சிவபெருமான்


 சிவபெருமான்


வழங்கியவர்கள் :- சுத்தபக்தி குழுவினர்


🍁🍁🍁🍁🍁🍁🍁


படைப்பின் ஆரம்பத்தில் பிரஜைகளை அதிகப்படுத்துவது மிகவும் அவசியமாக இருந்தது. இதனால் பிரம்மதேவர் தனது மகன்களாக ஒவ்வொருவரையும் படைத்து பிரஜைகளை அதிகமாக்கும் படி கட்டளையிட்டார். எனினும் அவரது மகன்களான நான்கு குமாரர்களும் அவரது கட்டளையை மறுத்துவிட்டனர். ஏனென்றால் அவர்கள் வாழ்நாள் முழுதும் பிரம்மச்சாரியாகவே இருந்து பரம புருஷ பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு பக்தி சேவையாற்ற விரும்பினர். இதனால் கடும் கோபமடைந்தார் பிரம்மதேவர். அவரது கோபத்தின் விளைவாக அவரது   இரு புருவங்களுக்கிடையில் இருந்து சிவபெருமான் அல்லது ருத்திரர் தோன்றினார். 


"சிவ" என்ற சொல்லுக்கு அனைத்து மங்களங்களையும் கொண்டவர் என்று பொருள்படுகிறது.  சிவபெருமான் தமோ குணத்தின் (அறியாமை குணத்தின்) அதிபதியாக இருந்து இறுதியில் பிரபஞ்சத்தை அழிக்கும் பொறுப்பில் இருக்கிறார். அவர் நிறைய விசேஷ சக்திகளை தன்னகத்தே கொண்டிருக்கிறார். உதாரணமாக ஒரு சமயம் தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலை கடைந்தனர் . அப்போது கடலிலிருந்து உண்டான விஷத்தை உலக நன்மைக்காக சிவபெருமான் குடித்தார்.  விஷத்தின் ஒரு துளியானது சாதாரணமாக ஒருவரை கொல்லும் வீரியம் கொண்டது.  அத்தகைய விஷத்தை அவர் தன் தொண்டையில் தாங்கிக் கொண்டார்.  இதனால் அவரது தொண்டை நீல நிறமானது . எனவே அவர் "நீலகண்டன்" என்ற திருநாமத்தில் அழைக்கப்பெற்றார்.



சிவபெருமான் கடந்தகாலம், நிகழ்காலம், வருங்காலம் என முக்காலத்தையும் உணர்ந்தவராவார்.  அவரது ஒரு கண் சூரியன் மற்றொரு கண் சந்திரன் ஆகும். மூன்றாவது ஒரு கண் உள்ளது. அது அவரது இரு புருவங்களுக்கிடையில் உள்ளது. அது அக்னிக்கு ஒப்பானதாகும்.  அவரால் தன் கண்ணிலிருந்து அக்னியை உண்டாக்கும் முடியும்.  அவர் மிக சக்திவாய்ந்த ஜீவன்களையும் வெற்றி கொள்ளும் தன்மையுடையவர்.  இருந்தாலும் அவர் மிகவும்  சாந்தமானவர். எதிலும் பற்றற்றவர்.  தனக்கென்று எதையும் கொள்ளாதவர். மரத்தினடியில் வாழ்பவர். உலகியல் விஷயங்களில் இருந்து முற்றிலும் விலகி இருப்பவர்.  ஆடம்பரமான உடைகளையோ,  மாலைகளையோ,  ஆபரணங்களையோ ஏற்காதவர். அவர் மிகவும் உயர்ந்த  ஆன்மீக நிலையில் இருப்பவர்.  பௌதிக விஷயங்களில் ஒருவர் எவ்வாறு பற்றற்று இருக்க வேண்டும் என்பதற்கு சிவபெருமான் மிகச் சிறந்த உதாரணமாவார். எனவே ஒருவர் அவரது அடிச்சுவடுகளை பின்பற்ற வேண்டும். அவரது அசாதாரணமான விஷத்தை குடிப்பது போன்ற செயல்களை நகல் செய்யக்கூடாது. இயற்கையில் மிகவும் மங்களமான சிவபெருமான் பகவான் ஸ்ரீ வாமன தேவரின் தாமரைப் பாதத்தைக் கழுவியதிலிருந்து உருவான புனித கங்கையைத் தன் தலையில் தங்ககியதன் மூலம் இன்னும் மங்களம் பெறுகிறார்.  அவர் இடுகாட்டின் சாம்பலைத் தன் உடல் முழுவதும் பூசியிருப்பதைப் பார்க்கும் போது அவர் எவ்வாறு உலக விஷயங்களில் இருந்து பற்றற்று விலகி இருக்கிறார் என்பது புரிந்து கொள்ளப்படுகிறது.

 

இடுகாட்டு சாம்பலை பூசியிருந்தாலும் அவர் மிகத் தூய்மையானவர்.  எவ்வித களங்கமுமில்லாதவர். மிக உயர்ந்த பக்தர்களுக்கு பகவான் விஷ்ணு பொறுப்பேற்கிறார். பௌதிக  விஷயங்களில் மிகவும் பற்றுள்ளவர்களை பிரம்மதேவர் பொறுப்பேற்கிறார். ஆனால் சிவபெருமான் மிகவும் கருணை வாய்ந்தவர். ஏனெனில் அவர் முழுவதுமாக அறியாமையில் மூழ்கி உள்ளவர்களையும்,  விலங்குகளை விட மிக மோசமான நடத்தை கொண்டவர்களையும் சீர்திருத்தும் பொறுப்பை ஏற்கிறார்.  சிவபெருமானின் மற்றொரு பெயர் "பூதநாதன்" . பூதநாதன் என்றால் பூத,  பிரேத,  பிசாசுகளின் தலைவர் என்று பொருள்படும். பெரும்பாலும் சிவபெருமான் அவரது கைகள் கழுத்து இடுப்பு மற்றும் தலையில் பாம்புகளுடனேயே காட்சியளிப்பார். இது அவரை பயத்திலிருந்து விடுபட்டவரென்பதையும்  மரணத்திற்கு அப்பாற்பட்டவர் என்பதையும் உணர்த்துகிறது. பிரளயத்தின்போது  படைக்கப்பட்ட இந்த பிரபஞ்சத்தை அழிக்கும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.



சிவபெருமான் முழு ஞானம் மற்றும் தவங்கள் நிறைந்தவர். எப்போதும் திருப்தியுடன் இருப்பவர். அவர் மிக எளிதில் திருப்தி அடைபவர். இதனால் அவர் "ஆஷுதோஷ்" என்று அழைக்கப்படுகிறார்.  எந்த உயிர்களிடத்திலும் விரோதம் பாராட்டாதவர் எல்லோரின் நலம் விரும்பியாக இருக்கிறார்.


சிவபெருமான் பௌதிக இயற்கையைக் கட்டுப்படுத்தும் பார்வதி தேவி அல்லது துர்கா தேவியின் கணவராவார். சிவபெருமான் வாசம் புரியும் தலம் "கைலாசம்" என்று அழைக்கப்படுகிறது. அவர் தன் மனைவியிடம் 'தான் எப்பொழுதும் பகவான் வாசுதேவரைப் பூஜிப்பதாகவும், மனதாலும் இதயப்பூர்வமாகவும் அவருக்கு தொடர்ந்து வந்தனங்களை சமர்ப்பிப்பதாகவும் கூறுகிறார்" (ஸ்ரீமத் பாகவதம் 4.3.23) 


சிவபெருமான் பகவான் விஷ்ணுவைப் போல பகவானும் அல்ல, அதே சமயம் சாதாரண உயிர்வாழியும் அல்ல. பகவான் கிருஷ்ணருக்கும் சிவபெருமானுக்கும் உள்ள வித்தியாசம் பாலுக்கும் தயிருக்கும் இடையில் உள்ள வேறுபாடு போன்றதாகும். தயிர் பாலிலிலிருந்து வருவதாயினும் பாலின் தளத்திற்கு தயிர் ஒருபோதும் வர முடியாது. அதுபோலவே சிவபெருமான் பகவான் கிருஷ்ணரின் பிரதிநிதியாவார். அவர் கிருஷ்ணரைப் போன்று செயல்படவோ அவரைப் போன்று சுதந்திரமாக இருக்கவோ முடியாது. கிருஷ்ண பக்தன் ஒருபோதும் சிவபெருமானை அவமதிப்பது இல்லை. அவரை பகவானின் மிக உயர்ந்த பக்தராக் கருதி வணங்குகின்றார்கள். சிவபெருமான் வைஷ்ணவர்களிலேயே மிக உயர்ந்தவர் ஆவார். இதனால் ஒரு கிருஷ்ண பக்தன் சிவபெருமானை வணங்குவது கிருஷ்ணரின் தயவை வேண்டி அல்லாது பௌதிக லாபத்திற்காக அல்ல.


I

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


மேலும் இதுபோன்ற கதைகளை படிக்க கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


https://t.me/joinchat/HIm4JGufgEgG7jwI


Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more