ஒரு பக்தர் தேவையில்லாமல் வைஷ்ணவ உடைகளையோ, துளசி மணிமாலை போன்றவற்றை அணிவதை விட்டுவிடக் கூடாது.


 ஶ்ரீல பிரபுபாதர் அருளிய கதைகள்



ஒரு பக்தர் தேவையில்லாமல் வைஷ்ணவ உடைகளையோ, துளசி மணிமாலை போன்றவற்றை அணிவதை விட்டுவிடக் கூடாது.


மொழிபெயர்ப்பு :- சுத்த பக்தி குழுவினர்


ஒரு காலத்தில் இந்தியாவில் உள்ள தொழிற்சாலையொன்றில் நிறைய இந்து மதத்தைச் சார்ந்த மக்கள் வேலை செய்தனர். அதிலும் பெரும்பாலானோர் வைஷ்ணவர்களாவர். அங்கு வைஷ்ணவர்களுக்கு நெற்றியில் திலகம் அணியவும், துளசி மாலை மற்றும் பிற வைஷ்ணவ அடையாள சாதனங்களை உபயோகிக்க சுதந்திரம் இருந்தது.


சிறிது காலத்திற்குப் பிறகு தொழிற்சாலை ஒரு புதிய நிர்வாகத்தின் கைக்கு மாறியது. அதன் உரிமையாளர்கொரு முகமதியர் (முஸ்லீம்) ஆவார். அவர் அங்கு வேலை பார்ப்பவர்களிடம், வைஷ்ணவ திலகம் அணிந்து கொண்டு வேலைக்கு வருவதற்கு அனுமதி இல்லை என்றார். பெரும்பான ஊழியர்கள் அதற்குக் கீழ்படிந்து நிர்வாகி அறிவித்த தேதியிலிருந்து திலகம் அணியாமல் வேலைக்கு வந்தனர். ஆனால் ஒரே ஒரு ஊழியர் மட்டும் ஆனது ஆகட்டும் அனைத்தையும் பகவான் கிருஷ்ணர் பார்த்துக் கொள்வார் என்று அவரையே முழுமையாகச் சரணடைந்து தைரியமாக அழகான திலகத்தை நெற்றியில் தரித்துக் கொண்டு வேலைக்கு வந்தார்.


மறுநாள் காலையில் அனைத்து ஊழியர்களையும் பார்த்த பின் புதிய முஸ்லீம் நிர்வாகி கூறினார்,  "வைஷ்ணவ திலகம் அணிந்து வந்த இந்த ஒரு பக்தர் மட்டுமே மிகவும் தைரியமானவர். அது மட்டும் அல்ல அவர் தனது வைதீக பழக்கங்களில் உறுதியாக இருப்பதால் அவருக்கு மட்டும் திலகம் அணிந்து கொண்டு வேலைக்கு வர அனுமதியளிக்கின்றேன், ஆனால் மற்றவர்களுக்கு  தடை செய்யப்பட்டுள்ளது என்றார்.


இவ்வாறாக தேவையில்லாமல் வைஷ்ணவ திலகம் அணிவதை ஒரு பக்தர் கைவிட வேண்டாம் என்று ஸ்ரீல பிரபுபாதர் தமது சீடர்களிடம் கேட்டுக் கொண்டார்.  சூழ்நிலைகள் தடை ஏற்படுத்தும் போது திலகம் அணிய தேவையில்லை. இருப்பினும் அத்தகைய பக்தர் காலையில் குறைந்த பட்சம் தண்ணீர் கொண்டு பகவானின் திருநாமங்களால் திலகமிட்டு தனது உடலை புனிதப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் சந்தர்ப்பங்கள் நமக்கு சாதகமாக இருக்கும் போது ஒரு பக்தர் தேவையில்லாமல் வைஷ்ணவ உடைகளையோ, துளசி மணிமாலை போன்றவற்றை அணிவதை  விட்டுவிடக் கூடாது.


(ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்த முத்துக்கள். அத்தியாயம் 3, எண்.6. சத்ஸ்வரூப தாஸ கோஸ்வாமி. கீதா நகரி பிரஸ்).


ஹரே கிருஷ்ண!


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


Telegram செயலி


🍁🍁🍁🍁🍁🍁


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.

👇


https://t.me/joinchat/VaBAs5fOiAeHgexI


ஆன்மீக கதைகளை படிக்க 👇


https://t.me/joinchat/HIm4JGufgEgG7jw


🍁🍁🍁🍁🍁🍁


வலைதளம் /  website


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


https://suddhabhaktitamil.blogspot.com/?m=1

Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more