ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர்
🔆🔆🔆🔆🔆🔆🔆
பூஞ்சோலை ஓர் அழகிய நாடு. அந்நாட்டை நீதிநெறி தவறாமல் விஷ்ணுவரதன் என்னும் அரசன் ஆண்டு வந்தான். அந்த அரசன் அந்தணர்களுக்கு உணவளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தான். விஷ்ணுவரதனின் ஆட்சியில் மக்கள் எந்த ஒரு குறையும் இன்றி மகிழ்ச்சியாக இருந்தனர். ஒருநாள் அரசர் ஊர் திருவிழாவில் அந்தணர்களுக்கு உணவளிக்க ஏற்பாடுகள் தடபுடலாக செய்து கொண்டிருந்தார். அச்சமயம் வானில் ஒரு கழுகு இரையாக பாம்பு ஒன்றை தன் கால்களில் பற்றிக் கொண்டு உணவருந்தும் இடத்திற்கு மேல் பறந்துச் சென்றது.
அப்பொழுது எதிர்பாராத விதமாக பாம்பின் வாயிலிருந்து சில துளி விஷம் சமைத்து வைத்திருந்த உணவில் விழுந்து விட்டது. இதை யாரும் கவனிக்கவில்லை. எதையும் அறியாத அரசன் அந்த உணவை அந்தணர்களுக்கு அளித்தார். அந்த உணவை உண்ட மறுகணமே அந்தணர்கள் உயிர் துறந்தார்கள். இதைக் கண்டு அரசர் மிகவும் வருத்தம் கொண்டார்.
கர்ம வினைகளை நிர்ணயிக்கும் சித்திரகுப்தனுக்கு குழப்பமாகி விட்டது. இந்த கர்மவினையை யாருக்கு கொடுப்பது.?
கழுகிற்கா?
பாம்பிற்கா?
அல்லது அரசனுக்கா?
கழுகு அதன் இரையைத் தூக்கிக் கொண்டு சென்றது. அதனால் அது கழுகின் தவறு இல்லை.
பாம்பின் விஷம் உயிர்போகும் நிலையில் அதன் வாயிலிருந்து வழிந்தது, அதனால் பாம்பின் குற்றமும் இல்லை.
இதை எதையும் அறியாத அரசன் உணவை வழங்கியது அரசனின் தவறுமில்லை. அரசனும் இதை வேண்டுமென்றே செய்யவில்லை.
இதற்கான கர்மவினையை யாருக்கு கொடுப்பது? சரி, நாம் சென்று எமதர்மரிடமே கேட்கலாம் என்று எமனிடம் சென்று தன் குழப்பத்தை சித்திரகுப்தன் கூறினார். இதைக் கேட்ட எமதர்மர், சிறிது நேரம் சிந்தித்தார். அதன் பிறகு, இதற்கான விடை விரைவில் கிடைக்கும். அதுவரை பொறுமையாக இருக்கவும் என அறிவுறுத்தினார்.
சில நாட்களுக்கு பின் ஒருநாள் சில அந்தணர்கள் பூஞ்சோலை நகருக்கு வந்தனர். அரசன் விஷ்ணுவரதனை காண அரண்மனைக்கு செல்ல நினைத்தனர். ஆனால் அந்த அந்தணர்களுக்கு, அரண்மனைக்கு செல்ல வழி தெரியாததால், பெண்மணி ஒருவரிடம் வழி கேட்டார்கள். அப்பெண்மணியும், அந்த அந்தணர்களுக்கு சரியான பாதையை கூறிவிட்டு, அந்தணர்களிடம், நீங்கள் சற்று எச்சரிக்கையாக இருங்கள். ஏனென்றால் இந்த அரசன் அந்தணர்களுக்கு உணவளித்து கொல்பவன் என்று கூறினாள்.
இப்பெண் இவ்வாறு கூறி முடித்ததும், சித்திரகுப்தனுக்கு தெளிவு பிறந்து விட்டது. அந்தணர்களை கொன்ற கர்ம வினை இந்த பெண்மணிக்கே என முடிவு செய்தார்.
இதில் நாம் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், நடந்த உண்மை எதுவும் அறியாமல், ஒருவரின் மேல் வீணாக பழி சுமத்தினால் கர்மவினை, பழி உரைப்பவர் மீது வந்து சேரும்.
கதையின் நீதி:
நீங்கள் யாருடைய செயலை பற்றியாவது குறை கூறும்பொழுது அந்த குறை உண்மையானதாக இருந்தால், அந்த செயலின் பாதி பாவம் உங்களை வந்து சேரும்.
அதேபோல் நீங்கள் யாருடைய செயலை பற்றியாவது குறை கூறும்பொழுது அந்த குறை பொய்யானதாக இருந்தால், அந்த செயலின் முழு பாவமும் உங்களை வந்து சேரும்.
பாம்பும் தவளையும்
இரவின் இருளில் ஒரு பாம்பு தவளையின் இனிமை யான கத்தலைக் கேட்பதன் மூலம் தன் உணவைக் கண்டு கொள்ள முடியும். "இது தவளை' என்பதைப் பாம்பு புரிந்து கொள்ள முடியும், அது தவளையை அதன் ஒலி அதிர்வால் பிடிக்கிறது. இந்தச் சான்று சிலசமயம் மரணத்திற்காக ஒலி அதிர்வை ஏற்படுத்துபவர்களுக்குத் தரப்படுகிறது. ஒருவர் தவளைகளைப் போல் ஒலியதிர்வை ஏற்படுத்தும் இனிய நாக்கு படைத்தவராக இருக்கலாம், ஆனால் அந்த அதிர்வு மரணத்தை அழைக்கும்.
நாக்கு மற்றும் ஒலி அதிர்வின் சிறந்த பயன் ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே, ஹரே ராம ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே, என்பதை உச்சரிப்பதாகும். அது ஒருவரைக் கொடூரமான மரணத்தின் பிடியிலிருந்து காப்பாற்றும்.
ஶ்ரீல பிரபுபாதர் / ஶ்ரீமத் பாகவதம் 3.29.29./ பொருளுரை
நாம் மற்றவர்களை பற்றி தவறாக கூறும்பொழுதோ அல்லது தவறாக நினைக்கும்பொழுதோ, அவ்வாறு செய்வதற்கு முன் இந்த கதையை நினைவுகூர வேண்டும்.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
சுத்த பக்தி https://t.me/suddhabhaktitami
Comments
Post a Comment