இந்தியாவில் (வட அரைக்கோளத்தில்) வசந்த காலத்தின் முதல் நாள் அதாவது வளர்பிறையின் ஐந்தாவது நாளில், இந்த வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக, விருந்தாவனத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு பல விதமான பழங்கள், இலைகள், மலர்கள் மற்றும் முளை கட்டும் பயிர்கள் ஆகியவற்றை அர்ப்பணம் செய்ய வேண்டும். ஏனெனில் இவை அனைத்தும் புது உயிர் மற்றும் வளர்ச்சியை குறிக்கும். வ்ரஜ வாசிகளை பின்பற்றும் விதமாக, பகவான் கிருஷ்ணரின் உடலில் பல விதமான வர்ணங்களை கொண்டு அலங்காரம் செய்ய வேண்டும்; பின்னர் பகவானுக்கு சிறப்பு ஆராதனை செய்ய வேண்டும். மஞ்சள் நிற மலர்களை அர்பணிப்பது மிகவும் நல்லது.
இந்த நாளில் வசந்த ராகத்தை பாட வேண்டும். விருந்தவனத்தில் இருக்கும் பகவானுடைய விக்ரஹங்களுக்கு இந்த நாளில் மஞ்சள் அல்லது மஞ்சள் மற்றும் பச்சை கலந்த வஸ்திரம் அணிவிக்கப்படும். விருந்தாவனம், ஶ்ரீதாம் மாயாப்பூர், ஜெகந்தாத பூரி ஷேத்திரம் மற்றும் உடுப்பியில் - பெண்களும் மஞ்சள் நிறத்தில் ஆடைகளை அணிந்திருப்பர்.
பெண்கள் குல விருத்திக்காகவும் பயிர்கள் மற்றும் பசுக்களின் விருத்திக்காகவும். பல சடங்குகள் இந்த நன்நாளில் செய்வார்கள் , மேலும் புதிய தொழில் துவங்குவது, திருமணங்கள் நடைபெறுவது என அணைத்து சுப காரியங்களும் இந்த தினத்தில் செய்வது மிகவும் சிறப்பானதாகும்.
மஞ்சள் நிற கடுகு மலர்கள் கொண்ட தோட்டத்தை வளர்ப்பது ஒரு பாரம்பரியம் . வசந்த காலத்தின் துவக்கத்தில் கொண்டாடப்படும் இந்த கடுகு மலர்கள், புது வாழ்க்கையை உணர்த்துகிறது; மேலும் இயற்கை அதன் அற்புதத்தை இதன் மூலம் வெளிப்படுத்துவதாக கருதப்படுகிறது. ஆகையால் இந்த விழாவின் நிறம் மஞ்சள். பெண்கள் அனைவரும் மஞ்சள் நிற புடவையை உடுத்துவது சிறப்பு. இந்த நாளில் செய்யும் பூஜை சரஸ்வதி தேவிக்கானதாகும். அவரிடம் அறிவையும் ஞானத்தையும் நாம் வேண்டுகிறோம். இந்த நாளில் பலர், பல விதமான பூஜைகளை செய்கிறார்கள்.
வங்காளத்தில், சரஸ்வதி தேவி கோவில் அமைந்துள்ள இடங்களில் மீன் வடிவம் கொண்ட வண்ண கோலங்கள் போடுகின்றனர் (அங்கு மீன் அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது). குடும்பத்தினர் அனைவரும் அதிகாலை எழுந்து நீராடி, வெள்ளை அல்லது மஞ்சள் நிற உடைகளை அணிந்து ஆலயத்திற்கு செல்வார்கள்; அங்கு இந்த வசந்த பஞ்சமி நாளில் சரஸ்வதி தேவிக்கு சிறப்பு ஆராதனை நடைபெறும். பக்தர்கள் அனைவரும் தீப ஆராதனையை, கரங்களில் தொட்டு தலையில் ஒற்றிக்கொள்வார்கள். குழந்தைகள் அனைவரும் தங்களது புத்தகங்களை சரஸ்வதி தேவியின் பாதங்களில் சமர்ப்பித்து அன்று முழுவதும் பூஜையில் வைத்திருக்கும் புத்தகத்தை எடுத்து யாரும் படிக்க மாட்டார்கள். ஏனெனில் அன்று, சரஸ்வதி தேவி புத்தகங்களை ஆசீர்வதிப்பதாக கருதப்படுகிறது. ராஜஸ்தானிலும் இது போலவே கோலாகலமாக இந்த விழா கொண்டாடப்படுகிறது. இல்லத்தில் இருக்கும் சிறிய குழந்தை அனைவரது நெற்றியிலும் திலகம் இடும். மேலும் நீர் மற்றும் மற்ற வஸ்துக்களை பகவானின் திருமேனியின் மீது தெளித்து வழிபடுவர். வீட்டில் இருக்கும் பெண்கள், வருகை தந்திருக்கும் அனைவருக்கும் இனிப்பு, வெற்றிலை பக்கு மற்றும் மேலும் சில பிரசாதங்களை கொடுப்பதன் மூலம் இந்த விழா நிறைவடையும்.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
Comments
Post a Comment