பிரகலாத மகாராஜா


பிரகலாத மகாராஜா

வழங்கியவர்கள் - சுத்தபக்தி குழுவினர்

🍁🍁🍁🍁🍁🍁

மிகவும் கடினமான சூழ்நிலைகளுக்கு நடுவில், மிக வலிமையான அசுர சக்திகளுக்கு மத்தியிலும் பகவான் மீதுள்ள பக்தியை பிறழாது கடைப்பிடித்த ஒரு சிறுவனாக பிரகலாதர் என்றென்றும் அனைவரது மனதிலும் நினைவு கூறப்படுவார். இரண்யகசிபுவின் முதல் மகனான பிரகலாதர் தனது தாயின் கர்ப்பத்தில் இருந்த பொழுது தேவர்களின் அரசனான இந்திரன் கயாதுவைக் கைது செய்து அவரது கர்ப்பத்தில் இருந்த பிரகலாதரை ஹிரண்யகஷிபுவின் அடுத்த அசுர குல மன்னனாக வரக்கூடும் என்று எண்ணி அவரைக் கொல்ல முடிவு செய்தான். அந்த சமயத்தில் அங்கு தோன்றிய நாரதமுனிவர் கயாதுவை விடுதலை செய்யும்படி கூறினார். மேலும் அவளது கர்ப்பத்தில் இருப்பது பகவான் கிருஷ்ணரின் மாபெரும் பக்தர் என்றும் கூறினார்.  பின் நாரதமுனிவர் கயாதுவை தனது ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்று பக்தி சேவையைக் குறித்து போதித்தார். இவ்வாறாக அவளின் கர்ப்பத்தில் கருவாக இருந்த பிரகலாதர் , நாரதமுனிவர் போதித்த அனைத்து விஷயங்களையும் (கிருஷ்ணரைப் பற்றிய பூரண ஞானத்தை) மிகக் கவனமாக உள்வாங்கி படிப்படியாக பகவானின் தூய பக்தராக உருவானார்.

பிரகலாதர் தைத்ய (அசுர) குலத்தில் பிறந்திருந்தாலும் குழந்தை பருவத்திலேயே பகவான் ஶ்ரீமன் நாராயணனின்  மிகச் சிறந்த பக்தராக இருந்தார்.  அவர் குழந்தையாக இருந்த போதிலும் கூட குழந்தைகளுக்கான விளையாட்டுகளில் ஆர்வம் இல்லாதவராக  முற்றிலும்  கிருஷ்ண உணர்வில் ஆழ்ந்திருந்தார்.  ஐந்து வயது மட்டுமே நிரம்பி இருந்த பிரகலாதர் ஆன்மீக அறிவை வளர்ப்பதில்  அதிகமாக ஈடுபட்டு அதை மற்ற அசுர நண்பர்களுக்கும் அறிவுறுத்தி அவர்களும் பகவான் விஷ்ணுவின்பால் கவர பெரும்  உற்சாகத்தோடு ஊக்கம் அளித்தார்.

குருகுலத்தில் பயிலும்  அனைத்து மாணவர்களும் பிரகலாதரின் அறிவுரையால் பகவான் ஶ்ரீ விஷ்ணுவின்  பக்தர்களாவதைக் கண்டு அவர்களது ஆசிரியர்கள் மிகவும் பயந்தார்கள்.  எனவே பிரகலாதரின் சக்தி வாய்ந்த கிருஷ்ண உணர்வு பிரச்சாரத்தை ஹிரண்யகசிபுவிடம் விவரித்தனர்.  அசுரனான ஹிரண்யகசிபு பல கடுமையான உத்தரவுகளைத் தன் காவலர்களுக்கு பிறப்பித்தார்.  அவரது உத்தரவின்படி கூர்மையான ஆயுதங்களால் பிரகலாதரைத் தாக்கியும், யானையின் காலால் இடறச் செய்தும் பல நரக வேதனைக்கு உட்படுத்தினர்.  அவரை மலையின் உச்சியில் இருந்து தூக்கி எறிந்தனர்.  இது போன்று பல வழிகளில் பிரகலாதனைக் கொல்ல முயன்றும் அவர்களது முயற்சி ஒருபோதும் வெற்றி பெறவில்லை.  பிரகலாதர் முழுமையாக பகவத் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார்.  இதனால் ஒரு குழந்தையானது தன் தாய் அல்லது தந்தையின் மடியில் பாதுகாப்பாக வைக்கப் படுவது போல பிரகலாதர் பகவான் கோவிந்தரால் முழுமையாகப பாதுகாக்கப்பட்டார்.

ஹிரண்யகஷிபு பௌதீக அனுக்ரகங்கள் நிறையப் பெற்ற மிக சக்தி வாய்ந்த  அசுரனாகத் திகழ்ந்தான்.  பிரம்மதேவரின் கருணையினால்,  தான் சாகாவரம் பெற்று விட்டதாக தனக்குள்ளேயே எண்ணிக்கொண்டான்.  இதனால் உலகம் முழுதும் சுற்றிப் போர் புரிந்து அனைத்தையும் தன்னகத்தே கொண்டான். 

ஹிரண்யகஷிபு தனது மகனுக்கு கொடுமையான தண்டனைக்கு உட்படுத்தியும் .சித்ரவதை செய்தும் பிரகலாத மகாராஜர் தொடர்ந்து பரம புருஷ பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மகிமைகளைப் புகழ்ந்து பாடிக்கொண்டே இருந்தார்.  இதனால் கடும் கோபத்திற்குள்ளான இரணியகசிபு கிளர்ச்சியுற்று வைஷ்ணவக் குழந்தையான தன் மகனிடம்,  "நீ கூறும் அந்த கடவுள்,  இதோ இந்த அரண்மனையின் தூணில் இருக்கிறானா?" என்று கேட்டான்.  அதற்கு பிரகலாதர் உடனடியாக, "ஆம். பகவான் எங்கும் நிறைந்திருக்கிறார்"  என்று பதிலளித்தார்.  மகனின் இந்த தத்துவ வார்த்தைகளைக் கேட்ட இரணியகசிபு அதை நிராகரிக்கும் பொருட்டு பலவந்தமாக தூணில் தன் முஷ்டியால் பலமாக தாக்கினார்.  அப்போது பாதி மனிதன் பாதி சிங்கமான நரசிம்ம அவதாரத்தை எடுத்த முழுமுதற்கடவுள் ,  பிரம்மதேவரின் வரத்திற்கு ஏற்றார்போல தூணில் இருந்து குதித்து வேகமாக வெளிவந்து இரணிய கசிபுவை வதம் செய்தார்.  நீரிலோ, நிலத்திலோ,  வானிலோ அல்லாமல் பகவான் இரண்யகசிபுவை தனது மடியில் வைத்து வதம் செய்தார்.  அவர் அவனை தனது விரல் நகங்களால்  துளைத்து கிழித்தார்.  இது ஹிரண்யகசிபு கற்பனை செய்திருந்த மனித ஆயுதத்திற்கு எல்லாம் அப்பாற்பட்ட ஆயுதமாகும்.  பிரகலாதருக்கு பகவான் பல வரங்களை அருளினார்.  தன் தந்தையினால் பல கொடுமைகளுக்கும்,  இன்னல்களுக்கும் ஏன் கொலை செய்வதற்கும் கூட உள்ளாக்கப்பட்டு இருந்த பிரகலாத மஹாராஜா பகவான் நரசிம்மரிடம்  தன் தந்தையின் செயல்களுக்காக மன்னிப்புக் கோரினார்.  பிரகலாதரின் கோரிக்கையை உடனடியாக பகவான் ஏற்றுக் கொண்டார்.  இதனால் இரணியகசிபு இருண்ட நரக வாழ்விலிருந்து விடுபட்டு பகவானின் உன்னத இருப்பிடத்தை தனது மகனின் கருணையினால் அடையப் பெற்றார்.


வைஷ்ணவர் களிலேயே மிகவும் முதன்மையான எடுத்துக்காட்டாகத் திகழ்பவர் பிரகலாத மகாராஜா ஆவார்.  அவர் எப்பொழுதும் பௌதிக உலகில் பாவப்பட்ட நரக வாழ்வினால் துன்புறும் மக்களிடம் மிகவும் கருணை உடையவராய் இருந்தார்.  ஸ்மரணம் என்னும் மார்க்கத்தின் மூலம் பகவான் கிருஷ்ணரை இடையறாது நினைவு கொண்டு அவர் திருப்பாதத்தை அடைந்த பக்தர்களில் பிரகலாதர் மிகச் சிறந்த உதாரணமாவார்.  நமது வாழ்விலும் ஆன்மீக அறிவில் முன்னேற முன்னேற பல தடைகள் வரலாம். ஆனால் நாம் அதனை சகிப்புத்தன்மையுடன் பொறுத்துக் கொள்ள வேண்டும்.  உறுதியுடன் நமது லட்சியத்தை நோக்கி தொடர்ந்து முன்னேறிச் செல்லவேண்டும்.  

ஹரே கிருஷ்ண🙏

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், தகவல்கள் மற்றும் போஸ்டர்களுக்கு 👇

https://t.me/joinchat/VaBAs5fOiAeHgexI

ஆன்மீக கதைகளை படிக்க 👇

https://t.me/joinchat/HIm4JGufgEgG7jwI

Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more