்கள் நிறம்பிய ஒரு சரோவரம்(குளம்) தென்பட்டது. நாரை, அன்னம், முதலை, மீன்கள்ஆகியவை நீரில் ஜலக்கிரீடை செய்து வந்தன. தடாகத்தைச் சுற்றி நாலா பக்கங்களிலும் தவத்தில் ஆழ்ந்த முனிவர்களின் ஆசிரமங்கள்அமைக்கப்ப்ட்டு இருந்தன. அவ்வேளையில் ராஜாவின் வலது கண் துடித்தது. அதை நற்சகுனமாக கருதி மகிழ்ச்சியடைந்து, குதிரையில் இருந்து இறங்கி தடாகத்தின் கரையில் அமர்ந்திருந்த முனிவர்களுக்கு நமஸ்காரம் செய்து, அவர்கள் முன்னால்அமர்ந்தான்.
முனி சிரேஷ்டர் ராஜனைக் கண்டு,"ஹே ராஜன், உன்னைக் கண்டு அத்யந்த ஆனந்தமடைந்தோம். உனக்கு என்ன வேண்டும் கேள்!!." என்றார்.
ராஜா," ரிஷி சிரேஷ்டரே, தாங்கள் யார்? எதற்காக இத்தடாகத்தைச் சுற்றி பர்ணசாலை அமைத்து குடிக்கொண்டு இருக்கிறீர்கள்?." என்று வினவினான்.
முனிவர் அதற்கு," ராஜனே, இன்று குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கு உத்தமமான சந்தானத்தை அளிக்கும் புத்ரதா ஏகாதசிநாளாகும். நாங்கள் விஸ்வதேவர்கள் ஆவோம். இன்றிலிருந்து ஐந்தாவது நாள் மாசி மாத ஸ்நான நாள் ஆகும். அன்று இத்தடாகத்தில்ஸ்நானம் செய்வதற்காக வந்துள்ளோம்" என்றார்.
இதைக் கேட்டதும் ராஜன்," முனி சிரேஷ்டரே!, நானும் புத்ர பாக்கியம் இல்லாமல் வருந்துகிறேன். நீங்கள் என் மீது இரக்கம் கொண்டு, எனக்கு புத்ர பாக்கியம் அருளும் வரத்தை அளிக்க வேண்டும்." என்றான்.
முனிவர்," ஹே ராஜன், இன்று அற்புதமான புத்ரதா ஏகாதசி நாளாகும். நீ இன்று விதிப்படி ஏகாதசி விரதத்தை கடைப்பிடி. பகவான்நாராயணனின் கிருபாகடாக்ஷத்தால் உனக்கு நிச்சயம் புத்ரன் பிறப்பான்." என்று அருளினார்.
முனிவரின் வார்த்தைப்படி ராஜா, அன்று ஏகாதசி விரதத்தை விதிப்படி அனுஷ்டித்து, மறுநாள் துவாதசியன்று விரதத்தை நிறைவுசெய்தான். பிறகு முனிவர்களை நமஸ்கரித்து ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொண்டு நாட்டிற்குத் திரும்பினான். பகவான்நாராயணனின் திருவருளால் சில மாதங்களில் மகாராணி கர்ப்பம் அடைந்தாள். பிறகு ஒன்பது மாதங்களுக்குப் பிறகு உத்தமமானபுத்ரனை பெற்றாள். ராஜகுமாரன் வளர்ந்து அதிபராக்கிரமசாலியாகவும், தனவானாகவும், யசஸ்வியாகவும், மக்களைரட்சிப்பவனாகவும் விளங்கினான்''..
இவ்வாறு அருளிய ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா," ஹே அர்ஜூன்!, புத்ர பாக்கியம் வேண்டுவோர் அவசியம் புத்ரதா ஏகாதசி விரதத்தைஅனுஷ்டிக்க வேண்டும். புத்ர பாக்கியம் அளிப்பதில் இதைவிட மேலான விரதம் வேறு எதுவும் இல்லை. எவர் ஒருவர் புத்ரதா ஏகாதசிமஹாத்மியத்தை படிக்கிறாரோ, கேட்கிறாரோ அல்லது விதிப்பூர்வமாக ஏகாதசி விரதத்தை அனுஷ்டிக்கிறாரோ, அவர் சர்வநற்குணங்களும் கொண்ட உததமமான புத்ர ரத்னத்தை பெறுவார். ஸ்ரீமன் நாராயணன் அருளால், விரதத்தை அனுஷ்டிப்பவர் மோட்சப்பிராப்தியையும் அடைவார்" என்று அருளினார் .
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
Comments
Post a Comment