பலராம் பூர்ணிமா மற்றும் ரக்ஷாபந்தன் கொண்டாட்டம்
*******************************
இன்று ஶ்ரீதாம் மாயாபூரில். பலராம் பூர்ணிமா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. அதில் பக்தர்கள் ராஜாபூரில் உள்ள ஜெகன்நாதருக்கும் , பலதேவருக்கு ராக்கி கயிற்றை பரிசாக அர்ப்பணித்தார்கள் .அதை பூசாரி சுபத்ரா தேவியிடம் கொடுத்து ஜெகன்நாதர் மற்றும் பலதேவர் கையில் கட்டினார். பகவான் கையில் உள்ள கயிற்றை பிரசாதமாக திருப்பி கட்டியதும்.பக்தர்களின் மனோபாவம் மற்றும் ஆனந்தத்தை காணமுடிந்தது.
ரக்ஷாபந்தன்
*******************
சகோதர சகோதரிக்கிடையேயான உறவு பந்தத்தை மென்மேலும் இணைக்கவும், பலப்படுத்தும் பண்டிகையாகக் கொண்டாடப்படுவது தான் ‘ரக்ஷாபந்தன்’. இப்பண்டிகை, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் அதாவது, ஷ்ரவன் மாதத்தில் வரும் பூர்ணிமா (முழு நிலவு) நாளில் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையை, ‘ராக்கி’ என்றும் அழைப்பர். இத்திருநாளில், சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் மணிக்கட்டில் ஒரு புனிதமான மற்றும் மங்களகரமான கயிறைக் கட்டுவர். ரக்ஷா பந்தன் என்றால் ‘பாதுகாப்பு பிணைப்பு’ என்றும், ‘பாதுகாப்பு பந்தம்’ என்றும் பொருள். இந்த விழா, தீய விஷயங்கள் மற்றும் காரியங்களிடமிருந்து சகோதரர்களைக் காப்பாற்றவும், அவர்களது நல்வாழ்வு மற்றும் நீண்ட ஆயுளுக்காக சகோதரிகள் பிரார்த்தனை செய்வதற்காகவும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில், பெண்கள் புதிய ஆடைகள் அணிந்து, தமது சகோதரர்களின் ‘மணிக்கட்டில் ராக்கி கட்டும் வரை எதுவும் சாப்பிடாமல் இருப்பர். மேலும், அவர்கள், சகோதரர்கள் ‘நெற்றியில் சிகப்பு குங்குமம் வைத்து, அவர்களுக்கு இனிப்புகள் வழங்கிய பின்பு, மணிக்கட்டில் ராக்கி என்னும் புனிதக் கயிற்றைக் கட்டுவர். இதற்கு பதிலாக, சகோதரர்களும், தங்களது பாசத்தை தெரிவிக்கும் விதமாக அவர்களுக்குப் பல பரிசுப் பொருட்களையும், ஆசிர்வாதங்களையும் வழங்குவர். அண்ணன் தங்கை உறவை மேலும் பலப்படுத்தி, இனிக்க வைக்கும் பண்டிகைத் திருவிழாவான ரக்ஷாபந்தன் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.
ராக்கி வரலாறு
***********************
மகாபாரதத்தில் பாண்டவர்களின் மனைவியான திரவுபதி, போர்க்களத்தில் கிருஷ்ணருக்கு ஏற்பட்ட காயத்தால் வடிந்த ரத்தத்தைத் தடுப்பதற்காக, அவரது புடவையின் ஒரு பகுதியைக்கிழித்து, அவரின் மணிக்கட்டில் கட்டினார். இந்நிகழ்வு, கிருஷ்ணரின் ஆழ்மனதைத் தொட்டதால், அவர் திரவுபதியைத் தனது சகோதரியாக ஏற்றுக்கொண்டு அவரை எல்லா தீய சக்திகளிடமிருந்தும், பிரச்சினைகளில் இருந்தும் பாதுகாப்பதாக அவருக்கு உறுதியளித்தார். கண்ணன் கையில் திரவுபதி கட்டிய துணியே முதல் ராக்கியாகக் கருதப்பட்டது. அதுதான் ரக்ஷா பந்தனின் தொடக்கம்.
Comments
Post a Comment