வழங்கியவர் :- லோசன தாஸ் தாகூர்
🍁🍁🍁🍁🍁🍁🍁
பதம் 1
🍁🍁🍁🍁
பரம கருண பஹு துஇ ஜன
நிதாய் கௌரசந்த்ர
ஸப அவதார ஸார ஷி ரோமணி
கேவல ஆனந்த கந்த
மொழிபெயர்ப்பு
🍁🍁🍁🍁🍁🍁🍁
பகவான் ஶ்ரீ நித்யானந்தரும் பகவான் ஶ்ரீ கௌரசந்திரரும் மிகமிக கருணை வாய்ந்தவர்கள், அவர்கள் எல்லா அவதாரங்களின் சாரமாவர். ஆனந்தத்தை மட்டுமே வழங்கக்கூடிய கீர்த்தனம் மற்றும் நர்த்தன வழிமுறையை அறிமுகப்படுத்தியது இந்த அவதாரங்களின் விசேஷ முக்கியத்துவமாகும்
பதம் 2
🍁🍁🍁🍁
பஜோ பஜோ பாஇ சைதன்ய நிதாய்
ஸுத்ரிட விஷ்வாஸ கரி
விஷய சாடியா ஸே ரஸே மஜியா
முகே போல ஹரி ஹரி
மொழிபெயர்ப்பு
🍁🍁🍁🍁🍁🍁🍁
அன்புள்ள சகோதரர்களே பகவான் சைதன்யரையும் நித்யானந்தரையும் திடமான உறுதியுடனும் நம்பிக்கையுடனும் வழிபடுமாறு தங்களை வேண்டிக்கொள்கிறேன். இந்த வழியில் கிருஷ்ண உணர்வை அடைய ஒருவன் விரும்பினால், அவன் தன்னுடைய புலனின்ப ஈடுபாடுகளைத் துறக்க வேண்டும். பகவான் சைதன்யர் மற்றும் நித்யானந்தரின் வழிபாட்டில் மூழ்கி, எந்த பௌதிக நோக்கமும் இன்றி, "ஹரே கிருஷ்ண ஹரி ஹரி என்று உச்சரிப்பீராக
பதம் 3
🍁🍁🍁🍁
தேகோ ஒரே பாய் த்ரி புவனே நாஇ
யேமோன தோயாள தாதா
பஷீ பாகீ ஜுரே பாஷாண விதரே
ஷீனி ஜார குண-காதா
மொழிபெயர்ப்பு
🍁🍁🍁🍁🍁🍁🍁
அன்புள்ள சகோதரர்களே, இதைச் சற்று சோதித்துப் பாருங்கள் மூவுலகினுள் பகவான் சைதன்யர் மற்றும் பகவான் நித்யானந்தரைப் போன்று யாருமே இல்லை. அவர்களுடைய கருணை வாய்ந்த குணங்கள் மிகவும் அற்புதமானவை, அவற்றைக் கேட்டு பறவைகளும் விலங்குகளும்கூட அழுகின்றன, கற்களும்கூட உருகுகின்றன
பதம் 4
🍁🍁🍁🍁
ஸம்ஸாரே மஜியா ரோஹிலி போரியா
சே பதே நஹிலோ ஆஷ
ஆபன கரம புஞ்ஜாயே ஷமன
கஹோயே லோசன தாஸ
மொழிபெயர்ப்பு
🍁🍁🍁🍁🍁🍁🍁
ஆனால் லோசன தாஸனாகிய நான், புலனின்பத்தில் பந்தப்பட்டுள்ளதை எண்ணி வருந்துகிறேன். பகவான் சைதன்யர் மற்றும் பகவான் நித்யானந்தரின் தாமரைத் திருவடிகளில் எனக்கு பற்றுதல் இல்லை; இதனால், மரணத்தின் மேற்பார்வையாளரான எமராஜர் என்னை தண்டிக்கின்றார், பகவானின் திருப்பணிகளில் பற்றுதல் கொள்வதிலிருந்து என்னை தடுக்கிறார்.
Comments
Post a Comment