பலி மகாராஜா


 பலி மகாராஜா 


வழங்கியவர் :- சுத்த பக்தி குழுவினர்


🍁🍁🍁🍁🍁🍁🍁


மகாராஜா பலி பிரகலாத மஹாராஜரின் பேரன் ஆவார்.  இவர் பகவானுக்கு செய்யும்  பக்தி சேவையில் மற்றொரு அங்கீகாரம் பெற்ற பக்தராவார். மிகவும்  சக்தி வாய்ந்த அரசனான இவர் தேவர்களின் அரசனான இந்திரனுடன் போரிட்டு மூன்று உலகங்களையும்  தன் வசப்படுத்தினார். அவர் யாகம் ஒன்றை நடத்தி பிராமணர்களுக்கு தானம் வழங்கிக் கொண்டிருந்தார். அச்சமயம் தேவலோக அதிபதியான இந்திரனுக்கு  நன்மை செய்யும் பொருட்டு பகவான் விஷ்ணு  ஒரு குள்ள பிராமணனின் வடிவில் அதிதிக்கு மகனாகப் பிறந்து மஹாராஜா பலி நடத்தும் யாக சாலைக்கு ஒரு யாசகம் பெரும் பிராமணனைப்  போல் வந்தார்.  அவர் பலி மகாராஜானிடம் தன்னுடைய பாதத்தில் மூன்றடி நிலம் அளந்து தானமாகக் தருமாறு கேட்டார்.  மகராஜா பலியின் ஆன்மீக குருவும் அவரது அரசவையில் தலைமை பிராமணராகவும் இருந்த  சுக்ராச்சாரியார்,  குள்ள பிராமணனின் வடிவில் வந்திருப்பவர் பகவான் கிருஷ்ணர் என்பதைக் அவரால் காண முடிந்தது.  இதனால் அவர் பலியிடம் இந்த சிறுவனின் கோரிக்கைகளை ஏற்காதே என்று அறிவுரை கூறினார்.  ஆனால் மகாராஜா பலி  தனது குருவின் வார்த்தைகளை நிராகரித்து இந்த பிராமணர்  கேட்பதை  வழங்குவது எனது கடமை என்றுரைத்தார்.


மூன்றடி நிலத்தை பலி மகராஜா தாரைவார்த்துக் கொடுத்த உடன் பகவான் வாமனர் மிகப்பெரிய அளவிலான திரிவிக்கிரம ரூபத்தை எடுத்து பிரபஞ்சத்தின் எல்லா நிலங்களையும் தனது முதல் இரண்டு அடிகளால் அளந்தார்.  பின் மூன்றாவது அடிக்கான நிலம் எங்கே என்று பலி மஹாராஜா விடம் கேட்டார்.  தனது ஆன்மீக குருவானவர் தன்னை தடுத்தும் தான் கொடுத்த வாக்குறுதியை தவிர வேறு எதையும் யோசிக்காத மகராஜா பலி பின்வருமாறு கூறினார். "என் அன்பார்ந்த பகவானே!! இப்போது நான் அனைத்தையும் இழந்து விட்டேன்.  எனக்கென்று இனி எதுவும் இல்லை.  ஆனால்  நான் என்ற அடையாளத்திற்கான ஆத்மா உறையும் உடல் என்னிடம் உள்ளது.  எனவே தயவு செய்து  நீங்கள் விரும்பினால் உங்களது மூன்றாவது அடியை என சிரசின் மீது வைப்பீர்களாக."  என்று பணிவோடு பதிலளித்தார்.  இவ்வாறாக மகாராஜா பலி பகவான் தனது மூன்றாவது அடியை  அளந்தெடுப்பதற்காக தன்னையே முழுமையாக அர்ப்பணித்தார். பலி மகாராஜாவின் இத்தகைய செயலானது ,இதற்கு முன்பு அவர் தனது பலத்தால் இந்திரலோகத்தை வென்றெடுத்த செயலுடன் இதை ஒப்பிடுகையில் மிகவும் துச்சமானதாகும். பலி மகாராஜாவின் செயலால் மிகவும் மகிழ்ச்சியடைந்த பக்தவத்சலரான பகவான் ஶ்ரீ வாமன தேவர்  "என்ன வரம் வேண்டும் கேள்" என்று கேட்டார்.


அதற்கு பலி மகாராஜா, "என் அன்பார்ந்த பகவானே!! உங்களிடமிருந்து நான் எதையும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் என்னிடம் இருந்து நீங்கள் எதையோ விரும்புகிறீர்கள் என்பதை நான் புரிந்து கொண்டேன். அதனால் இப்பொழுது என்னிடம் இருப்பவை அனைத்தையும் உங்களுக்கு அர்ப்பணித்து விட்டேன் என்றார். 


"ஆம்" என்றார் பகவான் வாமனர். பின்னர்  " நான் உனக்கென்று சிலவற்றை வைத்திருக்கிறேன் என்றார்".  பலி மகாராஜனே (இந்ரஸேனர்), தேவர்களாலும் விரும்பப்படும் சுதள லோகத்திற்கு இப்பொழுது நீர் செல்லலாம். அங்கு உமது நண்பர்களாலும், உறவினர்களாலும் சூழப்பட்டு அமைதியாக வாழ்வீராக. உமக்கு சர்வ மங்களம் உண்டாகட்டும். சுதள லோகத்தில் வாழும்போது, மற்ற கிரகங்களைச் சேர்ந்த அதிபதிகளால் கூட உம்மை வெல்ல முடியாது, சாதாரண மக்களைப் பற்றி என்னவென்று சொல்வது. அசுரர்களைப் பொறுத்த வரை, உமது ஆட்சியை அவர்கள் மீறினால், என் சக்கரம் அவர்களைக் கொன்றுவிடும். மாவீரனே, எல்லா விஷயங்களிலும் உம்மையும், உமது சகாக்களையும், உபகரணங்களையும் காப்பாற்ற எப்பொழும் நான் உங்களுடனேயே இருப்பேன். மேலும் உம்மால் எப்பொழுதும் என்னை அங்கு காணமுடியும். எனது தெய்வீக சக்தியை உம்மால் அங்கு காண முடியும் என்பதால், அசுரர்களுடனும், தானவர்களுடனும் நீர் கொண்ட சகவாசத்தினால் எழுந்துள்ள உமது பௌதிக எண்ணங்களும், கவலைகளும் உடனடியாக அழிக்கப்பட்டு விடும்.


பகவான் வாமனர் , எல்லாப் பாதுகாப்பையும் வழங்குவதாக பலி மகாராஜனுக்கு உறுதியளித்தார். இறுதியாக, அசுரர்களுடன் கொண்ட தீய சகவாசத்தின் விளைவுகளிலிருந்து பாதுகாப்பதாகவும் பகவான் அவருக்கு உறுதியளித்தார். பலி மகாராஜன் உண்மையிலேயே மிகச் சிறந்த ஒரு பக்தரானார். ஆனால் அவரது சகவாசம் முற்றிலும் பக்தி பூர்வமானதாக இல்லாததால் அவருக்குச் சிறிது கவலையும் ஏற்பட்டது. எனவே அவரது அசுர இயல்பு அழிக்கப்பட்டுவிடும் என்று பகவான் அவருக்கு உறுதியளித்தார். அதாவது, பக்தர்களின் சகவாசத்தால், அசுர இயல்பு அழிக்கப்பட்டு விடுகிறது.


ஸதாம் ப்ரஸங்கான் மம வீர்ய - ஸம்விதோ

பவந்தி ஹருத் - கர்ண - ரஸாயனா: கதா:

(பாகவதம் 3.25.25)


பரமபுருஷ பகவானை போற்றிப் புகழ்வதில் ஈடுபட்டுள்ள பக்தர்களுடன் அசுரனொருவன் சகவாசம் கொள்ளும்பொழுது, அவனும் படிப்படியாக தூய பக்தனாக மாறிவிடுகிறான்.


பூரண சரணாகதியில், பகவானின் தாமரைப் பாதங்களின் பக்தித் தொண்டை அடைவதுதான் வாழ்வின் மிகப்பெரிய நன்மை என்பதை மகாத்மாவான பலி மகாராஜன் அனுபவித்து அறிந்தார். இந்த முடிவில் அவர் நிலையாக இருந்ததால், அவரது இதயத்தில் பக்திப் பரவசமும், கண்களில் ஆனந்தக் கண்ணீரும் ததும்ப, பரமபுருஷ பகவானுக்கு அவர் தமது வணக்கங்களைச் சமர்ப்பித்தார். அதன் பிறகு, தமது சகாக்களுடன் அவர் சுதளம் எனப்படும் லோகத்திற்குள் புகுந்தார்


( குறிப்பு :- நாம்  ஏதோ சிறிது பகவானுக்காக சமர்ப்பணம் செய்தால் கூட அவர் இலட்சக் கணக்கான முறைகளில் திருப்பித் தருகிறார். ஆனால் நாம் எதையும் எதிர்பார்க்கக்கூடாது. பகவான் நம்முடைய  சேவையை திருப்பிச் செலுத்துவதற்காக எப்பொழுதும் மிகவும் ஆவலாக உள்ளார்.  யாரொருவர் பகவானுக்கு சேவை செய்வதை  தன்னுடைய கடமை என்று எண்ணுகின்றாரோ அவருடைய அறிவு மிகவும் பக்குவமானதாகும். அப்படிப்பட்டவர் தன்னிடம் இருப்பவை எல்லாவற்றையும் பகவானுக்காக அர்ப்பணிக்கிறார்.  இவ்விதமாக பலி மகராஜ் தன்னையே முழுமையாக அர்ப்பணித்தல்  -" ஆத்ம நிவேதனம்" என்னும் வழியின் மூலம் பக்தி சேவையில்  மிகவும்  பக்குவம் அடைந்து அவர் நினைத்ததை  எல்லாம் அடைந்தார்.


பகவான் வாமன தேவரால் சுதள லோகத்திற்குச் செல்லும் படி கட்டளையிடப்பட்ட பலி மகராஜா அதை சிறிதும் தயக்கமில்லாமல் நிறைவேற்றினார். பகவானின் கட்டளையை சிறிதும் தயக்கமின்றி  சகிப்புத்தன்மையுடன் நிறைவேற்றிய மஹராஜா பலியின் சகிப்புத்தன்மையை முழு பிரபஞ்சமும் அறிந்து கொள்ளும்படிக்கு  எடுத்துக் காட்டினார் பகவான்.  அனைத்தும் முழுமுதற்கடவுள் பகவான் கிருஷ்ணரிடம் இருந்து தான் வருகிறது. இங்கு யாரும் எதையும்  கொண்டாட முடியாது.  இதுவே எதார்த்தமான உண்மை.  பகவானின் உயர்ந்த விருப்பத்தின்படி பலி  மகராஜா சுதள லோகத்திற்கு செல்ல வேண்டி இருந்தது. ஆனால் முழுமுதற்கடவுள் பகவான் கிருஷ்ணரின் உயர்ந்த ஆணையின்படி அவர் அங்கு சென்றதால்,  ஒருவன் தான் எதிர்பார்த்த சொர்க்க லோக வாழ்வை காட்டிலும் மிக அதிகமான ஐஸ்வர்யங்களுடன் சுதள லோகத்தில் மஹாராஜா பலி  வாழ்ந்தார்.


பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை பிரீத்திப்படுத்துவதற்காக தன்னிடம் இருப்பவை எல்லாவற்றையும் அவர் தியாகம் செய்தார். மேலும் பகவானுக்கு பக்தி சேவை ஆற்றுவதில் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியாக (12 மஹாஜனங்களில் ஒருவராக) பலி மகராஜ் திகழ்கிறார்.


ஹரே கிருஷ்ண!


🍁🍁🍁🍁🍁🍁🍁


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


Telegram செயலி


🍁🍁🍁🍁🍁🍁


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.

👇


https://t.me/joinchat/VaBAs5fOiAeHgexI


ஆன்மீக கதைகளை படிக்க 👇


https://t.me/joinchat/HIm4JGufgEgG7jw


🍁🍁🍁🍁🍁🍁


வலைதளம் /  website


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


https://suddhabhaktitamil.blogspot.com/?m=1

Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more