சிவபெருமானின் பிரார்த்தனையும் விநாயகரின் பிறப்பும்




 சிவபெருமானின் பிரார்த்தனையும் விநாயகரின் பிறப்பும்




விநாயகர் கதை வாமன புராணத்தில் கூறுவது, பார்வதி தேவி தனது வியர்வையினால் ஒரு வடிவத்தை உண்டாக்கி, அதில் சிவனின் உடலிலிருந்த சாம்பலை தொட்டு உயிரூட்டப்பட்டார். இதனாலேயே இவர் 'கர்பத்திலிருந்து பிறவாதவர்' என்று அழைக்கப்படுகிறார்.

பின்வரும், பிரம்ம-வைவர்த்த புராணம்,சிவா புராணம் & ஸ்கந்த புராணத்தில் கூறப்படுவது யாதெனில்:

குழந்தை வரம் வேண்டி சிவனிடம், பார்வதி கூறுகிறாள் :
'மூவுலகிற்கும் இறைவனான உங்களை கணவனாக அடைந்தும், எனக்கு குழந்தை இல்லை. குழந்தை இல்லாத பெண்ணின் வாழ்க்கை பிரோஜனம் இல்லாததாக கூறப்படுகிறது' என்று கூறுகிறாள் .

பார்வதியின் விருப்பத்தினை பூர்த்திசெய்ய சிவபெருமான் அறிவுறுத்திகிறார் 'பண்புடையவளே ! புண்ய விரதத்தை கடைபிடித்து,பகவான் மீதான பக்தியினால் நீ செல்வாக்கு உடைய மகனை அடைவாய். இந்த விரதத்திற்கு வழிபாட்டுக்குகுறியவர் பகவான் கிருஷ்ணரே. அவரே வழிபடுபவர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்து, அவர்களது முன்னோர்களையும் விடுவிக்கிறார். இவரின் மந்திரத்தை உச்சரிப்பவர்கள் அனைத்து வெற்றிகளையும் அடைந்து, பின் வைகுண்டத்தை அடைந்து நித்தியமாக வசிப்பர்' என்று கூறினார்.

அதன் பின்பு, பார்வதி தேவி ஒரு வருடம் முழுவதும் பக்தியுடன் பகவான் கிருஷ்ணரை தியானித்து கடைபிடித்தாள். இதனால் பார்வதியின் விரதம் வெற்றிபெற சிவபெருமானே பகவான் கிருஷ்ணரை அணுக, கிருஷ்ணர் பின்வருமாறு பதிலளித்தார் :
'கருணையுள்ளவரே, நீர் வைஷ்ணவர்கள் எஜமானர் என்பதால் உனது மகன் கணேசர் என்கிற பெயரில் மூன்று உலகங்களிலும் அறியப்படுவான். அவரை நினைத்தால் ஒருவருடைய வாழ்வின் தடைகள் நீங்கும்.இவ்வாறாக அவன் 'விக்னேஸ்வரன்' எனப்படுவான். மேலும்,தானத்தில் கொடுக்கப்படும் உணவுகளை எல்லாவத்தையும் உண்பதால் அவர் 'சம்போதர'(பெரிய வயிறையுடையவன்) என்றும் அறியப்படுகிறார்.

'சனியின் பார்வையினால் சம்போதரரின் தலை சீவப்பட்டு அவ்விடத்தில் ஒரு யானை தலை பொருத்தப்பட்டு, அவரை 'ஆணை முகத்தான்' என்றும், அவரின் ஒரு தந்தம் பரசுராமரால் வெட்டப்பட்டதால் அவர் 'ஒத்தை தந்தமுடையவர்' என்றும் அழைக்கப்படுவர். இவர் பிரபஞ்சம் முழுவதும் மக்களால் போற்றப்படுவர்,பிற தேவர்களை வழிபடுவதற்கு முன்னதாக இவரை வழிபடுவோர் வெற்றியடைவர், இல்லையெனில் தோல்வியடைவார்கள்' என்று கூறினார்.

இப்படி கணேசர் பிறந்தார். இவரை பார்த்து சிவபெருமான் கூறுகிறார்
'மகனே, எனது உயிரையும்விட நீ எனக்கு பிரியமானவன் ! என்னைப்போலவே தானம் கொடு, ஹரியிடம் பக்தியுடன் இரு ! மதிக்கத்தக்கவனாக இரு ! எதிரிகளை வெல்வாயாக ! '' என்று அவனை ஆசீர்வதித்தார்.

எனவே, கணேசர் சுதந்திரமானவரோ, உச்ச படைப்பாளரோ, அனைத்திற்கும் மூலமானவரோ இல்லை என்பதை இந்த புராண கதையிலிருந்து அறியலாம்.

கணேசர், பகவான் கிருஷ்ணரின் ஆசையினால் வந்து, பகவானால் சக்தி அளிக்கப்பட்டு தர்மத்தை பின்பற்றுவோரின் பாதையில் உள்ள தடைகளை நீக்குகிறார்.

பிரம்மா தனது பிராத்தனையில் கூறுகிறார் ...

யத்-பாத-பல்லவ-யுகம் வினிதாய கும்ப-
தவன்ந்தே ப்ரணாம-ஸமயே ஸ கணாதிராஜா: I
விக்ஹ்னான் விஹந்தும் அலம் அஷ்ய ஜகத்-த்ரயஷ்ய
கோவிந்தம் ஆதி-புருஷம் தம் அஹம் பஜாமி II

'மூன்று உலகிலுள்ள தடைகளை அழிக்கும் தனது செயலுக்கான சக்தியை பெறுவதற்காக, கணேசன் தனது யானை தலையில் புடைத்திருக்கும் ஒரு ஜோடி கும்பம் மீது யாருடைய திருவடிகளை தாங்கியுள்ளாரோ, அந்த ஆதி புருஷரான கோவிந்தர் நான் வணங்குகிறேன்' - பிரம்ம சம்ஹிதை - 5.50

பிரம்ம-வைவர்த்த புராணத்தில் - 4-6-117 கூறுகிறது...

கணேஷ: கார்திகேயஷ் ச நத்வா கிருஷ்ணம் பராத் பரம்
நநாம ஷங்கரம் தர்மம் அனந்தம் கமலோத்பவம்

'முதலில் உயர்தவர்களில் உயர்தவரான பகவான் கிருஷ்ணரிடத்திலும், பிறகு சிவபெருமான், யமராஜர், சேஷார், பிரம்மதேவர் அகியோரிடத்திலும், கணேசனும் கார்த்திகேயனும் விழுந்து வணங்கினர்'

அதாவது, பகவான் கிருஷ்ணரை உணராதவர்கள், கணேசருக்கு மரியாதை செலுத்தி வழிபட்டு தடைகளை நீக்கி கொள்கிறார்கள்.

ஆதி-வராஹ புராணம் - 211.85 கூறுகிறது....

ஜன்மாந்தர-ஸஹஸ்ரேஷு ஷமாராத்ய வ்ரிஷத்வஜம்
வைஷ்ணவத்வம் லபேத் கஷ்சித் ஸர்வ-பாபஷியே ஸதி


'ஆயிரமாயிரம் பிறவிகளாக ஒருவர் கணேசரை வழிபட்டு எல்லா பாவங்களிலிருந்தும் விடுபட்ட பிறகே, வைஷ்ணவம் என்னும் தளத்தை அடைவது சாத்தியமாகும்'

பத்மபுராணம் கூறுகிறது ....

அனன்ய-ஷரணாே பக்தோ நாம-மந்த்ரேஷு தீஷித:
கதாசின் நார்சயேத் தேவான் கணேஷாதீம்ஸ் து வைஷ்ணவ:

'பகவானுக்கான தூய பக்தியில் விருப்பமுடைய பக்தன், மற்றும் வைஷ்ணவ மந்திரத்துடன் தீக்ஷ வாங்கியவன், கணேசரையோ பிற தேவர்களையோ எப்போதும் வழிபடவேண்டிய அவசியமில்லை'
எனவே, தூய பக்தனுடைய இதயம், மனம், அல்லது ஆத்மாவை பகவான் கிருஷ்ணரிடம் தவிர வேறு யாரிடமும் கொடுக்க விரும்புவதில்லை.

கற்புள்ள மனைவி அவளது கணவரிடத்தில் மட்டுமே சார்ந்திருப்பதை போல, பகவானுடைய பக்தர்கள் கிருஷ்ணரை மட்டுமே சார்ந்து, நம்பிக்கையுடன் பக்தியுடனும் எல்லா சூழ்நிலைகளிலும் அவருக்கு நிபந்தனையில்லாமல் சேவை செய்கிறான். இதுவே தூய பக்தியின் அடையாளங்கள். 

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!

ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி

🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆


சுத்த பக்தி https://t.me/suddhabhaktitami.

Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more