🍁🍁🍁🍁🍁🍁🍁
பத்ம புராணம்:
🍁🍁🍁🍁🍁🍁
பூயோ பூயோ திர்த வாணி ச்ரயதாம் சயத ஜன
ந போக்தவ்யம் ந போக்தவ்யம் ஹரேர் தினே
"ஓ! மனிதர்களே! தயவு செய்து கேளுங்கள். நான் மீண்டும் மீண்டும் உறுதியோடு கூறுகிறேன், பகவான் ஹரிக்கு உகந்த நாட்களில் (ஏகாதசி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி) அன்று தயவு செய்து தானியங்கள் சாப்பிடாதீர்கள். யாரேனும் வற்புறுத்தினாலும் கூட, மறந்தும் ஒரு தானியத்தை சாப்பிட்டுவிடாதீர்கள்.
ஏன் ஏகாதசி அன்று தானியங்கள் சாப்பிடக்கூடாது என்று ப்ரஹன் நாரதிய புராணத்தில் விளக்கப்பட்டுள்ளது:
🍁🍁🍁🍁🍁🍁
யாணி காணி சபாபானி பிரம்மா ஹத்யாதி காணி சா
அண்ணம் அஸ்ரித்ய தியதந்தி ஸம்ப்ராப்தே ஹரி வாஸரே
"பிராமணரை கொன்ற பாவம் உட்பட, அணைத்து பாவங்களும் ஏகாதசி மற்றும் பகவான் ஹரிக்கு உகந்த நாட்கள் அன்று தானியங்களில் இருக்கும். யாரொருவர் இந்த நாட்களில் தானியங்களை உட்கொள்கிறாரோ, அவருக்குக்குள் இந்த பாவங்கள் போய்சேரும்.
ஹரி பக்தி விலாசம்:
🍁🍁🍁🍁🍁🍁
பிரமச்சாரி க்ரிஹஸ்தோ வா வானப்ரஸ்தோ அதாவ யதி
ஏகாதஸ்யாம் ஹி புத்தே கோ மாம்சம் ஏவ ஹி
ஒருவன் பிரமச்சாரி, க்ருஹஸ்தன், வானப்ரஸ்தம் அல்லது சந்நியாசி - என வாழ்வின் எந்த ஆசிரமத்தில் இருந்தாலும் சரி, ஏகாதசி அன்று தானியங்களை சாப்பிட்டால், பசுவின் மாமிசத்தை சாப்பிட்டதற்கு சமம். அதற்கு உண்டான பாவம் வந்து சேரும்".
ஸ்கந்த புராணம்:
🍁🍁🍁🍁🍁🍁
மத்ர் ஹா பித்ர் ஹஸ் சைவ ப்ர்தர் ஹ குரு ஹஸ் தத
ஏகாதஸ்யாஸ் து யா புண்க்தே விஷ்ணு லோக அச்சுதோ பவேத்
" ஏகாதசி மற்றும் பகவான் ஹரிக்கு உகந்த நாட்களில் யாரொருவர் தானியங்களை சாப்பிடுகிறார்களோ, அவர், தன்னுடைய தாய், தந்தை, சகோதரர்கள் மற்றும் குரு - இவர்கள் அனைவரையும் கொன்ற பாவத்தை ஏற்கிறார்கள். அவர்களால் ஆன்மீக உலகை அடைய முடியாது. ஆகையால் ஏகாதசி அன்று தானியங்கள் உண்ணக்கூடாது".
இப்போது அனைவருக்கும் ஒரு கேள்வி வரும். பகவான் ஹரியை வணங்கும் வைஷ்ணவர்கள் தான் இந்த விரதங்களை கடைபிடிக்க வேண்டும். சிவபெருமான் மற்றும் அம்மனை வழிபடுபவர்கள் இந்த விரதங்களை ஏன் கடைபிடிக்க வேண்டும்? இதனற்கு பதில் பத்ம புராணத்தில் உள்ளது.
ந சைவ ந ச ஸுரோஹஸுன் ந சக்த கண சேவக
யோ புங்தே வாஸரே விஷ்ணோர் நேய பசுவதிகோ ஹி ச
"ஒருவர் - சிவபெருமான், அம்மன், காளி, சூர்யதேவர்,விநாயகர், பைரவர் - என எந்த தேவரை வணங்கினாலும், பகவான் ஹரிக்கு உகந்த விரத தினங்களில் கண்டிப்பாக தானியங்களை உண்ணக்கூடாது. அந்த தினங்களில் தானியங்கள் சாப்பிடும் ஒருவர், மிருகத்தை விட கேவலமானவர்".
ப்ரஹன் நாரதிய புராணம்:
🍁🍁🍁🍁🍁🍁
ப்ரம்ம ஹத்யாதி பாபனம் கதான்சின் நிஷக்ர்திர் பவேத்
ஏகாதசியாத் து யோ புங்தே நிஷக்ர்திர் நாஷ்தி குத்ரசித்
"யாகங்களையும் சடங்குகளையும் பரிகாரங்களையும் செய்வதன் மூலம், பிராமணரை கொன்ற பாவத்தை கூட அகற்றி விடலாம்; ஆனால் ஏகாதசி அன்று தானியங்கள் சாப்பிடுவதன் பாவத்தை அகற்ற முடியாது".
ஸ்கந்த புராணம்:
🍁🍁🍁🍁🍁🍁
யமராஜர், தன்னுடைய கிங்கரர்களிடம் பின்வருமாறு கூறுகிறார்: "யாரொருவர் ஏகாதசி விரதத்தை கடைபிடிக்கிறார்களோ அவர்களுடைய மூன்று தலைமுறையினரை நெருங்கிவிடாதீர்கள்; அவர்கள் தாழ்ந்த குளத்தில் பிறந்திருந்தாலும் சரி, பாவங்கள் செய்திருந்தாலும் சரி; அவர்களை நரகத்திற்கு அழைத்து வராதீர்கள்; அதேசமயம் வேதங்கள் கற்றறிந்த ஒருவன், புண்ணிய காரியங்கள் செய்திருந்தாலும், ஏகாதசி விரதத்தை கடைபிடிக்கவில்லை என்றால் , அவனை கண்டிப்பாக நரகத்திற்கு அழைத்து வாருங்கள்".
யாரேனும் ஏகாதசி அன்று பகவானுக்கு படைத்த தானிய பிரசாதத்தை வழங்கினால், அதை பத்திரமாக வைத்து அடுத்த நாள் சாப்பிடவேண்டும். அதை வீண் செய்யக்கூடாது. ஏகாதசி அன்று உன்ன வேண்டிய உணவுகள்:
🌷நீர்
🌷பால் மற்றும் பால் கொண்டு தயாரிக்கப்படும் பொருட்கள் (தயிர், பன்னீர், நெய், மோர்)
🌷பழங்கள்
🌷கிழங்கு வகைகள் (உருளை, சேனை, மரவள்ளி, சர்க்கரை வள்ளி)
🌷உலர் திராட்சை, முந்திரி, பாதாம், பிஸ்தா, பேரிச்சம்பழம் போன்றவை
🌷கல் உப்பு
( குறிப்பு: உடல் நிலை சரியில்லாதவர்கள், மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம்.)
ஏகாதசி விரதம் சத்ய யுகத்தில் துவங்கி, இன்று முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
🍁🍁🍁🍁🍁🍁
பத்ம புராணத்தில் ஏகாதசி பற்றி சிறிய வரலாறு கூறப்பட்டுள்ளது:
🍁🍁🍁🍁🍁🍁🍁
ஏகாதசி விரதம் தோன்றிய வரலாற்றை பற்றி அறிந்து கொள்ள விரும்பிய ஜைமினி ரிஷி என்னும் மாமுனிவர், பகவான் வேத வியாசரை அணுகினார். இதற்கு விளக்கமாக, பகவான் வேத வியாசர் பின்வருமாறு கூறினார், "அண்டத்தை படைத்த பகவான் விஷ்ணு, பாவத்தின் மொத உறைவிடமாக ஒரு அசுரனை படைத்தார். அந்த அசுரனின் பெயர் "பாவ புருஷன்". தீய வழியில் செல்லும் மக்களை தண்டிக்கவே, பகவான் இந்த அசுரனை படைத்தார். இவனுக்கான ஒரு இடத்தையும் படைத்தார். அது தான் நரகம். பாவம் செய்யும் அனைவரும் இங்கு தான் தண்டிக்கப்படுவர்.
ஒரு முறை, நரகத்தை பார்வையிட சென்ற பகவான் விஷ்ணு, அங்கு ஜீவாத்மாக்கள் படும் துன்பத்தை பார்த்து மிகவும் பரிதாபம் கொண்டார். ஆகையால் "ஏகாதசி" என்று ஒரு விரதத்தை உருவாக்கினார். யாரொருவர் இதை கடைபிடிக்கிறார்களோ, அவர்கள் நரகத்திற்கு வரமாட்டார்கள் என்று வாக்களித்தார்.
பாவ புருஷனுக்கு வேலை பளு இதன் மூலம் குறைந்தது. ஆகையால் அவன் பகவான் விஷ்ணுவிடம் வேண்டினான், "மக்கள் அணைவரும் ஏகாதசி விரதம் மேற்கொள்வதன் மூலம் தங்கள் பாவங்கள் அனைத்தயும் போக்கிக்கொள்கின்றனர். ஆகையால் எனக்கு வேலை இல்லை. நான் என்ன செய்வது?", என்று கேட்டான். அதற்கு பகவான் விஷ்ணு, "ஏகாதசி நாளன்று நீ பயறு வர்க்கங்கள் மற்றும் தானிய வகைகளுக்குள் சென்று விடு. ஏகாதசி அன்று யார் பயறு வர்க்கங்கள் மற்றும் தானியங்களை சாப்பிடுகிறார்களோ, அவர்களை நீ பிடித்துக்கொள்", என்று வரமளித்தார். பாவபுருஷன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான்.
நம்முடைய பாவங்களை போக்கிக்கொள்ள கிடைத்திருக்கும் ஒரு மிகப்பெரிய பொக்கிஷம் "ஏகாதசி" விரதம். ஆகையால் தான் இதனை பகவான் ஹரியின் நாள் என்று குறிப்பிடுகிறோம். ஏகாதசி விரதத்தை நாம் அணைவரும் கடைபிடித்து ஆன்மீகத்தில் முன்னேறுவோமாக!
குறிப்பு: ஏகாதசி திதி எந்தெந்த நாட்களில் வருகிறது என்பதை கணித்து ஒரு அட்டவணை தயாரித்துள்ளோம், விருப்பமுள்ளவர்கள் எங்களை அணுகலாம். கடைகளில் வாங்கும் நாள்காட்டியில், பெரும்பாலும் ஏகாதசி திதி தவறாக கணிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment