ஹோலி பண்டிகை


 ஹோலி பண்டிகை


🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹோலி பண்டிகை இந்தியாவில்  பல இடங்களில் கொண்டாடும் திருவிழா. குறிப்பாக . வட இந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான திருவிழா ஆகும். பங்குனி மாதம் பௌர்ணமி அன்று, ஹோலி கொண்டாடப்படுகிறது. வண்ணமிக்க வசந்தகாலம் துவங்குவதைக் கொண்டாடும் விழா ஹோலி. வ்ரஜ பூமி ப்ருந்தாவனம், மதுரா, நந்தி கிராமம், பர்சானா ஆகிய இடங்களில் ஹோலி மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.


அசுரன் ஹிரண்யகசிபு பிரம்மாவைக் குறித்து கடுந்தவம் செய்தான். பிரம்மா அவன் முன் தோன்றியபோது இரவிலோ, பகலிலோ, வீட்டிற்கு உள்ளேயோ, வெளியேயோ, பூமியிலோ, ஆகாயத்திலோ, மனிதனாலோ, மிருகங்களாலோ, ஆயுதங்களாலோ தனக்கு சாவு ஏற்படக்கூடாது என்று வேண்டி வரம் பெற்றான். தன்னை யாராலும் கொல்ல முடியாது என்ற மமதையில் தேவர்களையும், ரிஷிகளையும், சாதுக்களையும் துன்புறுத்தினான். எல்லாவற்றுக்கும் மேலாக தன்னையே கடவுளாக வணங்க வேண்டுமென்று கட்டளையிட்டான்.


அவனுடைய சகோதரன் ஹிரண்யாட்ஷனை பகவான் விஷ்ணு வதம் செய்துவிட்டதால் அவர் மேல் மிகவும் கோபம் கொண்டு விஷ்ணுவை யாரும் வணங்கக்கூடாது என்று அனைவருக்கும் கட்டளையிட்டான். ஆனால் அவனது மகன் பிரஹலாதன் மிகச்சிறந்த விஷ்ணுபக்தனாக இருந்தான். எத்தனை முயன்றும் அவனால் பிரஹலாதனுடைய மனதை மாற்றமுடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஹிரண்யகசிபு பிரஹலாதனை, யானையை ஏவி மிதிக்கச் செய்தும், மலையிலிருந்து உருட்டியும் கொல்ல முயற்சி செய்தான். ஆனால் பகவான் மகாவிஷ்ணு பிரஹலாதனைக் காப்பாற்றி விட்டார். ஹிரண்யகசிபுவின் சகோதரி ஹோலிகா என்பவள் தீயினால் சுடப்படாத வரத்தைப் பெற்றிருந்தாள். அதனால் அவளுடைய மடியில் பிரஹலாதனை அமரவைத்து தீ மூட்டச் செய்தான். தீ எரிய ஆரம்பித்ததும் ஹோலிகா எரிந்து போனாள். பிரஹலாதன் பகவான் விஷ்ணுவின் அருளால் எந்த தீங்கும் இன்றி தீயிலிருந்து மீண்டு வந்தான்.


அரக்கியான ஹோலிகா அழிந்து, பக்தனான பிரஹலாதன் காப்பாற்றப்பட்டதை மகிழ்ச்சியுடன் நினைவுகூரும் பண்டிகையே ஹோலி ஆகும்.


கடுமையான குளிர்காலம் முடிந்து வசந்த காலம் துவங்கும்போது புதிய பச்சைத் துளிர்களும், வண்ண மலர்களுமாய் காட்சி தரும் .. இந்த மகிழ்ச்சியை மக்கள் வண்ணப்பொடிகள் தூவியும், ஆடியும், பாடியும் கொண்டாடுகிறார்கள்



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


Telegram செயலி


🍁🍁🍁🍁🍁🍁


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.

👇


https://t.me/joinchat/VaBAs5fOiAeHgexI


ஆன்மீக கதைகளை படிக்க 👇


https://t.me/joinchat/HIm4JGufgEgG7jw


🍁🍁🍁🍁🍁🍁


வலைதளம் /  website


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


https://suddhabhaktitamil.blogspot.com/?m=1

Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more