🍁🍁🍁🍁🍁🍁
புண்ட ரீக வித் யாநிதி. - பஃட,ஷா.கா, ஜானி
ஜா,ர நாம லஞா ப்ரபு, காந்தி லா ஆபனி
மொழிபெயர்ப்பு
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
புண்டரீக வித்யாநிதி மூன்றாவது மிகப்பெரிய கிளையாவார். அவர் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவிற்கு மிகவும் பிரியமானவர், அவரது பிரிவில் சில நேரங்களில் ஸ்ரீ சைதன்யர் அழவும் செய்வார்
பொருளுரை:
🍁🍁🍁🍁🍁🍁
கௌர கணோத், தேஷதிபிகா (54), ஸ்ரீல புண்டரீக வித்யாநிதியை கிருஷ்ண லீலையில் ஸ்ரீமதி ராதாராணியின் தந்தையாக விளக்குகின்றது. எனவே, சைதன்ய மஹாபிரபு அவரைத் தமது தந்தையைப் போன்று நடத்தினார். புண்டரீக வித்யாநிதியின் தந்தை பாணேஸ்வரர் என்று அறியப்பட்டார், மற்றோர் அபிப்பிராயத்தின்படி சுக்லாம்பர பிரம்மசாரி என்று அறியப்பட்டார், அவரது தாயாரின் பெயர் கங்காதேவி. ஓர் அபிப்பிராயத்தின்படி, பாணேஸ்வரர் ஸ்ரீ சிவராம கங்கோபாத்யாயரின் வம்சத்தில் வந்தவராவார். புண்டரீக வித்யாநிதியின் பூர்வீகம் கிழக்கு வங்காளமாகும் (தற்போது வங்காளதேசம்), டாக்காவிற்கு அருகிலுள்ள பா,கியா என்னும் கிராமத்தில் அவர் பிராமண குலத்தின் வாரேந்திர பிரிவைச் சார்ந்தவராவார். சில நேரங்களில் இந்த வாரேந்திர பிராமணர்கள் ராடிய பிராமணர்கள் என்று அழைக்கப்படும் மற்றொரு பிரிவினருடன் சர்ச்சைகளில் ஈடுபட்டனர். எனவே, புண்டரீக வித்யாநிதியின் குடும்பம் அச்சமயத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தது, அவர்கள் மதிப்பிற்குரிய குடும்பமாக வாழவில்லை .
ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர் தமது அனுபாஷ்ய உரையில் எழுதுகிறார், "இக்குடும்பத்தின் உறுப்பினர்களில் ஒருவர் தற்போது விருந்தாவனத்தில் வாழ்கிறார், அவரது பெயர் ஸரோஜானந்த கோஸ்வாமி இக்குடும்பத்தின் ஒரு சிறப்பம்சம் யாதெனில், இதன் ஒவ்வோர் உறுப்பினர்களும் ஒரே ஒரு மகனைக் கொண்டிருந்தனர் அல்லது மகனேயின்றி இருந்தனர்; எனவே, இக்குடும்பம் மிகவும் விரிவானதல்ல. கிழக்கு வங்காளத்தின் சட்டகிராம மாவட்டத்தில் ஹாத-ஹாஜாரி என்று அறியப்படும் இடம் ஒன்று உள்ளது, அதிலிருந்து சற்று தொலைவில் மேக,லா-கிராமம் என்று அறியப்படும் ஊர் ஒன்று உள்ளது, அங்கே புண்டரீக வித்யாநிதியின் முன்னோர்கள் வசித்தனர். மேகலா-கிராமத்திற்கு சட்டகிராமத்திலிருந்து மாட்டு வண்டி, குதிரை வண்டி அல்லது படகில் செல்லலாம் இங்குள்ள விசைப்படகு நிலையம் அன்னபூர்ணார படித்துறை என்று அறியப்படுகிறது. இப்படித்துறையிலிருந்து இரண்டு மைல் தென்மேற்கில் புண்டரீக வித்யாநிதியின் பிறப்பிடம் உள்ளது அங்கு புண்டரீக வித்யாநிதியினால் கட்டப்பட்ட கோயில் தற்போது மிகவும் பழையதாகி புனரமைக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது பழுதுபார்க்காவிடில் அக்கோயில் விரைவிலேயே இடிந்துவிடும். அக்கோயிலின் கற்களில் இரண்டு கல்வெட்டுகள் பொறுத்தப்பட்டுள்ளன. ஆனால் அவை மிகவும் பழமையாக இருப்பதால் அவற்றைப் படிக்க இயலாது. இருந்தும், இந்தக் கோயிலுக்கு இருநூறு அடி தெற்கில் மற்றொரு கோயில் உள்ளது, சிலர் அதுவே புண்டரீக வித்யாநிதியினால் கட்டப்பட்ட பழைய கோயில் என்று கூறுகின்றனர்
ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு புண்டரீக வித்யாநிதியை "தந்தை" என்று அழைப்பார், அவர் அவருக்கு "பிரேமநிதி" என்னும் பட்டத்தினையும் வழங்கினார். பிற்காலத்தில் புண்டரீக வித்யாநிதி கதாதர பண்டிதரின் ஆன்மீக குருவானார், ஸ்வரூப தாமோதரரின் நெருங்கிய தோழராகவும் இருந்தார். கதாதர பண்டிதர் முதலில் புண்டரீக வித்யாநிதியை பணத்தில் ஆர்வம் கொண்ட ஒரு சாதாரண மனிதரென தவறாகப் புரிந்து கொண்டார்.
ஆனால் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவினால் திருத்தப்பட்ட பின்னர், கதாதரர் புண்டரீகரின் சீடரானார். புண்டரீக வித்யாநிதியின் வாழ்வில் நடைபெற்ற மற்றொரு சம்பவத்தில், அவர் ஜகந்நாதர் கோயிலில் உள்ள பூஜாரிகளை இழிவாக உரைத்தார். அதற்காக ஜகந்நாத பிரபு தாமே நேரடியாக அவருடைய கன்னங்களில் அறைந்து அவரைக் கண்டித்தார். இது ஸ்ரீ சைதன்ய பாகவதத்தின் அந்திய காண்டத்தின் பத்தாவது அத்தியாயத்தில் விளக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ஹரகுமார ஸ்மிருதிதீர்த்தர், ஸ்ரீ கிருஷ்ணகிங்கர வித்யாலங்காரர் என்னும் பெயர் கொண்ட புண்டரீக வித்யாநிதியின் வம்சத்தினர் இருவர் தமது காலத்தில் வாழ்ந்து வந்ததாக ஸ்ரீ பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர் குறிப்பிடுகிறார். மேலும் அதிகமான தகவல்களைப் பெறுவதற்கு வைஷ்ணவ-மஞ்ஜுஷா என்னும் தொகுப்பினை அணுக வேண்டும்
( ஶ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் / 1.10.14 )
Comments
Post a Comment