சரஸ்வதி தேவி தோன்றிய நன்நாள்
🍁🍁🍁🍁🍁🍁
வசந்த பஞ்சமி, வட இந்தியாவில் கொண்டாடப்படும் சிறப்பு நாட்களில் ஒன்றாகும். வசந்த பஞ்சமி நாளை ரிஷி பஞ்சமி என்றும் ஸ்ரீ பஞ்சமி என்றும் அழைப்பர். வட இந்தியாவில், மக (மாசி) மாதம் (ஜனவரி - பிப்ரவரி) சுக்ல பட்ச (வளர்பிறை) ஐந்தாம் நாளான (பஞ்சமி) வசந்த பஞ்சமியன்று, சரஸ்வதி பூஜையை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வாக்தேவி, சாரதா, பாரதி, பிராமி, வீணாவாதினி, வாணி எனப் பலபெயர்களால் அழைக்கப்படும் சரஸ்வதி தேவி தோன்றிய நாளாக வசந்த பஞ்சமி கருதப்படுகிறது. வட இந்தியாவில் வசந்த பஞ்சமி திருநாளை வீடுகளிலும், கோயில்களிலும், பொது இடங்களிலும், சமுதாயத் திருநாளாகக் கொண்டாடப்படுகிற்து.
மேற்குவங்கம், ஶ்ரீ தாம் மாயாப்பூாில் உள்ள ராதா மாதா அஷ்ட சகி திருக்கோயிலில் வசந்த பஞ்சமி நாளான்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணா் மற்றும் அஷ்ட சகி விக்கிரகங்களுக்கு மஞ்சள்பொடி பூசப்பட்டு, மஞ்சள் நிற ஆடைகள், மஞ்சள்மலா் மாலைகள் அணிவிக்கப்படுகின்றன. கருவறை மண்டபங்கள் அனைத்துமே மஞ்சள் நிறமலா்களால் அலங்காிக்கப்படுகின்றன. இந்த சிருங்கார தரிசனத்தை காண இரு கண்கள் போதாது. இந்தக் காட்சியைக் காண்பதற்கென்றே ஆயிரக்கணக்கான கிருஷ்ண பக்தா்கள் இந்த நாளில் இஸ்கான் இயக்கத்தினா் நடத்தும் இவ்விழாவில் கலந்து கொள்கிறாா்கள்.
மேலும் மேற்குவங்க மாநிலத்தில் இந்த வசந்த பஞ்சமி நாளில்தான் வித்யாரம்பம் என்கிறாா்கள். இந்நாளில் கல்வியை துவக்கவுள்ள குழந்தைகள் முன்பாக பென்சில், பேனா, சிறிய தொழிற் கருவிகள் போன்றவற்றை வைத்து அவற்றில் ஏதாவது ஒன்றை எடுக்கச் சொல்வா். குழந்தை எடுக்கும் பொருளில் அடிப்படையில் அதன் ஆா்வமும், எதிா்காலமும் அமையும் என்பது நம்பிக்கை. உதாரணமாகப் பேனாவை எடுத்தால், பொிய கல்விமானாக ஆவான் என்றும், சங்கீத உபகரணங்களை எடுத்தால், சங்கீத மேதையாவான் என்றும், தொழிற்முனைவாக ஆவான் என்றும் நம்பப்படுகிறது.
வசந்த பஞ்சமி வட மாநிலங்களில் ஒரு சமுதாய விழாவாகவே மாறிவிடுகிறது என்று சொல்லலாம். ஹோலிப் பண்டிகையை வரவேற்க கட்டியம் கூறும் விழாவாக இந்த வசந்த பஞ்சமி விளங்குகிறது. இந்நாளில் சில பகுதிகளில் வண்ண வண்ண பட்டங்களைப் பறக்கவிடுவதும் விழாவின் ஓா் அம்சம்.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
Comments
Post a Comment