சிந்தனை, விருப்பம், செயல் , உயர்வு


 சிந்தனை, விருப்பம், செயல் , உயர்வு


💐💐💐💐💐💐💐💐💐


ஏதத் தி ஆதுர-சித்தானாம்

மாத்ரா-ஸ்பர்சேச்சயா முஹு:

பவ-ஸிந்து-பிலவோ த்ருஷ்டோ

ஹரி-சர்யானுவர்ணனம்


மொழிபெயர்ப்பு

****************


இந்த்ரிய போகங்களை அனுபவிக்க வேண்டுமென்ற இடைறாத ஆசைகளில் மூழ்கியிருப்பவர்களால், பரம புருஷரின் உன்னதமான செயல்களை இடைவிடாமல் பாடுவதன் மூலம் அறியாமை எனும் கடலைக் கடந்துவிட முடியும் என்பதை எனது சொந்த அனுபவத்தினால் நான் உணர்ந்து கொண்டேன்.


பொருளுரை

*************


ஜீவராசியால் சிறிது நேரம்கூட அமைதியாக இருக்க முடியாது. அவன் எதையாவது செய்து கொண்டோ, நினைத்துக் கொண்டோ அல்லது எதைப் பற்றியாவது பேசிக்கொண்டோதான் இருப்பான். பௌதிகவாதிகள் பொதுவாக தங்களது புலன்களை திருப்திப்படுத்தும் விஷயங்களைப் பற்றி சிந்தித்துக்கொண்டும், பேசிக்கொண்டும் இருப்பார்கள். ஆனால் இவ்விஷயங்கள் மாயா சக்தியின் கட்டுப்பாட்டில் இருப்பதால் இவை எவ்வித திருப்தியையும் அளிப்பதில்லை. எனவே அவர்கள் கவலைகளும், ஆவல்களும் நிறைந்தவர்களாக மாறிவிடுகின்றனர். இது மாயா அல்லது பொய்த் தோற்றம் என்று அழைக்கப்படுகிறது. திருப்தி அளிக்காத பொருளை அவர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். இது மாயா அல்லது பொய்த் தோற்றம் என்று அழைக்கப்படுகிறது. ஆகவே பகவானின் பெருமைகளை எப்பொழுதும் பாடிக் கொண்டிருப்பதுதான், புலன் நுகர்வில் ஈடுபட்டுள்ள இத்தகைய அதிருப்தியடைந்த ஜீவன்களுக்கு திருப்தியை அளிக்கும் என்று நாரத முனிவர் தமது சொந்த அனுபவத்தின் வாயிலாகக் கூறுகிறார். ஒரு ஜீவராசியின் சிந்தனை, உயர்வு, விருப்பம் அல்லது செயல் ஆகியவற்றை ஒருவராலும் தடுக்க முடியாது. ஆனால் உண்மையான ஆனந்தத்தை ஒருவர் விரும்பினால், அவர் விஷயத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். இறந்து கொண்டிருக்கும் மனிதனைப் பற்றி பேசுவதற்கு பதிலாக, பகவானைப் பற்றி பேச வேண்டும். திரைப்பட நடிகர்களின் செயல்களை அனுபவிப்பதற்குப் பதிலாக, ஒருவர் தனது கவனத்தை பகவானிடமும் அவரின் நித்திய சகாக்களான கோபியர்களிடமும், லக்ஷ்மிகளிடமும் திருப்ப வேண்டும். சர்வசக்தி படைத்தவரான பரம புருஷ பகவான், அவரது அகாரணமான கருணையினால், பூமியில் அவதரித்து உலகாயதமான மனிதர்களைப் போல் செயற்பட்டபோதிலும், அதே சமயத்தில், அவர் சர்வசக்தியுள்ளவர் என்பதால் அசாதாரணமாகவும் செயற்பட்டார். இதை அவர் பந்தப்பட்ட ஆத்மாக்களின் நன்மைக்காகவே செய்கிறார். ஏனெனில், இதனால் அவர்கள் தங்களுடைய கவனத்தை ஆன்மீக வாழ்வை நோக்கி திருப்பிக்கொள்ள முடியும். இவ்வாறு செய்வதால், பந்தப்பட்ட ஆத்மா படிப்படியாக ஆன்மீக நிலைக்கு உயர்த்தப்பட்டு எல்லா துன்பங்களுக்கும் பிறப்பிடமான அறியாமை எனும் கடலை சுலபாக கடந்து விடுகிறான். மிகவுயர்ந்த அதிகாரியான ஸ்ரீ நாரத முனிவர், தமது சொந்த அனுபவத்திலிருந்து இதைக் குறிப்பிடுகிறார். மேலும் பகவானுக்கு மிகவும் பிரியமான பக்தராகிய நாரதரின் அடிச்சுவடுகளை நாம் பின்பற்றுவோமானால், நாமும் அதே அனுபவத்தைப் பெற முடியும்.


(ஶ்ரீமத் பாகவதம் 1.6.34)


Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more