பொங்கல் பண்டிகையை போன்று வட மாநிலங்களில் மகர சங்கராந்தி விழா பிரபலம். மேற்கு வங்க மாநிலத்தில் இந்த விழாவையொட்டி, கங்கா சாகர் தீவுக்கு ஏராளமான பகதர்கள் வருகை தந்து புனித நீராடுவது வழக்கம்.
இமயமலையில் உற்பத்தியாகும் கங்கை பல்வேறு மாநிலங்கள் வழியாகச் சென்று வங்கக் கடலில் சங்கமிக்கிறது. கங்கை நதி சங்கமிக்கும் முகத்துவாரம் கங்கா சாகர் என்றழைக்கப்படுகிறது. இந்த தீவுக்கு வந்து பக்தர்கள் புனித நீராடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
தினந்தோறும் அந்திப்பொழுதில் ஹரித்வாரிலும் காசியிலும் கங்கா சாகரத்திலும் ஶ்ரீதாம் மாயாபூரிலும் மற்றும் கங்கை நதி பாய்தோடும் கங்கை கரையில் கங்கைக்கு கோவில் அமைந்துள்ள சில இடங்களிலும் கங்கைக்கு ஆரத்தி நடக்கிறது என்பதை நாம் அறிவோம். கங்கை கடலோடு கலக்கும் சங்கமத்தில் நடைபெறும் திருவிழாவை கங்கா சாகர் மேளா என்று அழைக்கப்படுகிறது.
பொங்கல் என்று நாம் கொண்டாடும் மகர சங்கராந்தி தினத்தன்று, கங்கை நதியானது வங்காள விரிகுடா கடலில் சேரும் இடத்தில் கங்கா சாகர் மேளா நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் உள்ள சாகர் தீவில் சூரியன் தனுசு ராசியிலிருந்து மகரராசிக்குள் பிரவேசிக்கும் நாளில் இவ்விழா நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் மற்றும் உலகமெங்கிலும் உள்ள பக்தர்கள் மற்றும் சன்னியாசிகள் கங்கைக் கடலுடன் சேரும் இடத்தில் நீராடுகிறார்கள் இதனால் அவர்களின் பாவங்கள் விலகி விடும் என்ற உறுதியான நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது.
இன்று பக்தர்கள் கங்கா தேவியை நினைத்து வழிபட்டு மற்றவர்களுக்கும் அன்னை கங்கை பூமியில் வந்த லீலையை பகிர்வது ஆன்மீக முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும்.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
Comments
Post a Comment