வழங்கியவர்: லோசன தாஸ தாகூர்
🍁🍁🍁🍁🍁🍁🍁
பதம் 1
🍁🍁🍁🍁
நிதாய் குணமணி ஆமார நிதாய் குண மணி
ஆனியா ப்ரேமேர வன்யா பா ஸாயில அவனீ
மொழிபெயர்ப்பு
நித்யானந்த பிரபு எல்லா நற்குணங்களின் மணியாவார். எனது நித்யானந்த பிரபு எல்லா நற்குணங்களின் மணியாவார், அவர் பரவச பிரேமையின் வெள்ளத்தினைக் கொண்டு வந்து முழு உலகையும் அதில் மூழ்கடித்துள்ளார்.
பதம் 2
🍁🍁🍁🍁
ப்ரேமேர வன்யா ல யியா நிதாய் ஆய்லா கௌட, தேஷே
டுபில பகத-கண தீன ஹீன பாஸே
மொழிபெயர்ப்பு
ஸ்ரீ சைதன்யருடைய கட்டளையின்படி ஜகந்நாத புரியிலிருந்து வங்காளத்திற்குத் திரும்புகையில், நித்யானந்த பிரபு அந்த பிரேம வெள்ளத்தினைக் கொண்டு வந்ததன் மூலமாக, பக்த கணங்கள் அனைவரையும் அதில் மூழ்கடித்தார். வீழ்ச்சியுற்ற அபக்தர்கள் அதில் மூழ்காமல் அந்த பரவசக் கடலில் மிதந்து கொண்டிருந்தனர்
பதம் 3
🍁🍁🍁🍁
தீன ஹீன பதித பாமர நாஹி பாசே
ப்ரஹ்மார துர்லப ப்ரேம ஸபாகாரே ஜாசே
மொழிபெயர்ப்பு
பிரம்மதேவரால்கூட அடைவதற்கு கடினமான அந்த உயர்ந்த பிரேமையினை அதனை விரும்பாத அதற்குத் தகுதியில்லாத வீழ்ச்சியுற்ற மோசமான ஆத்மாக்களுக்கும்கூட நித்யானந்த பிரபு தாராளமாக வழங்கினார்
பதம் 4
🍁🍁🍁🍁
ஆபத்த கருணா-ஸிந்து, நிதாய் காடியா முஹான
கரே கரே புலே ப்ரேம-அமியார பான
மொழிபெயர்ப்பு
முந்தைய காலத்தில் கருணைக் கடல் பலமாக அடைத்து வைக்கப்பட்டிருந்தது, ஆனால் நித்யானந்த பிரபுவோ அதன் எல்லையில் ஒரு கால்வாயினை வெட்டியதன் மூலமாக, அமிர்த பிரேமையின் அந்த வெள்ளம் ஒரு பேரலையாக உருவெடுத்து எல்லா இல்லங்களையும் அடையச் செய்தார்
பதம் 5
🍁🍁🍁🍁
லோசன போலே மோர நிதாய் ஜேபா நா பஜில
ஜானியா ஷனியா ஸேய் ஆத்ம-கா தீ ஹய்ல
மொழிபெயர்ப்பு
லோசன தாஸன் கூறுகிறேன், "எவரேனும் என்னுடைய நிதாயின் வழிபாட்டினைப் புறக்கணித்தால் அல்லது அவர் வழங்கிய இந்த அற்புத வாய்ப்பினை ஏற்றுக்கொள்ள மறுத்தால், அவன் தெரிந்தே தற்கொலை செய்கிறான்.
🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், தகவல்கள் மற்றும் போஸ்டர்களுக்கு 👇
https://t.me/joinchat/VaBAs5fOiAeHgexI
ஆன்மீக கதைகளை படிக்க 👇
https://t.me/joinchat/HIm4JGufgEgG7jwI
Comments
Post a Comment