ஸ்ரீல நரோத்தம் தாஸ் தாகூர்



 ஸ்ரீல நரோத்தம் தாஸ் தாகூர்


1531 - 1615 (தோராயமாக)


வழங்கியவர் :- சுத்த பக்தி குழுவினர்


🍁🍁🍁🍁🍁🍁🍁



ஸ்ரீமத் கௌரப்ரியா லோகநாத பாதப்ஜா-ஸத் பதம்

ராதா-க்ருஷ்ண ரஸோன்மதம் வந்தே ஸ்ரீமான் நரோத்தம்



“ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் தாமரைப் பாதத்தில் தேனருதும்  தேனீயாக இருக்கும் ஸ்ரீல நரோத்தம தாஸ் தாகூரை நான் வணங்குகிறேன். அவர் ஸ்ரீ ராதா மற்றும் கிருஷ்ணரின் அன்பில் பரவசமடைந்துள்ளார்.”



கிழக்கு வங்காளத்தில் பகவான் ஸ்ரீ சைதன்யர்


🍁🍁🍁🍁🍁🍁




ஒரு முறை பகவான் சைதன்யர் தன்னுடைய சாகாக்களுடன் கிழக்கு வங்காளத்திலுள்ள கேதுரி என்ற கிராமத்திற்கு வருகை புரிந்தார். அப்போது திடீரென்று அவர் அழ ஆரம்பித்தார். “நரோத்தம், நரோத்தம், என் அன்பான நரோத்தம், நீ எங்கு இருக்கிறாய்?” இதைக் கேட்ட பகவானின் சகாக்களெல்லோரும் மிகவும் ஆச்சரியம் அடைந்தனர். ஏனென்றால் அவர்கள் இதற்கு முன் இந்த பெயருடைய யாரையும் அறிந்திருக்கவில்லை இதனால் அவர்கள் கேட்டனர். "யார் இந்த நரோத்தம்?" ' அதற்கு பகவான் அவர் இனி மேல்தான் வரப்போகிறார்" என்று பதிலளித்தார். அடுத்த நாள் பகவான் ஶ்ரீ சைதன்யர்  பத்மா நதியில் ஸ்நானம் செய்த போது, பத்மா நதிக்குத் தம் தெய்வீக பிரேமையைக் கொடுத்து இதை எதிர்காலத்தில் வரும் நரோத்தமரிடம் கொடுக்கும் படி கேட்டுக் கொண்டார். அவரை எவ்வாறு அடையாளம் கண்டு கொள்வது என்று கேட்ட பத்மா நதியிடம், பகவான் சைதன்யர் பதிலளிதார் "அவர் (நரோத்தம்) வரும் போது உங்கள் இதயம் ஆனந்தத்தால் பெருகும், உங்களது நீரோட்டம் பெருகி வழியும், மேலும் நீங்கள் அளவில்லாத ஆனந்த பரவசத்தை உணர்வீர்கள்" என்றார்.


ஸ்ரீல நரோத்தம் தாஸ் தாகூரின் வருகை


🍁🍁🍁🍁🍁🍁🍁


சில வருடங்களுக்குப் பிறகு ஸ்ரீல நரோத்தம் தாஸ் தாகூர் ஒரு பௌர்ணமி தினத்தன்று கேதுரி என்னும் கிராமத்தில் பிறந்தார். அவரது தந்தையான கிருஷ்ணானந்த தத்தா, 'கயாஸ்த சூத்திர வகுப்பில் வரும் மிகவும்  புகழ்பெற்ற அரசராவார். குழந்தையான நரோத்தமர் மிக கவர்ச்சிகரமான அங்க அம்சங்களுடன் கருமை நிறத்தில் காணப்பட்டார். அவர் தனது ஆசிரியர்களிடமிருந்து பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் பல லீலைகளை கேட்டறிந்த பின் அவர்பால் பக்தி நிலைக்கு உயர்த்தப்பட்டார்.


ஒரு நாள் நரோதமர் தனது அரண்மனையை விட்டு வெளியேறி பத்மா நதிக்குக் குளிக்கச் சென்றார். வெகு நேரமாகியும் அவர் திரும்பி வராததால் அவருடைய பெற்றோர், "நரோத்தம் எங்கே சென்றுவிட்டான்" என்று மிகவும் கவலைப்பட்டனர். அனைத்து இடங்களில் தேடியும் அவர்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. இறுதியில் பத்மா நதியின் கரையில் தங்க நிற மேனியுடன் ஒரு சிறுவன் பித்து பிடித்தவன் போல் பகவான் ஶ்ரீ ஹரியின் திருநாமத்தை பாடி நடனமாடிக் கொண்டு தொடர்ந்து அழுது கொண்டிருப்பதைக் கண்டார்கள். அருகில் சென்று பார்த்தபோது அச்சிறுவன் அவர்களுடைய மகன் நரோத்தம் என்பதை தெரிந்து கொண்டார்கள். அவன் பத்மா நதிக்கு குளிக்கச் சென்ற போது பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு விட்டுச் சென்ற, கிருஷ்ண பிரேமையை பத்மா நதியானது நரோத்தமருக்கு வழங்கியது. அதன் விளைவாக கருமை நிறம் கொண்ட நரோத்தமரின் தேகம் பகவான் ஶ்ரீ சைதன்யரை போன்று தங்க நிறமாக மாறியது.


அவரது பெற்றோருக்கு இவை ஒன்றும் தெரியாததால் தங்களது மகன் பைத்தியமாகி விட்டான் என்று நினைத்தனர். பகவத் பிரேமையை அனுபவிக்கும் ஒரு தூய பக்தரது சாதாரண நடத்தையே இதுதான் என்பதை அவர்களால்  புரிந்து கொள்ள முடியவில்லை. சிறிது அமைதியானதும் பெற்றோர் நரோத்தமரை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அதன் பிறகு அவரது நினைவெல்லாம் விருந்தாவனத்திற்குச் செல்வது பற்றியே இருந்தது. அவரது பெற்றோர்கள்  தங்களது மகனைக் குறித்து பெரிய திட்டங்களை வைத்திருந்தனர். அவரது தந்தைக்குப் பின் நரோதமர் மன்னராக வேண்டும் என்பதற்காக அவரை அரண்மனையிலேயே  வைத்திருக்க தங்களால் முடிந்த வரையிலான முயற்சிகளை மேற்கொண்டனர்.  ஆனால் நரோத்தமர் தனது மனதை மாற்றவே இல்லை.  அவர் செல்வத்தின்மீதோ, உலகியல் இன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்றோ அவர் மனம் நாட்டம் கொள்ளவில்லை. 


முதல் வாய்ப்பிலேயே வீட்டை விட்டு விருந்தாவனத்திற்கு ஓடினார். நரோத்தம் ஒரு ராஜாவின் மகனாக இருந்தாலும் வெறுங்காலுடனேயே ஓடினார்.


விருந்தாவனத்தில் நரோதமர்


🍁🍁🍁🍁🍁🍁🍁


புனிதமான விருந்தாவனத்தில் நரோத்தமர்,  ஸ்ரீ லோகநாத் கோஸ்வாமியிடம் அடைக்கலம் பெற்று பணிவுடன் அவருக்கு சேவை செய்து வந்தார். ஸ்ரீ லோகநாத் கோஸ்வாமியே தன் ஆன்மீக குருவாக வர வேண்டுமென்றும் விரும்பினார். லோகநாத் கோஸ்வாமி பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் நேரடி சகா ஆவார்.  மேலும் அவருக்கு மிகவும் வயதாகிவிட்டதாலும்,  பணிவின் காரணமாகவும் இனிமேல் தான் சீடர்களை ஏற்கப் போவதில்லை என உறுதி எடுத்திருந்தார். ஆனால் நரோத்தமர், லோகநாத் கோஸ்வாமியை தன் ஆன்மீக குருவாக ஏற்பது என்னும் தீர்மனத்தில்  மிகவும் உறுதியாகவும், தனது நம்பிக்கையை கைவிடாமலும், அவருக்கு பணிவுடன் சேவை செய்து வந்தார். எனவே லோகநாத் கோஸ்வாமி பயன்படுத்தும் கழிப்பிடத்தை தூய்மைப் படுத்தும் சேவையை மிக இரகசியமாக செய்து வந்தார். தனது  கழிப்பிடம் மிகவும் சுத்தமாக இருப்பதை கண்ட லோகநாத கோஸ்வாமி மிகவும் ஆச்சரியப்பட்டார், ஆனால் அவருக்கு இதை யார் செய்திருப்பார்கள் என்ற விபரம் தெரியவில்லை. ஒரு நாள் இக்காரியத்தை நரோத்தம் தான் செய்கிறார் என்று கண்டுபிடித்து விட்டார். எப்போதிருந்து அரசனின் மகனான நரோத்தம் கழிவறை தூய்மையாக்குபவன் ஆனார்?  என்று ஸ்ரீ லோகநாத் கோஸ்வாமி ஆச்சரியப்பட்டார். இவ்விதமாக ஸ்ரீல நரோத்தம் தாஸ், பணிவான சேவையால் லோகநாத் கோஸ்வாமியின் இதயத்தில் இடம்பிடித்து அவரது ஒரே ஒரு  சீடரானார். லோகநாத் கோஸ்வாமி நரோத்தமிடம், "என்னுடைய தீர்மானத்தை விட உன்னுடைய தீர்மானம் மிக சக்திவாய்ந்தது, தவிர உன்னைப்போன்ற ஒரு சீடனை பெற்றிருப்பது நான் பெற்ற பாக்கியமும் இறைவனின் அனுக்ரகமும்மாகும்.' என்றார்.


கிழக்கு வங்காளத்திற்குத் திரும்புதல்


🍁🍁🍁🍁🍁🍁



தன்னுடைய குருதேவரின் கட்டளைப்படி நரோத்தமதாஸ் தாகூர் விருந்தாவனத்தில் ஸ்ரீ நிவாஸ ஆச்சாரியர் மற்றும் சியாமானந்த பண்டிதர் ஆகியோருடன் இணைந்து ஸ்ரீல ஜீவ கோஸ்வாமியிடம் வேத சாஸ்திரங்களை பயின்றார்கள்.  ஸ்ரீல ஜீவகோஸ்வாமி,  இந்த 3 புத்திசாலி சீடர்களிடம் விருந்தாவனத்து கோஸ்வாமிகள் எழுதிய கிரந்தங்களை வங்காளத்திற்கு எடுத்து செல்லுமாறு கட்டளையிட்டிருந்தார். அங்கிருப்பவர்கள் அதனை  நகலெடுத்து அனைவருக்கும் வினியோகம் செய்வதால் அனைவரும்  படித்து நன்மையடைவார்கள் என்றும் கூறினார். கிரந்தங்கள் அனைத்தையும் காளை மாட்டு வண்டியில் கொண்டு சேர்த்த பிறகு நரோத்தம் தனது சொந்த ஊரான கேதுரிக்குத் திரும்பினார். அங்கு தனது தந்தை இறந்து போனதையும், பின் தனது உறவினர் ஒருவர் புதிய அரசானாக இருப்பதையும் அவரும் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் பக்தர் என்பதையும் தெரிந்து கொண்டார். நரோத்தம் தாஸ் தாகூர் அரண்மனையின் ஆடம்பர வாழ்வினை விரும்பவில்லை. மிக எளிமையாகவே வாழ விரும்பினார். அரசர் கனிவோடு அவருக்கு எளிமையான அடக்கமான குடில் ஒன்றை அமைத்துக் கொடுத்தார். அந்த இடம் "சந்தி மண்டபம்" என்று அழைக்கப்படுகிறது.


அங்கே நரோத்தமதாஸ் தாகூர் தனது பெருமளவு நேரத்தை கிருஷ்ண உணர்வை பிரச்சாரம் செய்வதிலும், பகவானிடம் பக்தி சேவையில் ஈடுபடாது வெறுமனே வேதச் சடங்குகளை மட்டும் செய்வதில் பிரசித்தி பெற்று விளங்கிய 'ஸ்மார்த்த பிராமணர்களின் வாதங்களை முறியடிப்பதிலுமே செலவிட்டார்.



இரு பிராமண சிறுவர்கள்


🍁🍁🍁🍁🍁🍁


ஒரு நாள் நரோத்தமதாஸ் தாகூர் தனது நண்பர் ராமச்சந்திர கவிராஜருடன் வெளியில் சென்று கொண்டிருக்கும் போது அழகிய தோற்றம் கொண்ட இரு சகோதரர்கள் காளைகளையும் ஆடுகளையும் பலி கொடுப்பதற்காக காளி கோவிலுக்கு ஓட்டிச் செல்வதைக் கண்டார். உடனே நரோத்தமதாஸ் தாகூர் ராமச்சந்திர கவிராஜிடம் அந்த சிறுவர்களைக் சுட்டிக்காட்டி, "இவர்கள் இருவரும் மிருகங்களை பலியிடும் பாவகரமான செயலில் தங்களை ஈடுபடுத்தி கொண்டிருக்கின்றார்கள். மாறாக  ஸ்ரீ சைதன்ய மஹா பிரபுவின் பக்தர்களாக இவர்கள் மாறினால் மிகவும் நன்றாக இருக்கும்" என்றார். உடனேயே நரோத்தமரும் ராமச்சந்திரரும் இணைந்து ஒரு திட்டம் போட்டார்கள். அதன்படி அந்த சிறுவர்களின் முன்பு சென்று மிருகங்களை பலியிடுவதால் உண்டாகும் கர்ம விளைவுகளைக் குறித்து விவாத்தில் ஈடுபட்டார்கள்.



நரோத்தம் கூறினார், ஆமாம், இதன் மூலம் ஒருவர் நல்ல மங்களகரமான பலன்களை அடைவடதற்குப் பதிலாக பாவகரமான விளைவுகளை பெறுகிறார்கள். இதனால் அவர்கள் பிறவிதோறும் துன்பப்பட்டுக் கொண்டேயிருக்கின்றார்கள். இவை அனைத்தையும் கேட்ட சகோதரர்கள் தாங்கள் செய்வது பாவகரமான செயல் என்பதை உணர்ந்து ஒரு வித குற்ற உணர்வுடன் இருந்தனர்.


பின்னர் பயந்துபோன சிறுவர்கள் நடுங்கியபடியே ஸ்ரீல நரோத்தம தாஸ் தாகூர் மற்றும் ராமச்சந்திர கவிராஜரது தாமரைப் பாதங்களில் விழுந்து, 'நாங்கள் எவ்வாறு இந்த பாவ விளைவுகளிலிருந்து விடுபடுவது என்பதைக் கூறும்படி மிகவும் பணிவுடன் கேட்டார்கள். உடனே நரோத்தமர் கூறினார், "பயப்பட வேண்டாம். ஸ்ரீ சைத்தன்ய மஹாபிரபுவின் கருணையினால் நாங்கள் செய்வதுபோல் செய்தால் அனைத்தும் சரியாகிவிடும்" என்றார். பின்னர் சிறுவர்கள் நரோத்தமர் மற்றும் ராமச்சந்திரரின் அனுமதி பெற்று பலியிடுவதற்காக நிறுத்தப்பட்ட அனைத்து மிருகங்களையும் அவிழ்த்து விட்டார்கள். இப்படியாக அந்த சிறுவர்கள் தங்களுடைய புதிய ஆசிரியர்களுடன் சென்று ஆன்மீகத்தின் சிறப்புக்களை கற்றுணர்ந்தார்கள். இதில் ஒரு சிறுவன் ராமச்சந்திர கவிராஜரிடமும், மற்றொரு சிறுவன் ஸ்ரீல நரோத்தமரிடமும் முறையாக தீக்ஷை பெற்றார்கள்.


தந்தையின் கவலை


🍁🍁🍁🍁🍁🍁


சிறுவர்களின் தந்தை ஒரு மிகப்பெரிய நிலச்சுவான்தார். மேலும் அவர் ஒரு 'ஸ்மார்த்த பிராமணர்'. தன்னுடைய மகன்கள் வீடு திரும்பாததால் அவர் மிகவும் கவலை கொண்டிருந்தார். எனவே அவர் பக்கத்து வீடுகளிலெல்லாம் நன்றாகத் தேடினார். இறுதியில் அவர்கள் நரோத்தமரின் வீட்டிலிருப்பதை கண்டுபிடித்தார். மேலும் அவர்கள் தீக்ஷை பெற்றிருப்பதையும் அறிந்து மிகவும் கோபத்திற்குள்ளானார். அவர் ஸ்ரீல நரோத்தம் தாஸ் தாகூரிடம் கூறினார், "சூத்திர குலத்தில் பிறந்த நீங்கள் உயர்ந்த பிராமண குல பிள்ளைகளான எனது மகன்களுக்கு தீக்ஷை அளிக்க தகுதியற்றவர்" என்றார். உடனே ஒரு சிறுவன் விளக்கினான், "ஒருவரை பிராமணரா அல்லது சூத்திரரா என்று தீர்மானிப்பது அவரது பிறப்பை வைத்து அல்ல, மாறாக அவரது தகுதிகளையும் செயல்பாடுகளையும் வைத்தேயாகும். அவர்கள் மேலும் தமது தந்தையிடம் கூறினர், யார் ஒருவர், 'தான் ஓர் ஆன்மீக ஆத்மா என்றும், முழுமுதற் கடவுள் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் நித்தியமான சேவகன் என்றும் அறிகின்றானோ, அப்போது தானாகவே அனைத்து வகுப்பினருக்கும் மேலான தகுதியைப் பெற்று  விடுகிறார். இதனால்  அனைவருக்கும் தீக்ஷை கொடுக்கும் தகுதியை அவர் பெறுகிறார். இவ்வாறாக சிறுவர்கள் தங்களது ஆன்மீக குருவிடமிருந்து கற்ற வைஷ்ணவ தத்துவங்களின் சக்தியினால் தம் தந்தையை வாதத்தில் தோற்கடித்தனர்.  அவர் ஒரு பிராமணராக இருந்தாலும் வாதத்தில் தோல்வியடைந்ததில் பெருமிதம் அடைந்தார். எனவே சிறுவர்களை நகரின் மிகப் பெரிய அறிஞரான கங்கா நாராயண சக்ரவர்த்தியிடம் அழைத்துச் சென்றார்.


கங்கா நாராயண சக்ரவர்த்தி


🍁🍁🍁🍁🍁🍁


கங்கா - நாராயண சக்ரவர்த்தி சிறுவர்களை சமாதனப்படுத்தி அவர்களது ஆன்மீக குருமார்களை கைவிட முயற்சி செய்தார். "பிராமண சிறுவர்களான நீங்கள் சூத்திரர்களான அவர்களிடம் தீக்ஷை பெற்றிருக்கக் கூடாது. சிறுவர்கள் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த பண்டிதர் பேசி முடித்ததும் ஒரு சிறுவன் கூறினான். "நீங்கள் கூறும் பிராமணர், சூத்திரர் தகுதி, இந்த உடலோடு சம்பந்தப்பட்டவையே. ஆனால் ஒரு ஆன்மீக ஆத்மாவின் உண்மையான அடையாளம், மற்றும் கடமை என்னவெனில்  பரமாத்மாவான பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு அன்புடன் கூடிய பக்தித் தொண்டு செய்வதேயாகும். இதுவே சநாதன தர்மமும், நிலையான மதமும், மனித உடல் பெற்றவர்களின் தர்மமும் இதுவேயாகும். வர்ணாஸ்ரமத்தின் அமைப்பு என்பது சமூகத்தை ஒழுங்கமைப்பதற்காக மட்டுமே உள்ளது. இதற்கும் ஆன்மீக திக்ஷைக்கும் எந்த தொடர்பும் இல்லை.". சிறுவர்களின் இந்த சொற்களைக் கேட்டதும் கங்கா நாராயணரின் இதயம் மிருதுவானது. ஆன்மீக விசயங்களை இச்சிறுவர்கள் எப்படி ஆழ்ந்து புரிந்துள்ளனர் என்று அவர் வியந்தார். சிறுவர்களின் சங்கத்தில் அந்த பண்டிதருடைய இதயத்தில் இயற்கையிலேயே இருந்த பகவான் கிருஷ்ணரின் மேல் உள்ள அன்பு விழித்துக் கொண்டது. அவர் பணிவுடன் அவர்களது குருவான ஸ்ரீல நரோத்தம் தாஸ் தாகூரை அணுகி அவரிடமிருந்து தீக்ஷையும் பெற்றுக் கொண்டார்.


பொறாமை கொண்ட தந்தை


🍁🍁🍁🍁🍁🍁


நகரத்திலேயே புலமை பெற்ற பண்டிதராகிய கங்கா நாராயணர் ஸ்ரீல நரோத்தம் தாஸ் தாகூரிடமிருந்து தீக்ஷை பெற்றிருப்பதைக் கேள்வியுற்ற சிறுவர்களின் தந்தை மிகவும் கோபத்திற்குள்ளானார். இந்த நரோத்தம் ஏதோ மந்திர ஜாலம் செய்து இவர்களை கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார் என்று எண்ணினார். இப்போது ஸ்ரீல நரோத்தமரின் தந்தை அரசராக இருந்த போதிலும் அவர் 'ராஜ நரசிம்ஹ' என்ற ஒரு வலிமை மிக்க அரசருக்குக் கீழ் இருந்தார். எனவே சிறுவர்களின் தந்தை 'ராஜ நரசிம்ஹ' என்ற அந்த அரசரைச் சென்று பார்க்க முடிவு செய்தார். அரசரின் சபையில் சிறுவர்களின் தந்தை  "இந்த நரோத்தம் ஒரு சூத்திராராக இருந்த போதிலும் பிராமணர்களுக்கு தைரியமாக தீக்ஷை கொடுத்து பெருமிதத்துடனும், கர்வத்துடனும் இருக்கிறார்"  மேலும் நரோத்தமர் கலிபுருஷனின் தூதுவனாவார்" என்றும் கூறினார். அரசரும் இவ்விசயத்தை கொஞ்சம் தீவிரமாக எடுத்து அதை இந்தியாவிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற புத்திசாலிப் பண்டிதரான 'ரூப நாராயணரிடம்' அனுப்பி வைத்தார். அவர் பீகாரிலுள்ள மிதிலாவிலிருந்து  அறிவு மற்றும் கற்றலுக்கான போரில் நரோத்தமரைத் தோற்கடிப்பதற்காகவே வருகை புரிந்தார்.


திட்டம்


🍁🍁🍁🍁🍁🍁


கங்கா நாராயணரும், ராமச்சந்திர கவிராஜரும் இதில் அரசருடன், பண்டிதரும் இணைந்திருப்பதைக் கேள்வியுற்று கவலை கொண்டனர். இவர்கள் நம்முடைய ஆன்மீக குருவை தொந்தரவு செய்வதற்கென்றே வருகின்றார்கள் என்பதை அறிந்து , அவர்களை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று நினைத்து, அவர்கள் நடந்து வரும் வழியில் உள்ள சிறு கிராமத்தில் இரண்டு கடைகளை அமைப்பதன் மூலம் அவர்களைத் தடுத்து நிறுத்த திட்டம் போட்டனர். ஒரு கடையில் கங்கா நாராயணர பண்டிதர் களிமண்ணால் செய்த பானைகளை விற்பார். மற்றொரு கடையில் ராமச்சந்திர கவிராஜர் வெற்றிலை பாக்கு விற்பார். இவைகளை வாங்குவதற்காக நிச்சயம் மக்கள் வருவார்கள் என்று அவர்கள் நம்பினர். பண்டிதக் குழுவினர் இந்த கிராமத்தை அடைந்ததும் அவரின் உதவியாளர்கள் பானைகளை வாங்குவதற்காக இவர்களை அணுகினர். கடைக்காரர் (கங்கா நாராயண பண்டிதர்)  சிறந்த முறையில் சமஸ்கிருதம் பேசுவதைக் கேட்ட பண்டிதரின் உதவியாளர்கள் மிகவும் ஆச்சரியமடைந்தனர். எனவே அவர்களாகவே தத்துவங்களைக் குறித்த விவாதத்தை ஆரம்பித்தார்கள். தொடர்ந்து நடந்த வலுவான விவாதத்தில் பண்டிதரின் உதவியாளர்கள் கடைக்காரரால் வெகுவாக தோற்கடிக்கப்பட்டார்கள். அடுத்து அவர்கள் வெற்றிலை பாக்கு விற்கும் கடைக்குச் சென்றார்கள் அங்கும் இதே நிலையில் தோற்கடிக்கப்பட்டார்கள்.


பண்டிதரை தோற்கடித்தல்


🍁🍁🍁🍁🍁🍁


தனது உதவியாளர்கள் சமஸ்கிருதம் தெரிந்த இரண்டு சாதாரண கடைக்காரர்களிடம் தோல்வியுற்றதைக் கேட்ட பண்டிதர் இந்த விசயத்தில் தீவிரமாக ஆர்வம் காட்டினார். 'யார் இவர்கள்?' என்று மனதிற்குள் சிந்திக்கலானார். பின்னர் அவரே நேரடியாகச் கடைக்காரர்களிடம் சென்று விவாதிப்பதென்று தீர்மானித்தார். அவரது உதவியாளர்களைப் போலவே இவரும் தோற்கடிக்கப்பட்டார். நடந்தவை அனைத்தையும் கருத்திற்கொண்ட அரசரான ராஜ் நரசிம்கா, "இந்தியாவிலேயே பிரசித்தி பெற்ற பண்டிதரையே விவாதத்தில் தோற்கடித்த சமஸ்கிருதத்தில் புலமை பெற்ற இந்த கடைக்காரர்கள் யார்?" என்று சிந்தித்தார்.



எனவே அவர் மிகுந்த மரியாதையுடன் கடைக்காரர்களிடம், "ஐயா தாங்களிருவரும் யார்? யாரிடமிருந்து இந்த ஞானத்தைப் பெற்றீர்கள்?' என்று கேட்டார். அதற்கு அவர்கள் , "அரசே எங்களது இந்த ஞானம் எங்களது ஆன்மீக குருவின் காரணமற்ற கருணையினால் விளைந்ததாகும்." என்று பதிலுறைத்தனர். "யார் உங்கள் குரு? என்று  அரசர் கேட்க.  அதற்கு அவர்கள், "ஸ்ரீல நரோத்தம் தாஸ் தாகூர்"!! என்றனர். உடனே அரசர் பண்டிதரை நோக்கித் திரும்பி கூறினார், "ஏற்கனவே அவரது உதவியாளர்களாலேயே தோற்கடிக்கப்பட்டுவிட்ட நிலையில் உள்ள நீங்கள், ஸ்ரீல நரோத்தம் தாஸ் தாகுரரை நேரடியாக சந்தித்தீர்களானால் என்ன நடக்கும்?'.


ஒரு தூய வைஷ்ணவரது தாமரைப்பாதத்திற்கு தாம் குற்றம் இழைத்து விட்டதாக பண்டிதர் உணர்ந்தார். எனவே மன்னர் ராஜ நரசிம்காவும் பண்டிதரும் மிகவும் பணிவோடு ஸ்ரீல நரோத்தம் தாஸ் தாகூரை அணுகி அவருக்கு மரியாதை செலுத்தி அவரிடமிருந்து தீக்ஷையும் பெற்றார்கள்.


ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் விக்ரகம் கண்டெடுத்தல்


🍁🍁🍁🍁🍁🍁



ஒரு நாள் நரோத்தம் தாஸ் தாகூர் ஒரு பிராமணரின் வீட்டிற்குச் சென்றார். அப்பொழுது, பிராமணர், "எனது கூடாரத்தில் மிகவும் பயங்கரமான ஒரு பாம்பு இருக்கிறது,  இங்கு வருவோரை பார்த்து பயங்கர சப்தமெழுப்புகிறது" என்றார். எதுவுமே பேசாமல் திடீரென்று நரோத்தம் அந்த கூடாரத்தினுள் நுழைந்தார். பிராமணரும் அவரது குடும்பத்தாரும்  உறவினர்களின் பாதுகாப்பு கருதி அச்சமுற்றிருந்தனர். ஆனால் அவர்கள் சந்தோசப்படும்படியாக ஸ்ரீல நரோத்தம தாஸ் தாகூர் கையில் அழகிய ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் விக்ரகத்தோடு வெளியில் வந்தார். பின்னர் "அந்த பாம்பு இந்த விக்ரகத்தை பாதுகாத்து வந்துள்ளது" என்றார்.


இறுதி நாட்கள்


🍁🍁🍁🍁🍁🍁



ஒரு நாள் தான் இந்த பெளதிக உலகை விட்டு புறப்படும் நேரம்  வந்துவிட்டதை உணர்ந்த நரோத்தம தாஸ் தாகூர் தனது சீடர்களுடன் கங்கைக் கரைக்குச் சென்றார். இடுப்பளவு தண்ணீரில் இருந்தனர். ஸ்ரீல நரோத்தம தாஸ் தாகூர் , தனது சீடரான கங்கா நாராயணரிடம்  கொஞ்சம் தண்ணீரை தன் மேல் அடித்து பின் தன் முதுகை தேய்த்து விடுமாறு கூறினார். சீடர் அவ்வாறு செய்ததும் நரோத்தமரின் தேகம் படிப்படியாக பால் போன்ற வெண்மை நிறமாக மாறத்துவங்கியது. கூடியிருந்த அனைத்து சீடர்களும் இந்த நிகழ்வை கண்டு கங்கையில் இருந்து அவரை வெளியே கொண்டு செல்ல நினைத்த போது நரோத்தம தாஸ் தாகூர் என்னை கங்கையில் இருந்து அகற்ற கூடாது என்று அனைவருக்கும் கட்டளையிட்டார். குருவின் கட்டளையை மீற முடியாமலும். அவரது தேகம் பாலாக கரைவதை காண சகிக்க முடியாமலும் சீடர்கள் கதறி அழுதனர்.


இவ்வாறாக அவரது முழு தேகமும் பால் நிறத்தில் அந்த நதியினுள் படிப்படியாக கரைந்து மறைந்து போனது. கங்கா நாராயண் சக்ரவர்த்தி கண்ணீர் மல்க பால் போன்றிருந்த அந்த பொருளை ஒரு ஜாடியினுள் பிடித்துக் கொண்டார். அதனை அவரது வீட்டினருகில் உள்ள ஒரு புனிதமான இடத்தில் வைத்து அவ்விடத்தில் அழகான சமாதி ஒன்றை நிர்மாணித்து அதை தனது அன்பிற்குரிய குருதேவருக்கு அர்ப்பணித்தார்.



ஸ்ரீல நரோத்தம் தாஸ் தாகூரர் மிகவும் பிரசித்தி பெற்ற வைஷ்ணவ பாடல்களைப் பாடியுள்ளார். அதில் ஒன்று தனது குருதேவரான ஸ்ரீ லோகநாத் கோஸ்வாமியை புகழ்ந்து பாடிய "ஸ்ரீ குரு சரண பத்ம" பாடல் ஆகும்.


ஸ்ரீல நரோத்தம் கிருஷ்ண லீலையில் 'சம்பகா மஞ்சரி' யாக இருந்தவர். அவரது திவ்ய சமாதி விருந்தாவனத்தில் ஸ்ரீ ராதா கோகுலானந்தா கோவிலின் முற்றத்தில் உள்ளது.


ஸ்ரீல நரோத்தம தாஸ் தாகூர் கி ஜெய் !


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க



ஆன்மீக கதைகளை படிக்க 👇

Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more