🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
பகவானின் பக்தன் அல்லது ஒரு வைணவன் பகவானுக்கு அளிக்காமல் எதையுமே தொடுவதில்லை. ஒரு வைணவன் தனது செயல்கள் அனைத்தின் பலன்களையும் பகவானுக்கே அர்ப்பணித்திருப்பதினால் அவன் பகவானுக்கு முதலில் படைக்கப்படாத எந்தவொரு உணவையும் சுவைப்பதில்லை. பகவானும் கூடத் தனக்கு அர்ப்பணிக்கப்படும் நிவேதனங்களை வைணவனின் வாய்க்கு அளித்து சுவைத்து மகிழ்கிறார். இச்சுலோகத்திலிருந்து பகவான் வேள்விக் குண்டத்தின் தீயின் மூலமும் அந்தணனின் வாயின் மூலமும் உண்கிறார் என்று தெளிவாகிறது. பல்வேறு விதமானப் பொருட்கள் தானியங்கள், நெய் போன்றவை பகவானின் திருப்திக்காக வேள்வித் தீயில் அர்ப்பணிக்ப்படுகின்றன. பகவான் வேள்வியின் நிவேதனங்களை அந்தணர்களிடமிருந்தும் பக்தர்களிடமிருந்தும் ஏற்றுக் கொள்கிறார். சில இடங்களில் குறிப்பிடப்ட்டிருப்பது போல் அந்தணர்க்கும் வைணவர்க்கும் உண்பதற்காக வழங்கப்படும் எதையும் பகவானும் கூட ஏற்றுக் கொள்கிறார். இங்கே அவர் அந்தணர் மற்றும் வைணவர்களின் வாய்களுக்கு அர்ப்பணிக்கப்படுபவற்றையே மிகுந்த சுவையுடன் ஏற்றுக் கொள்கிறார் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதற்குச் சிறந்த உதாரணம் அத்வைத பிரபு ஹரிதாஸ தாகுரரிடம் கொண்ட தொடர்புகளில் காணக் கிடைக்கிறது. ஹரிதாஸ தாகுரர் பிறப்பினால் இஸ்லாமியராக இருந்த போதிலும் அத்வைத பிரபு புனித வேள்வி விழாவிற்குப் பிறகு முதல் அவிர்பாகத் தட்டினை ஹரிதாஸ தாகுரருக்கே வழங்குவார். ஹரிதாஸ பிரபு அத்வைத பிரபுவிடம் பிறப்பினால் தான் இஸ்லாமியனாக இருந்தும் அவர் முதல் பிரஸாதத்தினை ஓர் உயர்ந்த அந்தணனுக்கு அளிக்காது தனக்கு ஏன் அளிக்க வேண்டும் என்று கேட்டார். அடக்கத்தின் காரணமாகவே ஹரிதாஸ தாகுரர் தன்னை ஓர் இஸ்லாமியன் என்று இழித்துக் கொண்டார். ஆனால் ஒரு அனுபவ பக்தரான அத்வைத பிரபு அவரை ஓர் உண்மையான அந்தணராகவே ஏற்றுக் கொண்டார். அதனால் ஹரிதாஸ தாகுரருக்கு முதல் பிரஸாதத் தட்டினை அளிப்பதினால் தான் ஒரு லட்சம் அந்தணர்களுக்கு உணவு வழங்குவதின் மூலம் கிடைக்கும் பலனைப் பெறுவதாகக் கூறினார். இதன் முடிவு என்னவென்றால் ஆயிரம், லட்சம் வேள்விகளைச் செய்வதைக் காட்டிலும் ஒருவன் ஒரு அந்தணன் அல்லது வைணவனுக்கு உணவளித்தல் சாலச் சிறந்தது என்பதேயாகும். ஆகையினால் இந்த யுகத்தில் “ஹரே நாம” என்று பகவானின் புனித நாமத்தை ஓதுவது மற்றும் வைணவர்களுக்கு மகிழ்ச்சியளிப்பது என்பவையே ஒருவன் ஆன்மீக வாழ்விற்குத் தன்னை உயர்த்திக் கொள்வதற்கானச் சிறந்த வழியாகும் என்று பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.
ஶ்ரீமத் பாகவதம் 3.16.8 / பொருளுரை
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
Comments
Post a Comment