ஸ்ரீ கௌரங்க அஷ்டோத்தர சத நாம ஸ்தோத்திரம்


 ஸ்ரீ கௌரங்க அஷ்டோத்தர சத நாம ஸ்தோத்திரம்


 பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாப்ரபுவின் நூற்றியெட்டு நாமங்கள் (ஸர்வபூம பட்டாச்சார்யாரால் அருளப்பட்டது)


🍁🍁🍁🍁🍁🍁


பதம் 1. 


🍁🍁🍁🍁🍁🍁


நாமஸ்க்ரித்ய பிரவக்ஷ்யாமி

தேவ தேவம் ஜகத் குரும் 

நாம்நாம் அஷ்டோத்தர சதம் 

சைதன்யஸ்ய மஹாத்மநஹ 


அகில உலகங்களுக்கும் ஆன்மீக குருவாக திகழும் பகவானுக்கெல்லாம் பகவானாக விளங்குபவருக்கு எனது பணிவான வணக்கங்களை சமர்ப்பித்துவிட்டு பகவான் ஸ்ரீ சைதன்யரின் நூற்றியெட்டு திவ்ய நாமங்களை வர்ணிக்கின்றேன்.


பதம் 2


🍁🍁🍁🍁🍁🍁


விஸ்வம்பரோ ஜித க்ரோதோ 

மாயா மானுஷ விக்ராஹ அமாயி 

மாயினாம் ஷ்ரேஸ்டோ வரோ

தேசோ ட்வீஜோத்தமஹா 


கௌரங்க மாஹாபிரபுவே இந்த பிரபஞ்சத்தை தக்கவைப்பவர்; பௌதிக க்ரோதத்தை வென்று காட்டுபவர்; மானுடரைப்போல் மாயை தோற்றத்தில் காட்சியளிப்பவர்; ஏமாற்றும் தன்மை இல்லாதவர்; பல லீலைகள் புரிவதில் மன்னர்; பூமிகளில் சிறந்த பூமியில் அவதரித்தவர்; பிராமணர்களுள் சிறந்தவர்.


1. விஸ்வம்பரா - இந்த பிரபஞ்சத்தை தக்கவைப்பவர் 

2. ஜித க்ரோத - பௌதிக க்ரோதத்தை வென்று காட்டுபவர் 

3. மாயா மனுஷ விக்ராஹ -  மானுடரைப்போல் மாயை தோற்றத்தில் காட்சியளிப்பவர் 

4. அமாயி - ஏமாற்றும் தன்மை இல்லாதவர்

5. மாயினாம் சிரேஷ்ட - பல லீலைகள் புரிவதில் மன்னர் 

6. வர தேச - பூமிகளில் சிறந்த பூமியில் அவதரித்தவர் 

7. ட்வீஜோத்தம -  பிராமணர்களுள் சிறந்தவர்


பதம் 3. 


🍁🍁🍁🍁🍁🍁


ஜெகந்நாத ப்ரியா சுத 

பித்ர் பக்தோ மஹா மனாக 

லட்சுமி காந்த சச்சி புத்ரஹா 

ப்ரேமதோ பக்த வத்சலா 


கௌரங்க மஹாப்ரபு ஜெகநாத் மிஷ்ராவின் பிரியமான புத்திரன்; ஜெகன்னாத் மிஸ்ராவின் பக்தர்; புத்தி கூர்மை உடையவர்; அதிர்ஷ்டத்தின் உறைவிடமான லட்சுமி தேவியின் பிரியமான கணவர்; சச்சி மாதாவின் புதர்வர்; பக்தி ப்ரேமையை வாரிவழங்குபவர்; பக்தர்களுக்கு மிகவும் ப்ரியமானவர்.


8. ஜெகந்நாத ப்ரியாஸுதா- ஜெகநாத் மிஷ்ராவின் பிரியமான புத்திரன் 

9. பித்ர் பக்தோ - ஜெகன்னாத் மிஸ்ராவின் பக்தர் 

10. மஹா மனாக - புத்தி கூர்மை உடையவர் 

11. லட்சுமி காந்த -  அதிர்ஷ்டத்தின் உறைவிடமான லட்சுமி தேவியின் பிரியமான கணவர் 

12 . சச்சி புத்ரஹா - சச்சி மாதாவின் புதர்வர் 

13. ப்ரேமதோ பக்தி -  ப்ரேமையை வாரிவழங்குபவர்

14. பக்த வத்சலா -  பக்தர்களுக்கு மிகவும் ப்ரியமானவர்


பதம் 4. 


🍁🍁🍁🍁🍁🍁


த்விஜ ப்ரியா த்விஜ வரோ 

வைஷ்ணவ ப்ராண நாயாக 

த்வி ஜாதீ பூஜகாஹா சாந்த 

ஸ்ரீவாச ப்ரியா ஈஸ்வர


 இரண்டாம் தீக்ஷை பெற்ற பிராமணர்களுக்கு மிகவும் ப்ரியமானவர்; பிராமணர்களுள் சிறந்தவர்; பக்தர்களின் உடலுக்கும் ஆத்மாவிற்கும் நாயகர்; பிராமணர்களின் வணக்கத்திற்குரியவர்; அமைதியும் ஆன்மீகமயமும் கொண்டவர்; ஸ்ரீவாச பண்டிதருக்கு மிகவும் ப்ரியமானவர்; பரம ஆளுனர்;


15. த்விஜ ப்ரியா - இரண்டாம் தீக்ஷை பெற்ற பிராமணர்களுக்கு மிகவும் ப்ரியமானவர் 

16. த்விஜ வர - பிராமணர்களுள் சிறந்தவர் 17. வைஷ்ணவ ப்ராண நாயாக - பக்தர்களின உடலுக்கும் ஆத்மாவிற்கும் நாயகர் 

18. த்விஜ ஜாதீ பூஜக - பிராமணர்களின் வணக்கத்திற்குரியவர் 

19. சாந்த - அமைதியும் ஆன்மீகமயமும் கொண்டவர் 

20. ஸ்ரீவாச ப்ரியா - ஸ்ரீவாச பண்டிதருக்கு மிகவும் ப்ரியமானவர்

21. ஈஸ்வர - பரம ஆளுனர்


பதம் 5. 


🍁🍁🍁🍁🍁🍁


தப்த காஞ்சன கௌரங்க 

சிம்ம க்ரீவோ மஹா புஜா 

பிதா வாசா ரக்த பத்தக 

சத் பூஜோ அத சதுர் புஜா 


 உருகிய பொன்னிறத்தை போன்ற திருமேனி உடையவர்; சிங்கத்தை போன்ற கழுத்துடையவர்; வலிமையான தோள்களை உடையவர்; கிரஹஸ்தராக இருந்தபோது மஞ்சள் நிற ஆடையணிந்தவர்; சந்நியாசியாக இருந்தபோது சிவப்பு நிற ஆடையணிந்தவர்; ஆறு கரங்களுடன் காட்சியளிப்பவர்; மேலும் நான்கு கரங்களுடன் காட்சியளிப்பவர் 


22. தப்த காஞ்சன கௌரங்க - உருகிய பொன்னிறத்தை போன்ற திருமேனி உடையவர் 

23. சிம்ம க்ரீவ - சிங்கத்தை போன்ற கழுத்துடையவர் 24. மஹா புஜா -  வலிமையான தோள்களை உடையவர் 

25. பித வாசா -  கிரஹஸ்தராக இருந்தபோது மஞ்சள் நிற ஆடையணிந்தவர் 

26. ரக்த பட்ட -  சந்நியாசியாக இருந்தபோது சிவப்பு நிற ஆடையணிந்தவர் 

27. சத் புஜா - ஆறு கரங்களுடன் காட்சியளிப்பவர் 

28. சதுர் புஜா - மேலும் நான்கு கரங்களுடன் காட்சியளிப்பவர்


பதம் 6. 


🍁🍁🍁🍁🍁🍁


த்வி புஜஸ் ச கதா பாணி 

சக்ரி பத்ம தரோ அமலா 

பாஞ்ச சன்யா தரஹ சாரங்கி 

வேணு பாணி சுரோத்தமஹா 


இரு கரங்களுடன் காட்சியளிப்பவர்; கதையை தாங்கி நிற்பவர்; சுதர்ஷன சக்கரத்தை உடையவர்; தாமரை மலரை தாங்கி நிற்பவர்; பாவங்களுக்கு அப்பாற்பட்டவர்; பாஞ்சஜன்யம் பெயருடைய சங்கை கொண்டவர்; அம்பை உடையவர்; புல்லாங்குழலை உடையவர்; தேவர்களுக்கெல்லாம் முன்னோடி. 


29. த்வி புஜஸ் -  இரு கரங்களுடன் காட்சியளிப்பவர்

 30. கதா பாணி - கதையை தாங்கி நிற்பவர் 

31. சக்ரி - சுதர்ஷன சக்கரத்தை உடையவர் 

32. பத்ம தரா - தாமரை மலரை தாங்கி நிற்பவர் 

33. அமலா - பாவங்களுக்கு அப்பாற்பட்டவர் 

34. பாஞ்சஜன்ய தாரா -  பாஞ்சஜன்யம்  பெயருடைய சங்கை கொண்டவர் 

35. சாரங்கி - அம்பை உடையவர்

36.  வேணு பாணி -  புல்லாங்குழலை உடையவர் 

37. சுரோத்தம -  தேவர்களுக்கெல்லாம் முன்னோடி


பதம் 7.


🍁🍁🍁🍁🍁🍁


கமலாக்ஷேஸ்வர ப்ரீதா கோப லீலாதரோ யுவா 

நீல ரத்னா தரோ ரூப்ய ஹாரி கௌஸ்துப பூஷண


தாமரை போன்ற கண்களை உடைய லட்சுமி தேவியின் கணவர்; அணைத்து உயிர்வாழிகளுக்கும் ப்ரியமானவர்; கோபியர்களுடன் லீலைகள் புரிபவர்; என்றும் இளமையானவர்; நீல நிற கற்களை அணிபவர்; வெள்ளி மாலைகளை அணிய விரும்புபவர்;  கௌஸ்துப கல்லை கொண்டு அலங்கரிக்கப்படுபவர். 


 38. கமலாக்ஷேஸ்வர - தாமரை போன்ற கண்களை உடைய லட்சுமி தேவியின் கணவர் 

39. ப்ரீதா - அணைத்து உயிர்வாழிகளுக்கும் ப்ரியமானவர் 

40. கோப லீலாதரா -  கோபியர்களுடன் லீலைகள் புரிபவர் 

41. யுவ - என்றும் இளமையானவர் 

42. நீல ரத்னா தாரா - நீல நிற கற்களை அணிபவர் 43. ரூபியா ஹரி  - வெள்ளி மாலைகளை அணிய விரும்புபவர் 

44. கௌஸ்துப பூஷண -  கௌஸ்துப கல்லை கொண்டு அலங்கரிக்கப்படுபவர்


பதம் 8. 


🍁🍁🍁🍁🍁🍁


ஸ்ரீவட்ச லாஞ்சனோ பாஸ்வன் மணி த்ரீக் 

கஞ்ச லோச்சனா தாத்தன்க நீல ஸ்ரீ ருத்ர லீலா காரி குரு ப்ரியா   


ஸ்ரீவட்ச குறியீடு கொண்டுள்ளவர்; பல வகையான கண்கவர் ஆபரணங்களை அணிந்துள்ளவர்; தாமரை இதழ் போன்ற கண்கள் உடையவர்; நீல நிற கற்களை கொண்டுள்ள குண்டலங்களை அணிந்துள்ளவர்; சிலசமயங்களில் பகவான் சிவபெருமானுடைய லீலைகள் புரிபவர்; தன் ஆன்மீக குருவிற்கு மிகவும் ப்ரியமானவர்


45. ஸ்ரீவட்ச லாஞ்சன - ஸ்ரீவட்ச குறியீடு கொண்டுள்ளவர்

46. பாஸ்வன் மணி த்ரீக் - பல வகையான கண்கவர் ஆபரணங்களை அணிந்துள்ளவர் 

47. கஞ்ச லோச்சனா - தாமரை இதழ் போன்ற கண்கள் உடையவர் 

48. தாத்தன்க நீல ஸ்ரீ - நீல நிற கற்களை கொண்டுள்ள குண்டலங்களை அணிந்துள்ளவர் 

49. ருத்ர லீலா காரி - சிலசமயங்களில் பகவான் சிவபெருமானுடைய லீலைகள் புரிபவர் 

50. குரு ப்ரியா - தன் ஆன்மீக குருவிற்கு மிகவும் ப்ரியமானவர்


பதம் 9. 


🍁🍁🍁🍁🍁🍁


ஸ்வ நாம குண வக்த 

ச நாமோபதேச தாயக 

ஆசான்தாள ப்ரியா சுத்த 

சர்வ ப்ராணி ஹிதே ரதா 


 தன்னுடைய திருநாமங்களின் சக்திகளை அறிந்தவர்; திருநாமங்களை பிரச்சாரம் செய்பவர்; மிலேச்சர்களுக்கும் கூட மிகவும் ப்ரியமானவர்; முற்றிலும் தூய்மையான குணங்களை உடையவர்; அணைத்து உயிர்வாழிகள் மீதும் அன்பு செலுத்துபவர் 


51. ஸ்வ நாம குண வக்த - தன்னுடைய திருநாமங்களின் சக்திகளை அறிந்தவர் 

52. நாமோபதேச தாயக - திருநாமங்களை பிரச்சாரம் செய்பவர் 

53. ஆச்சண்டாள ப்ரியா - மிலேச்சர்களுக்கும் கூட மிகவும் ப்ரியமானவர் 

54. சுத்த -முற்றிலும் தூய்மையான குணங்களை உடையவர் 55. ஸ்பிராணி ஹிதே ரதா - அணைத்து உயிர்வாழிகள் மீதும் அன்பு செலுத்துபவர்


பதம் 10. 


🍁🍁🍁🍁🍁🍁


விஸ்வரூபானுஜா சந்தியா 

வதாரா சீதாலாசய

நிஷிமா கருணோ குப்தா 

ஆத்ம பக்தி ப்ரவர்தக


கௌரங்க மஹாப்ரபு, விஸ்வரூபாவின் இளைய சகோதரர். அவர் சந்தியா வேளையில் அவதரித்தவர். உயிர்வாழிகளிடையே எரிந்துகொண்டிருக்கும் துன்பங்களை நீக்கி அவர்களை குளிர்விப்பவர். அவர் காரணமற்ற கருணையுடையவர். அவர் அமைதியான குணமுடையவர். அவர் தன்நிலையறிபவர்க்கு பக்தி தொண்டை போதிப்பவர்.   


56. விஸ்வரூபானுஜா - கௌரங்க மஹாப்ரபு, விஸ்வரூபாவின் இளைய சகோதரர்.

57. சந்தியாவதாரா - அவர் சந்தியா வேளையில் அவதரித்தவர்

58. சீதாலாசய - உயிர்வாழிகளிடையே எரிந்துகொண்டிருக்கும் துன்பங்களை நீக்கி அவர்களை குளிர்விப்பவர்

59. நிஷிமா கருணோ - அவர் காரணமற்ற கருணையுடையவர்

60. குப்தா - அவர் அமைதியான குணமுடையவர்

61. ஆத்ம பக்தி ப்ரவர்தக - அவர் தன்நிலையறிபவர்க்கு பக்தி தொண்டை போதிப்பவர்.


பதம் 11. 


🍁🍁🍁🍁🍁🍁


மகா நந்தோ நதோ நிருத்ய 

கீதா நாம ப்ரியா கவி 

ஆர்த்தி பிரியா சுசி சுதோ 

பாவதோ பகவத் பிரியா 


கௌரங்க மஹாப்ரபு எப்பொழுதும் ஆன்மீக ஆனந்தத்தில் திளைத்துக்கொண்டிருக்கிறார். அவர் ஒரு நாடக நடிகரை போல் பாவனை செய்கிறார். அவர் பகவானுடைய திருநாமங்களை உச்சரிப்பதிலும், ஆடுவதிலும், பாடுவதிலும் அதீத நாட்டம் கொண்டுள்ளார். அவர் மிகப்பெரிய பண்டிதர் மற்றும் கவிஞர். அவர் துன்பப்படுபவர்களுக்கு மிகவும் ப்ரியமானவர். அவர் எப்பொழுதும் சுத்தமாகவும் தூய்மையாகவும் உள்ளார். அவர் பகவானின் மீதுள்ள அன்பின் காரணமாக ஆன்மீக ஆனந்தத்தின் உச்சமான உணர்ச்சிகளை நமக்கு அள்ளி வழங்குகிறார். அவர் உயரிய பக்தர்களுடன் மிகவும் நெருக்கமாக உள்ளார்.


62. மகா நந்தோ - கௌரங்க மஹாப்ரபு எப்பொழுதும் ஆன்மீக ஆனந்தத்தில் திளைத்துக்கொண்டிருக்கிறார்

63. நதோ - அவர் ஒரு நாடக நடிகரை போல் பாவனை செய்கிறார்

64. நிருத்ய கீதா நாம ப்ரியா - அவர் பகவானுடைய திருநாமங்களை உச்சரிப்பதிலும், ஆடுவதிலும், பாடுவதிலும் அதீத நாட்டம் கொண்டுள்ளார்

65. கவி - அவர் மிகப்பெரிய பண்டிதர் மற்றும் கவிஞர்.

66. ஆர்த்தி பிரியா - அவர் துன்பப்படுபவர்களுக்கு மிகவும் ப்ரியமானவர்

67. சுசி - அவர் எப்பொழுதும் சுத்தமாக உள்ளார் 

68. சுதோ - அவர் தூய்மையாகவும் உள்ளார்

69. பாவதோ - அவர் பகவானின் மீதுள்ள அன்பின் காரணமாக ஆன்மீக ஆனந்தத்தின் உச்சமான உணர்ச்சிகளை நமக்கு அள்ளி வழங்குகிறார்

70. பகவத் பிரியா - அவர் உயரிய பக்தர்களுடன் மிகவும் நெருக்கமாக உள்ளார்.


பதம் 12. 


🍁🍁🍁🍁🍁🍁


இந்திராதி சர்வ லோகேஷ

வந்தித ஸ்ரீ பாதாம்புஜ 

ந்யாஸி சூடாமணி கிருஷ்ணா 

சன்யாசாச்ரம பாவனா 


கௌரங்க மஹாப்ரபுவின் தாமரை திருவடிகள், தேவேந்திரராலும் மற்ற தேவர்களாலும் எப்பொழுதும் பூஜிக்கப்படுகின்றன. துறவிகளில் அவர் சூடாமணியை போன்றவர். அவர் வசீகரமான முழுமுதற் கடவுள். துறவு மேற்கொள்பவர்களை தூய்மைப்படுத்துபவர்.  


71. இந்திராதி சர்வ லோகேஷ வந்தித ஸ்ரீ பாதாம்புஜ - கௌரங்க மஹாப்ரபுவின் தாமரை திருவடிகள், தேவேந்திரராலும் மற்ற தேவர்களாலும் எப்பொழுதும் பூஜிக்கப்படுகின்றன. 

72. ந்யாஸி சூடாமணி - துறவிகளில் அவர் சூடாமணியை போன்றவர்.

73. கிருஷ்ணா - அவர் வசீகரமான முழுமுதற் கடவுள்.

74. சன்யாசாச்ரம பாவனா - துறவு மேற்கொள்பவர்களை தூய்மைப்படுத்துபவர்.


பதம் 13. 


🍁🍁🍁🍁🍁🍁


சைதன்யா கிருஷ்ணா சைதன்யோ 

தண்ட தர்க் ந்யஸ்த தண்டக

அவதூத ப்ரியா 

நித்யானந்த சத் புஜ தர்சக


படைக்கப்பட்ட அனைத்திற்கும், கௌரங்க மஹாப்ரபுவே வசீகரமான பரமாத்மா. துறவற வாழ்வின் பிரதிநிதி ஆவார். ஆன்மீக பித்து பிடித்துள்ள நித்யானந்த மஹாப்ரபுவிற்கு மிகவும் ப்ரியமானவர். நித்யானந்த மஹாப்ரபுவிற்கு தனது ஆறு கை ரூபத்தை காட்டியவர். 


75. சைதன்யா - படைக்கப்பட்ட அனைத்திற்கும், கௌரங்க மஹாப்ரபுவே வசீகரமான பரமாத்மா 

76. கிருஷ்ணா சைதன்யோ - அவரே வசீகரமான பரமாத்மா 

77. தண்ட தர்க் - துறவற வாழ்வின் பிரதிநிதி ஆவார்.

78. ந்யஸ்த தண்டக - துறவற வாழ்வை எதிர்ப்பவர் ஆவார்.

79. அவதூத ப்ரியா - ஆன்மீக பித்து பிடித்துள்ள நித்யானந்த மஹாப்ரபுவிற்கு மிகவும் ப்ரியமானவர். 

80. நித்யானந்த சத் புஜ தர்சக - நித்யானந்த மஹாப்ரபுவிற்கு தனது ஆறு கை ரூபத்தை காட்டியவர்.


பதம் 14. 


🍁🍁🍁🍁🍁🍁


முகுந்த சித்தி தோ தீணா 

வாசுதேவாமரித ப்ரத

கதாதர பிராண நாத 

ஆர்த்தி ஹா சரண ப்ரத 


தன்னுடைய பக்தரான முகுந்தருக்கு முழுமையை வழங்கியவர். அவர் மிகவும் சாதுவான மற்றும் தன்னடக்கம் கொண்ட குணமுடையவர். தொழுநோய் கொண்ட தன்னுடைய பக்தரான வாசுதேவருக்கு ஆன்மீக அமிர்தத்தை வழங்கியவர். கதாதர பண்டிதரின் உயிர் நாடி ஆவார். பக்தர்களின் துயர் தீர்ப்பவர். தன்னுடைய பக்தர்களுக்கு உன்னத அடைக்கலத்தை வழங்குபவர். 


81. முகுந்த சித்தி தோ - தன்னுடைய பக்தரான முகுந்தருக்கு முழுமையை வழங்கியவர். 

82. தீணா - அவர் மிகவும் சாதுவான மற்றும் தன்னடக்கம் கொண்ட குணமுடையவர் 

83. வாசுதேவாமரித ப்ரத - தொழுநோய் கொண்ட தன்னுடைய பக்தரான வாசுதேவருக்கு ஆன்மீக அமிர்தத்தை வழங்கியவர்

84. கதாதர பிராண நாத - கதாதர பண்டிதரின் உயிர் நாடி ஆவார்.

85. ஆர்த்தி ஹா - பக்தர்களின் துயர் தீர்ப்பவர்.

86.சரண ப்ரத - தன்னுடைய பக்தர்களுக்கு உன்னத அடைக்கலத்தை வழங்குபவர்.


பதம் 15. 


🍁🍁🍁🍁🍁🍁


அகிஞ்சன பிரியா பிரானோ 

குண க்ராஹி ஜிதேந்திரா 

தோஷ தர்சி சுமுகோ 

மதுரா பிரியா தரிசன 


தன்வசம் ஏதுமில்லாதவர்களை, கௌரங்க மஹாப்ரபு மிகவும் விரும்புகிறார். உயிர்வாழிகள் அனைத்திற்க்கும் உயிர் மற்றும் ஆத்மா அவர். அடுத்தவர்களின் நற்பண்புகளை மட்டுமே ஏற்கக்கூடியவர் அவர். பௌதிக புலன்களின் தாக்கத்திலிருந்து வெற்றிவாகை சூடுபவர். அடுத்தவர் செய்யும் தவறுகளை கண்காணாதிருப்பவர். என்றும் மலர்ந்த முகமுடையவர். அவர் முழுவதுமாக இனிமையானவர். அவர் விலைமதிப்பற்றவர்.


87. அகிஞ்சன பிரியா - தன்வசம் ஏதுமில்லாதவர்களை, கௌரங்க மஹாப்ரபு மிகவும் விரும்புகிறார். 

88. பிரானோ - உயிர்வாழிகள் அனைத்திற்க்கும் உயிர் மற்றும் ஆத்மா அவர். 

89. குண க்ராஹி - அடுத்தவர்களின் நற்பண்புகளை மட்டுமே ஏற்கக்கூடியவர் அவர்

90. ஜிதேந்திரா -  பௌதிக புலன்களின் தாக்கத்திலிருந்து வெற்றிவாகை சூடுபவர்

91. தோஷ தர்சி - அடுத்தவர் செய்யும் தவறுகளை கண்காணாதிருப்பவர். 

92. சுமுகோ - என்றும் மலர்ந்த முகமுடையவர்.

93. மதுரா -  அவர் முழுவதுமாக இனிமையானவர். 

94. பிரியா தரிசன - அவர் விலைமதிப்பற்றவர்.


பதம் 16. 


🍁🍁🍁🍁🍁🍁


பிரதாப ருத்ர சம்தராத 

ராமானந்த ப்ரியா குரு 

அனந்த குண சம்பன்னஹ 

சர்வ தீர்த்தைக பாவனக


மஹாராஜா பிரதாபருத்ராவை தடங்கல்களிலிருந்து விடுவித்தவர். ராமானந்த ராயாவிற்கு மிகவும் ப்ரியமானவர். அணைத்து உயிர்வாழிக்கும் ஆன்மீக குருவாவார். எண்ணிலடங்காத நற்பண்புகளை உடையவர். அணைத்து தீர்த்த ஸ்தலங்களையும் புனிதப்படுத்துபவர். 


95. பிரதாப ருத்ர சம்தராத - மஹாராஜா பிரதாபருத்ராவை தடங்கல்களிலிருந்து விடுவித்தவர். 

96. ராமானந்த ப்ரியா - ராமானந்த ராயாவிற்கு மிகவும் ப்ரியமானவர்.

97. குரு - அணைத்து உயிர்வாழிக்கும் ஆன்மீக குருவாவார். 

98. அனந்த குண சம்பன்னஹ - எண்ணிலடங்காத நற்பண்புகளை உடையவர்.

99. சர்வ தீர்த்தைக பாவனக - அணைத்து தீர்த்த ஸ்தலங்களையும் புனிதப்படுத்துபவர்.


பதம் 17. 


🍁🍁🍁🍁🍁🍁


வைகுண்ட நாதோ லோகேஷ

பக்த பீமத ரூபா தர்க் 

நாராயனோ மகா யோகி 

ஞான பக்தி ப்ரத பிரபு 


பௌதிக உலகங்களுக்கும் துன்பங்களற்ற ஆன்மீக உலகிற்கும் கௌரங்க மஹாப்ரபுவே முழுமுதற்கடவுள். பக்தர்களின் விருப்பத்திற்கேற்ப அவர்களுக்கு காட்சியளிப்பவர். அணைத்து உயிர்வாழிகளுக்கும் உன்னத அடைக்கலமாவார். யோகத்தில் சிறந்து விளங்குபவர். பக்தியின் அறிவுசார் ஞானத்தை வழங்குபவர். அனைவருக்கும் தலைவர் மற்றும் கடவுள் அவரே.


100. வைகுண்ட நாதோ -  துன்பங்களற்ற ஆன்மீக உலகிற்கு கௌரங்க மஹாப்ரபுவே முழுமுதற்கடவுள்.

101. லோகேஷ - பௌதிக உலகங்களுக்கும் அவரே முழுமுதற் கடவுள்

102. பக்த பீமத ரூபா தர்க் - பக்தர்களின் விருப்பத்திற்கேற்ப அவர்களுக்கு காட்சியளிப்பவர்

103. நாராயனோ - அணைத்து உயிர்வாழிகளுக்கும் உன்னத அடைக்கலமாவார். 

104. மகா யோகி -  யோகத்தில் சிறந்து விளங்குபவர்.

105. ஞான பக்தி ப்ரத- பக்தியின் அறிவுசார் ஞானத்தை வழங்குபவர்

 106. பிரபு - அனைவருக்கும் தலைவர் மற்றும் கடவுள் அவரே.


பதம் 18. 


🍁🍁🍁🍁🍁🍁


பியூச வசன ப்ரித்வி 

பாவனா சத்யா வாக் 

சக ஓட தேச ஜனாநந்தி 

ஸந்தோஹம்ரித ரூபா தர்க் 


கௌரங்க மஹாப்ரபுவின் வார்த்தைகள் ஆன்மீக அமிர்தத்தை அள்ளி வழங்கும். அண்டத்தை காப்பவர் அவர். அவர் உண்மையை உரைப்பவர். அணைத்து துன்பங்களையும் போக்கக்கூடியவர். ஒரிசா மக்களை ஆனந்தப்படுத்துபவர். அணைத்து அமிர்தங்களிலும் வீற்றிருக்கக்கூடியவர்.  


107. பியூச வசன - கௌரங்க மஹாப்ரபுவின் வார்த்தைகள் ஆன்மீக அமிர்தத்தை அள்ளி வழங்கும்.

 108. ப்ரித்வி பாவனா - அண்டத்தை காப்பவர் அவர். 

109. சத்யா வாக் - அவர் உண்மையை உரைப்பவர். 

110. சக - அணைத்து துன்பங்களையும் போக்கக்கூடியவர்

111. ஓட தேச ஜனாநந்தி - ஒரிசா மக்களை ஆனந்தப்படுத்துபவர். 

112. ஸந்தோஹம்ரித ரூபா தர்க் -அணைத்து அமிர்தங்களிலும் வீற்றிருக்கக்கூடியவர்.


பதம் 19


🍁🍁🍁🍁🍁🍁


யா பாதேத ப்ராதர் உத்தாய 

சைதன்யசிய 

மஹாத்மான ஷரதாய பரயோபதி ஸ்தோத்ரம் 

சர்வாக நாசனம் ப்ரேம பக்திர் ஹரா

 தஸ்ய ஜாயதே நாத்ரா சம்சயஹா 


ஒருவர், தினமும் அதிகாலை எழுந்தவுடன், அணைத்து பாவங்களையும் போகக்கூடிய ஸ்ரீ சைதன்ய மஹாப்ரபுவின் இந்த பிரார்த்தனையை வாசிக்க வேண்டும். அவ்வாறு செய்யும் ஒருவருக்கு பகவான் ஹரியின் மீதுள்ள ஆன்மீக அன்பானது உயிர்த்தெழும். இதில் சந்தேகமில்லை.


அசாத்திய ரோக யுத்தோ அபி 

முச்யதே ரோக சங்கதாத்

சர்வ அபராத யுத்தோ அபி 

சோ அபராதாத் ப்ரமுச்யதே 


ஒருவர், குணப்படுத்த முடியாத நோயினால் பாதிக்கப்பட்டிருந்தாலும், இதை வாசிப்பதால், அந்த நோயின் அணைத்து தாக்கங்களிலுந்தும் விடுபடுவார். அதேபோல் ஒருவர்,, எந்த விதமான அபராதத்தை செய்திருந்தாலும், அதன் தண்டனையிலிருந்து விடுபடுவார்.


பால்குனி பௌர்ணமாஸ்யாம் து

சைதன்ய ஜென்ம வாஸரே

ஷரதாய பாரிய பக்த்யா 

மகா ஸ்தோத்திரம் ஜபம் புரா 

யத் யத் ப்ரக்ருதே காமம் 

தத் தத் எவச்சிரால் லபெத்


யாரொருவர் இந்த பிரார்த்தனையை பக்தியோடும் நம்பிக்கையோடும், ஸ்ரீ சைதன்ய மஹாப்ரபுவின் அவதார தினத்தன்று ( பால்குனி மாதத்தின் பௌர்ணமி தினம் - கௌர பூர்ணிமா ) படிக்கிறார்களோ, அவர்களின் அணைத்து விதமான ஆசைகளும் நிறைவேறிய திருப்தி ஏற்படும்.


அபுத்ரோ வைஷ்ணவம் புத்ரம் லபதே நாத்ரா சம்சயஹா 

அந்தே சைதன்ய தேவஸ்ய ஸ்ம்ர்திர் பவதி சாஸ்வதி


குழந்தை பாக்கியம் இல்லாத ஒரு தம்பதி இந்த பிரார்த்தனையை படித்து வந்தால், சந்தேகமே இல்லாமல் ஒரு வைஷ்ணவ குழந்தை கிடைக்க பெறுவார். அதோடு இறக்கும் தருவாயில் ஸ்ரீ சைதன்ய மஹாப்ரபுவை நினைத்து அவருடைய நித்தியமான லீலைகளில் ஈடுபடுவர்.


பஜ கௌரங்க, கோஹோ கௌரங்க 

லோஹா கௌரங்க நாம ரே 

 பஜ கௌரங்க பஜ கௌரங்க

பஜ கௌரங்க நாம ரே 


(க்ரிஷ்ணதாச கவிராஜ கோஸ்வாமி)


"கௌரங்கா! "

"கௌரங்கா! "

"கௌரங்கா! " என்று மட்டும் கூறுங்கள். இதில் கிடைக்கும் ஆனந்தம் ஒப்பில்லாதது. இந்த ஆனந்தம் நிரந்தரமானது; ஆன்மீகமயமானது; தூய்மையானது; நேர்மறையானது; மாயைக்கு அப்பாற்பட்டது.


கௌரங்கரை பற்றி பாடுங்கள்; கௌரங்கரை பற்றி பேசுங்கள்; கௌரங்கரை வழிபடுங்கள்... (ஶ்ரீ சைதன்ய பாகவதம்)


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.



Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more