வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
மனு என்பவர் மனித குலத்தின் உண்மையான தந்தை ஆவார். இதன் காரணமாகவே மனிதகுலம் "மனுஷ்யா" என்று அழைக்கப்படுகிறது. உலகத்தின் முழு நிர்வாகப் பொறுப்பும் பகவானிடம் திரும்பிச் செல்வதற்கான முறைக்காகவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரம்மதேவர் முழுமுதற்கடவுள் பகவான் கிருஷ்ணரின் பிரதிநிதி ஆவார். மனு என்பவர் பிரம்மதேவரின் மகனாவார். அதுபோலவே பிரபஞ்சத்தின் வெவ்வேறு கிரகங்களில் உள்ள மன்னர்கள், அரசர்கள் யாவரும் மனுவின் பிரதிநிதிகளாவர். பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர், எவ்வாறு மனுக்கள் உன்னதமான அறிவை தமக்கு போதித்தவர்களிடமிருந்து நம்பிக்கையோடு பெற்றனர் என்பதையும், எவ்வாறு அவர்கள் நம்பிக்கையோடு தமது சந்ததியினருக்குக் அதனை கற்றுக் கொடுத்தனர் என்பதையும் விளக்குகிறார்.
பிரபஞ்ச படைப்பின் முதல் உயிர் வாழி, ஸ்வாயம்புவ மனு மற்றும் அவரது மனைவி சதரூபாவையும் உருவாக்கிய பிரம்ம தேவர் ஆவார். இங்கு காட்டப்பட்ட பிரம்மதேவர் மற்றும் மனு இடையிலான தந்தை மகன் உறவை அவர்கள் கையாளும் விதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். தந்தை மகன் இரண்டு பேருமே மிகவும் தகுதி வாய்ந்தவர்கள் ஆவர். எனவே மனித வர்க்கம் முழுமையும் அவர்களை பின்பற்றும் படிக்கு ஒரு உதாரணமாக இருந்தார்கள். வேத ஞானம் நிறைந்த பிரம்மதேவர் தன் மகன் மனுவிடம் உனக்கு இரண்டு மகன்களும் 3 மகள்களும் வருவார்கள் என்று அறிவுறுத்தினார். அவரின் அறிவுறுத்தலால் மனு மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். மேலும் அவர்களிடமிருந்து அனைத்து பிரஜைகளும் உருவாகுவார்கள் என்றும் கூறினார். மனு ஒரு மிகச் சிறந்த ஆட்சியாளர் ஆவார். அவரது வரலாறு பகவான் வராகர் காலத்திலிருந்தே துவங்குகிறது . ஸ்வாயம்புவ மனு ஒரு ராஜரிஷி ஆவார். ஏனென்றால் அவரது ராஜ்ஜியம் மற்றும் இல்லங்களில் கிருஷ்ண உணர்வு நிரம்பியிருந்தது. அவருடைய நல்ல குணநலன்களாலும் அவரின் செல்வ செழிப்பாலும் எல்லோராலும் மிகவும் கொண்டாடப்பட்டார். அவர் தன்னை முழுவதுமாக பகவான் விஷ்ணுவின் நாமங்களை ஜெபிப்பதிலும் அவரது ரூபத்தை தியானம் செய்வதிலும் ஈடுபடுத்தினார். அவர் தனது நேரத்தை அனாவசிய காரியங்களுக்காக விரயம் செய்யாமல் மிகச் சிறந்ததொரு யோகியாக இருந்தார். அவர் பேசுவதெல்லாம் முழுமுதற்கடவுள் பகவான் கிருஷ்ணரைப் பற்றிய பேச்சாகவே இருந்தது. அவர் கேட்பதெல்லாம் கிருஷ்ணரைப் பற்றிய திவ்ய செய்திகளாகவே இருந்தது. அவர் தியானம் செய்ததெல்லாம் கிருஷ்ணரையும் அவருடைய திவ்ய செயல்களையுமே.
அவருடைய வாழ்வு மிக நீண்டது என்று கூறப்படுகிறது. ஒரு யுகம் என்பது 43 லட்சத்து 20 ஆயிரம் வருட காலங்களாகும். இதுபோன்று 71 யுகங்கள் சேர்ந்தது ஒரு மனுவின் காலம். அவருடைய மொத்த வருடங்களும் அவர் தன்னை முழுவதுமாக பகவான் கிருஷ்ணரைப் பற்றியே பேசவும் கேட்கவும் தியானிக்கவும் செய்தார். ஸ்வாயம்புவ மனு தொடர்ச்சியாக கிருஷ்ண உணர்வுடனேயே இருந்ததால் அவரது வாழ்க்கை ஆரம்பத்தில் இருந்ததைப் போலவே மிகவும் பசுமையாகவே இருந்தது.
இந்த பெளதிக உலகில் பௌதிக சுகங்களை அனுபவிக்க வேண்டும் என்று வந்துள்ள கட்டுண்ட ஜீவன்களின் விடுதலைக்காக மனு வேதங்களை அடிப்படையாகக் கொண்ட விதிமுறைகளை உருவாக்குகிறார். கிருஷ்ணர் மிகவும் கருணை உள்ளவர் என்பதால் யாரெல்லாம் இந்த உலகில் பௌதிக சுகங்களை அனுபவிக்க வேண்டும் என்று வந்துள்ளனரோ அவர் அதற்கான ஏற்பாடுகளையும் செய்து அதே சமயம் அவர்களின் விடுதலைக்கான பாதையையும் காட்டுகிறார். ஒட்டுமொத்த மனித சமுதாயத்திற்கான சட்டபுத்தகம் "மனு சம்ஹிதை" என்று அழைக்கப் படுகிறது. இதன் அனைத்து நடவடிக்கைகளும் நம்மை பகவான் கிருஷ்ணரின் திவ்யமான சேவையை நோக்கியே வழிநடத்துகிறது.
மனு தனது "பிரம்ம வர்த்தா" என்னும் சிம்மாசனத்தில் இருந்து பூமியையும் அதனைச் சுற்றியுள்ள ஏழு பெரும் கடல்களையும் ஆட்சி செய்தார். இன்று இமாச்சல பிரதேசத்தில் உள்ள 'மணாலி' என்று அழைக்கப்படும் இடத்தில் மனுவின் வசிப்பிடங்களும் அவரின் ஆசிரமங்களும் இருப்பதாக நம்பப்படுகிறது. இங்குள்ள பழைய மணாலி கிராமத்தில் மனுவின் சிறந்த ஆளுமைக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோயில் ஒன்று உள்ளது.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
https://t.me/joinchat/VaBAs5fOiAeHgexI
Comments
Post a Comment