🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
பங்குனி மாத (பிப்ரவரி/ மார்ச்) வளர்ப்பிறையில் தோன்றக்கூடிய அமலகி ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி பிரம்மாண்ட புராணத்தில் மன்ததா மன்னருக்கு வசிஸ்ட முனிவருக்கும் இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது.
ஒருமுறை மன்ததா மன்னர், வசிஸ்ட முனிவரிடம் கேட்டார், ஓ! அதிர்ஷ்டசாலியே, தாங்கள் என்னிடம் மகிழ்ச்சியும் கருணையும் கொண்டவராயின். தயவு செய்து, அனைத்து மங்களங்களும் அடையக்கூடிய ஒரு விரதத்தைப் பற்றி எனக்கு விளக்குங்கள்.
வசிஸ்ட முனிவர் பதிலளித்தார்: ஓ, மன்னா, ஒருவருக்கு அனைத்து மங்களங்களையும் கொடுக்கக்கூடிய ஒரு சிறந்த விரதத்தின் பெருமைகளையும், வரலாற்றையும் கூறுகிறேன்.
ஓ, மன்னா, இந்த விரதத்தின் பெயர் அமலகி ஏகாதசி. இந்த ஏகாதசி ஒருவரின் அனைத்து பாவ விளைவுகளை அழித்து, முக்தியை கொடுப்பதுடன் ஆயிரம் பசுக்களை தானமளிக்கும் பலனையும் கொடுக்கிறது.
பழங்காலத்தில் வைடிசா என்ற ஒரு நகரம் இருந்தது. செல்வ செழிப்பு மிக்க பிராமணர்கள், க்ஷத்ரியர்கள், வைஸ்யர்கள் மற்றும் சூத்திரர்கள் அந்நகரில் வசித்து வந்தனர்.
ஓ, மன்னா இந்த அழகிய நகரில் நாத்திகரோ (அ) பாவமிக்கவரோ எவரும் இருக்கவில்லை. முழு நகரமே வேத மந்திரங்களின் ஒலியால் நிரம்பியிருந்தது. இந்த புகழ் பெற்ற நகரில் சைத்ரதா என்ற ஒரு புண்ணியமிகு மன்னர் வாழ்ந்தார். அவர் சந்திர வம்சத்தின் அங்கத்தினரான பாசபிந்துகா மன்னரின் குடும்பத்தில் தோன்றியவர்.
சைத்ரதா மன்னர் பலம் மிக்கவராகவும், நாயகனாகவும் செல்வம் மிகுந்தவராகவும் மற்றும் வேதங்களில் புழமை மிக்கவராகவும் இருந்தார். இவருடைய ஆட்சி காலத்தில் இராஜ்ஜியத்தில் அனைத்து மங்களங்களும், செல்வ செழிப்பும் இருந்தது.
தன்னுடைய அனைத்து சகாக்களும் பகவான் விஷ்ணுவின் பக்திக் தொண்டில் இணைந்திருந்தனர். அவர்கள் அனைவரும் ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்து வந்தனர்.
ஹரியின் பக்தித்தொண்டில் ஈடுபட்டிருந்ததால் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். ஒரே ஒரு ஏழையோ (அ) கருமியோ அவருடைய இராஜ்ஜியத்தில் இருக்கவில்லை. இது போன்று பல பற்பல ஆண்டுகள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகையில் ஒரு முறை அமலகி ஏகாதசி, துவாதசியுடன் இணைந்து தோன்றியது. இந்த ஏகாதசி மிக அரிய பலன்களை கொடுக்கும் என்பதை உணர்ந்த மன்னரும், அவருடைய சகாக்களும் இந்த ஏகாதசியை சரியான வழிமுறையில் அனுஷ்டிப்பதெனத் தீர்மானித்தனர்.
ஏகாதசியன்று விடியற்காலையில் மன்னரும், தன் சகாக்களும் ஆற்றில் குளித்து, ஆற்றங்கரையில் இருந்த பகவான் விஷ்ணுவின் கோயிலுக்குச் சென்றனர். அக்கோயில் வளாகத்தில் ஒரு அமலகி மரம் இருந்தது. மன்னர் அம்மரத்தருகில் வழிபாட்டிற்காக நீர் நிரப்பிய கலசம், குடை, ஆடை, காலணி மற்றும் ஐந்து வகையான ஆபரணங்கள் போன்றவற்றை வைத்தார். அதன் பிறகு நீர், காலணி, குடை, தங்கம், வைரம், சிவப்புக்கல், நீலக்கல், முத்து மற்றும் நறுமண ஊதுபத்தி போன்றவற்றை சமர்ப்பித்து பகவான் பரசுராமனையும் அமலகியையும் வழிபட்டார். பிறகு முனிவர்களால் வழிநடத்தப்பட்ட மன்னரும் தன் சகாக்களும் கீழ்க்கண்டவாறு பிரார்த்தித்தனர்.
ஓ, பகவான் பரசுராமா, ஓ, ரேணுகாவின் மைந்தனே, அமலகி மரநிழலில் இருப்பவரே, ஜட இன்பத்தையும் முக்தியையும் அளிப்பவரே. தங்களுக்கு எமது மரியாதை கலந்த வணக்கங்களை சமர்ப்பிக்கிறோம். பிறகு அவர்கள் அமலகி மரத்தை பிரார்த்தித்தனார்.
ஓ, அமலகி ஓ, ஜகத்தை தாங்குபவரே, பகவான் பிரம்மாவின் சந்ததியே, அனைத்து பாவங்களையும் அழிக்கக் கூடியவரே, எங்கள் மரியாதை கலந்த வணக்கங்களை சமர்ப்பிக்கிறோம். தயவு செய்து எங்களுடைய பிரார்த்தனையை ஏற்றுக்கொள்ளுங்கள். இவ்வாறு சரியான முறையில் பகவானையும் அமலகியையும் வணங்கிய மன்னரும் தன் சகாக்களும் விஷ்ணு கோயில் வளாகத்தில் அன்று இரவு முழுவதும் விழித்திருந்தனர். அவ்வேளையில் கடவுளின் ஏற்பட்டால் ஒரு வேடன் அங்கு வந்தான்.
இந்த வேடன் பல உயிரினங்களை கொன்று தன் வாழ்க்கையை நடத்தி வந்தான். நெய்தீபம் மற்றும் பல மங்களகரமான பொருட்களால் அலங்கரிக்கப்பட்ட அக்கோயிலின் பலர் பகவானை புகழ்ந்து கொண்டு விழித்திருப்பதைக் கண்ட வேடன் அவர்களுடன் அமர்ந்து அங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என யோசிக்க தொடங்கினான். அந்த அதிர்ஷ்டசாலியான வேடன் கலசத்தின் மீது வைத்திருந்த பகவான் தமோதரரை தரிசித்து, விஷ்ணுவின் உன்னதமான லீலைகளைப் பற்றி கேட்களானான்.
அவன் பசியால் பீடிக்கப்பட்டிருப்பினும், அங்கு நடப்பதைதெல்லாம் திகைப்புடன் பார்த்துக் கொண்டும், ஏகாதசியின் பெருமைகளைக் கேட்டுக்கொண்டும் அன்று இரவு முழுவதும் விழித்திருந்தான். மறுநாள் காலையில் மன்னர் தன் சகாக்களுடன் அரண்மனைக்கு திரும்பினார். வேடனும் தன் வீட்டிற்கு சென்று மகிழ்ச்சியுடன் உணவு உட்கொண்டான். பல ஆண்டுகளுக்கு பிறகு, அவ்வேடனின் உயிர் பிரிந்தது. அமலகி ஏகாதசியின் பலனாலும், அன்று இரவு விழித்திருந்ததாலும். அவ்வேடன் தன் அடுத்த பிறிவியில் ஒரு மன்னரானார். அவரிடம் எண்ணில் அடங்காத யானைகள், குதிரைகள், ரதங்கள், மற்றும் மிகப்பெரிய அளவில் சேனையும் இருந்தது. இந்த வலிமையான மன்னரின் புதல்வராக பிறந்தவர்.
(வாசுராத் மன்னர்) இவர் ஜெயந்தி என்ற புகழ் பெற்ற நகரை ஆண்டுவந்த விசுராத் மன்னரின் புதல்வராக பிறந்தவர். வசுராத் மன்னர் பத்து லட்சம் கிராமங்களை ஆண்டார். இவர் சூரியனைப் போன்ற பிரகாசத்தையும் நிலவு போன்ற ஒளியையும் பகவான் விஷ்ணுவைப் போன்ற வலிமையையும் பூமியைப் போன்று பொறுமையையும் கொண்டவர் பாதர்த்தமானரும், தன் கடமைகளில் நிலைத்திருந்தவருமான இவர் பகவான் விஷ்ணுவின் ஒரு சிறந்த பக்தரானார்.
ஒருநாள் மன்னர் வசுராத் காட்டில் வேட்டையாடிக் கொண்டிருக்கையில், தன் வழிமையை இழந்தார். பசியால் பீடிக்கப்பட்டு மிகவும் சோர்வடைந்தார். வேறு வழியின்றி அவர் அந்த அடர்ந்த காட்டில், தன் கரத்தை தலையணையாகக் கொண்டு படுத்தார். அவ்வேளையில் அக்காட்டில் வசித்து வந்த சில மிலேச்சர்கள் அங்கு வந்து உறங்கிக் கொண்டிருந்த மன்னரைக் கண்டு அவரை பல வழிகளில் இம்சித்தனர். அவரை தங்களின் எதிரி என கருதி அவரை கொல்ல முற்பட்டனர். அவர்கள் தம் பெற்றோர். மற்றும் உறவினர்களைக் கொன்று தம்மை எந்த ஒரு குறிக்கோளுமின்றி இவ்வாறு அலைய விட்டிருப்பவர் இம்மன்னரே என எண்ணினார். இவ்வாறு பேசி மிலேச்சர்கள் தங்களிடம் இருந்த பலவிதமான ஆயுதங்களால் மன்னரை தாக்க முற்பட்டனர். ஆனால், ஆச்சர்யமாக எந்த ஒரு ஆயுதமும், அம்மன்னரின் உடலைத் தாக்கவில்லை. அதனால் மன்னர் எந்தவொரு வலியையும் உணரவில்லை. தங்களிடமிருந்து அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்தியபிறகு, மிலேச்சர்கள் வருத்தம் தோய்ந்து, பயத்தால் உணர்வற்றவராயினர். தங்களுடைய பலத்தையெல்லாம் இழந்தனர்.
அவ்வேளையில் அழகான, அசாதாரணமான ஒரு பெண், மன்னரின் உடலில் இருந்து வெளிப்பட்டாள். அவள் நறுமணமிக்க சந்தன பசையுடனும் பல வகையான ஆபரணங்களுடனும் கவர்ச்சிமிகு மலர்மாலையாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தாள். அவள் கண்கள் கோபத்தால் சிவந்திருந்தது. கையில் சக்கரத்தை ஏந்திய அவள், மிலேச்சர்களை கொல்வதற்காக கோபத்துடன் விரைந்தாள். அந்த பலம் வாய்ந்த பெண்மணி, ஒரே நொடியில் பாவிகளான மிலேச்சர்களைக் கொன்றாள். பிறகு மன்னர் விழித்துக்கொண்டார். இந்த பயங்கரமான நிகழ்ச்சியைக் கண்டு பயத்தால் திகைத்துப் போனார். பயங்கர தோற்றமுடைய தன் எதிரிகள் இறந்து கிடப்பதைக் கண்டு ஆச்சர்யத்துடன் கூறினார்.
இந்த வலிமையான எதிரிகளைக் கொன்று என்னை காப்பாற்றிய எனது நலன் கருதிய நண்பன் யாரோ? அவருக்கு என் இதயங்கனிந்த நன்றியை தெரிவிக்கிறேன். அதே வேளையில் வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது. தன்னிடம் சரணடைந்த ஆத்மாக்களைக் காப்பாற்ற பகவான் கேசவனை தவிர வேறு யாரால் முடியும்? சரணடைந்த பக்தர்களைக்காப்பவர் அவர் மட்டுமே வானத்தில் இருந்து இந்த குரலைக் கேட்டவுடன். மன்னர் மிகவும் திகைப்படைந்தார். பக்தி உணர்வால் தன் இதயம் உருகியது. அதன் பின்னர் மன்னர் தன் அரண்மனைக்கு திரும்பிச் சென்று, எந்தவொரு இடையூறும் இன்றி, இந்திரனைப் போல தன் இராஜ்ஜியத்தை ஆண்டார். வசிஸ்ட முனிவர் தொடர்ந்து கூறினார். எனதருமை மன்னா, இந்த புனிதமான அமலகி ஏகாதசியை அனுஷ்டிப்பவர் சந்தேகமின்றி பகவான் விஷ்ணுவின் தாமத்தை அடைவார்...
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
Comments
Post a Comment