ஸ்ரீ கேவலாஷ்டகம்
*****************************************************************************
பதம் – 1
மதுரம் மதுரேப்யோ அபி
மங்களேப்யோ அபி மங்களம்
பாவனம் பாவனேப்யோ அபி
ஹரேர் நாமைவ கேவலம்
மொழிபெயர்ப்பு
இனியவை அனைத்திலும் மிகவும் இனியது. மங்களம் அனைத்திலும் மிகவும் மங்களகரமானது. புனிதப்படுத்துவதில் அனைத்திலும் உன்னதமான புனிதப்படுத்துவது. அனைத்தும் பகவான் ஸ்ரீஹரியின் புனிதத் திருநாமம் மட்டுமே
பதம் – 2
ஆபிரஹ்மா ஸ்தம்ப பர்யந்தம்
ஸர்வம் மாயா மயம் ஜகத்
ஸத்யம் ஸத்யம் புன : ஸத்யம்
ஹரேர் நாமைவ கேவலம்
மொழிபெயர்ப்பு
முழு பிரபஞ்சத்திலும் உயர்ந்தவரான பிரம்மா முதல் அற்பமான புல் வரையிலும் பரமபுருஷருடைய ஜடசக்தியின் மாயப் படைப்புகளே ஆகும். ஒன்றே ஒன்று மட்டும் உண்மை, முழு உண்மை மீண்டும் நான் சொல்கிறேன் முழு உண்மை அனைத்தும் பகவான் ஸ்ரீஹரியின் புனிதத் திருநாமம் மட்டுமே.
பதம் – 3
ஸ குரு : ஸபிதா ச அபி
ஸா மாதா பந்தவோ அபி ஸ :
சிக்ஷயேக் சேத் சதா ஸ்மர்தும்
ஹரேர் நாமைவ கேவலம்
மொழிபெயர்ப்பு
ஒரு நபர் உண்மையான ஆசானோ அல்லது உண்மையான தந்தையோ ஒரு உண்மையான தாய் மற்றும் உண்மையான நண்பன் யாராக இருந்தாலும் அவர்கள் கற்பிப்பதும், எப்பொழுதும் நினைவில் கொள்வதும் அனைத்தும் பகவான் ஸ்ரீஹரியின் புனிதத் திருநாமம் மட்டுமே
பதம் – 4
நி : ஸ்வாஸே நாஹி விஸ்வாச
கதா ருத்தோ பவிஷ்யதி
கீர்த்தனிய மதோ பால்யாத்
ஹரேர் நாமைவ கேவலம்
மொழிபெயர்ப்பு
இறுதி மூச்சு எப்போது வரும் என்று ஒருவராலும் நிச்சயமாக கூற முடியாது. பெருகிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரது திட்டங்களும் தீடீரென்று அப்பொழுது துண்டிக்கப்படும். எனவே அறிவுடையவர்கள் அனைவரும் சிறுகுழந்தை பருவத்திலேயே ஜபிக்க பழக வேண்டுயது, அனைத்தும் பகவான் ஸ்ரீஹரியின் புனிதத் திருநாமம் மட்டுமே
பதம் – 5
ஹரி : ஸதா வஸேத் தத்ர
யத்ர பாகவதா ஜனா :
காயந்தி பக்தி பாவேன
ஹரேர் நாமைவ கேவலம்
மொழிபெயர்ப்பு
பிரபு ஹரி நித்யமாக வசிக்குமிடமானது, எங்கென்றால் பெருமகிழ்வுடன் நித்தம் தம் புகழ்பாடும் ஆன்மீக முன்னேற்றம் அடைந்த பக்தர்களிடமே. தூய பக்தித் தொண்டின் பாவத்தில் அவர்கள் பாடுவது அனைத்தும் பகவான் ஸ்ரீஹரியின் புனிதத் திருநாமம் மட்டுமே
பதம் – 6
அஹோ து:கம் மஹா து:கம்
து:காத் து:காதரம் யத :
காச்சார்தம் விஷ்மிருதம் ரத்ன
ஹரேர் நாமைவ கேவலம்
மொழிபெயர்ப்பு
அஹோ ! என்ன ஒரு துக்கம் என்ன ஒரு பெருந்துக்கம் இவ்வுலகில் உள்ள அனைத்து துன்பத்திலும் மிகவும் துன்புறுத்தக் கூடியது மக்கள் தமது அறியாமையினால் சிறு கண்ணாடி துண்டுக்காக மறந்துவிட்ட இந்த ரத்தினம் அனைத்தும் பகவான் ஸ்ரீஹரியின் புனிதத் திருநாமம் மட்டுமே.
பதம் – 7
தீயதாம் தீயதாம் கர்ணோ
நீயதாம் நீயதாம் வச :
கீயதாம் கீயதாம் நித்யம்
ஹரேர் நாமைவ கேவலம்
மொழிபெயர்ப்பு
ஒருவருடைய காதுகளால் மீண்டும் மீண்டும் கேட்கப்பட வேண்டியதும். ஒருவருடைய குரலால் திரும்ப திரும்ப பேசப்பட வேண்டியதும் அன்புடன் அடிக்கடி பாடி பாடி மகிழ வேண்டியதும. அனைத்தும் பகவான் ஸ்ரீஹரியின் புனிதத் திருநாமம் மட்டுமே
பதம் – 8
த்ருணீ க்ருத்ய ஜகத் ஸர்வம்
ராஜதே ஸகலோபரி
சித் ஆனந்த மயம் சுத்தம்
ஹரேர் நாமைவ கேவலம்
மொழிபெயர்ப்பு
அகில உலகமும் ஒரு புல்லை போன்று அற்பமானதே ஆகும். பரம புருஷருடைய ஆதிக்கத்தினால் தான் அவை புகழப்படுகின்றன. எப்பொழுதும் நித்யமானது தெய்வீக பரவச உணர்வுடையதும் புனிதத்திலும் புனிதமானது அனைத்தும் பகவான் ஸ்ரீஹரியின் புனிதத் திருநாமம் மட்டுமே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment