வழங்கியவர் :- சுத்த பக்தி குழுவினர்
🍁🍁🍁🍁🍁🍁🍁
சுகதேவர் கோஸ்வாமி மகரிஷி வியாசரின் மிகவும் பிரசித்தி பெற்ற மகன் மற்றும் சீடரும் ஆவார். அவர் பிறப்பிலிருந்தே முக்தி பெற்ற ஆத்மாவாக இருந்தார். தனது தாயின் கர்பத்தில் இருக்கும்பொழுதே முக்தியை பெற்றுவிட்டார். அவர் தனது ஜனனத்திற்கு பிறகு எந்த ஒரு ஆன்மீக பயிற்சிக்கும் செல்லவில்லை பிறப்பிலேயே அவர் ஒரு நல்ல வைஷ்ணவராக திகழ்ந்தார். இதனால் பிராமணர்களுக்கென்றுள்ள உபநயனம் போன்ற சடங்குகள் எதுவும் நடைபெறாமல் இருந்தும் அனைத்து மங்களகரமான குணங்களும் வாய்க்கப் பெற்றிருந்தார். அவர் சனாதன தர்மம் கொள்கைகளில் அதீதமான அறிவு பெற்றிருந்ததால் அவர் முற்றிலும் தூய்மையடைந்த ஆத்மாவாக இருந்தார். அவர் முதன்முதலில் மகாபாரதம் மற்றும் ஸ்ரீமத் பாகவத உபன்நியாசங்களை தனது தந்தையான வியாச தேவரிடமிருந்து கேட்டார். அவர் கந்தர்வர்கள், யக்ஷர்கள் மற்றும் ராட்சஷர்களின் சபையில் 14 லட்சம் ஸ்லோகங்கள் கொண்ட மகாபாரதத்தை உபந்நியாசம் செய்தார். அவர் முதன்முதலாக மகாராஜா பரீக்ஷித்திற்கு ஸ்ரீமத் பாகவதத்தை உபந்நியாசம் செய்தார். அவர் தனது தந்தை வியாசதேவரிடம் மதங்களின் கொள்கைகள் குறித்தும் ஆன்மீகத்தின் முக்கியத்துவம் குறித்தும் விரிவான விளக்கங்களை விசாரணை செய்து கேட்டறிந்தார். சுகதேவ கோஸ்வாமி ஆரனேயா, அருணிசுத, வையாசகி, மற்றும் வியாசமாதஜா போன்ற பல்வேறு நாமங்களில் அழைக்கப்பெற்றார்.
ஒரு கற்றறிந்த பிராமணனானவன பிராமணன், சண்டாளன் நாய் மற்றும் நாயைத் தின்பவன், பசு போன்ற அனைத்து உயிர்களையும் ஒரே சம நோக்குடன் பார்க்கிறான் என்று ஶ்ரீமத் பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது. . சுக தேவ கோஸ்வாமியும் அத்தகைய உயர் நிலையில் இருந்தார். அவர் ஒரு நபரை ஆண் என்றோ பெண் என்றோ பார்க்காமல் வெவ்வேறு ஆடைகள் அணிந்த உயிர் வாழிகள் என்ற நோக்குடனே பார்த்தார். அவர் ஒரு கிரஹஸ்தரின் வீட்டில் பால் கறந்து எடுக்கும் நேரம் மட்டுமே நிற்பார். மேலும் அதில் சிறிது அளவு மட்டுமே தனது ஆத்மாவை தக்க வைத்துக் கொள்வதற்காக உணவாக எடுத்துக்கொள்வார்.
அடக்கமான மனநிலையில் திவ்ய சாஸ்திர நூலான ஸ்ரீமத் பாகவதத்தை ஒருவர் கவனத்துடன் கேட்க வேண்டும். அவ்வாறு கேட்கும் போது ஒருவர் தன்னை உணர்ந்து திவ்ய தலத்தை அடையலாம். ஆனால் சரியான மூலத்திடம் இருந்து அதனைக் கேட்க வேண்டியது மிக மிக அவசியமாகும். இந்த அறிவானது நாரத முனிவரால் ஆன்மீக உலகத்திலிருந்து கொண்டு வரப்பட்டு அவரது சீடரான வியாசருக்கு வழங்கப்பட்டது. அந்த அறிவை பின்னாளில் வியாச தேவர் தனது மகனான சுகதேவ கோஸ்வாமிக்கு வழங்கினார். சுகதேவ கோஸ்வாமி அதனை மகாராஜா பரீக்ஷித்திற்கு அவர் மரணிபபதற்கு 7 நாட்களுக்கு முன் உபதேசித்தார்.
சுகதேவ் கோஸ்வாமி வழங்கிய திவ்ய அறிவை பரீக்ஷித் மகராஜ் மிகவும் கவனமாக மிகச் சரியான முறையில் ஒரு தீவிர மாணவரைப் போல் ஶ்ரீமத் பாகவதத்தை கேட்கவும் பாடவும் செய்தார். இதில் உரைப்பவர், கேட்பவர் என இரண்டு பேருமே பயனடைந்தனர். கங்கைக் கரையில் குழுமியிருந்த கற்றறிந்த முனிவர்களுக்கு மத்தியில் 16 வயதே நிரம்பிய சுகதேவ கோஸ்வாமியே மிகவும் அனுபவம் மிக்கவராக இருந்தார்.அவர் பதினாறு வயதே நிரம்பியிருந்தாலும் ஞானத்தில் அங்கு குழுமி இருந்தவர்கள் மத்தியில் அவரே முதன்மையானவராக திகழ்ந்தார்.
ஸ்ரீமத் பாகவதத்தில் பரிந்துரைக்கப்பட்ட பகவானுக்கு செய்யும் ஒன்பது விதமான வேறுபட்ட பக்தி சேவை நிலைகளில் முதல் இரண்டு முக்கிய நிலைகளான ஸ்ரவணம் (கேட்டல் , செவியுறுதல்), கீர்த்தனம் (உபதேசித்தல், பாடுதல்) ஆகியவற்றில் சுகதேவ கோஸ்வாமி மற்றும் பரீட்சித்து மகாராஜா போன்ற மகாத்மாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவர்களாவர்.
சமஸ்கிருத மொழியில் "சுக" என்னும் சொல் கிளியைக் குறிக்கிறது. கிளியின் சிவந்த அலகில், எப்பொழுதும் நன்றாக கனிந்த பழத்தின் இனிமையான மயக்குகின்ற தரமான சுவையால் நிரம்பியிருக்கும். அதுபோல வேதம் என்னும் மரத்தின் கனிந்த மற்றும் முதிர்ந்த பழமாகிய ஸ்ரீமத் பாகவதம் கிளியுடன் ஒப்பிடப்படும் சுகதேவகோஸ்வாமியின் உதடுகளால் பேசப்பட்டு அவரால் முழுமையாக சுவைக்கப்படுகிறது. அவர் ஶ்ரீமத்பாகவதத்தை உபதேசிக்கும் பொழுது ஒரு வித்தைக்காரன், அல்லது விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் மயக்கும் இனிமையான வார்த்தைகளால் பேசுவது போன்ற இனிமையான வார்த்தைகள் பேச ஒருபோதும் முயற்சிக்கவில்லை.
வெளிப்பார்வைக்கு அவர் ஒரு சாதாரண மனிதர் போல் காணப்பட்டாலும் உண்மையில் அவர் மிகவும் உயர்ந்த உன்னத மகாத்மா ஆவார். அவர் தனது தந்தையின் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு பித்துப் பிடித்தவன் போல் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தார். இதனால் ஒரு சாதாரண நிலையில் இருக்கும் ஒரு மனிதனுக்கு சுகதேவ் கோஸ்வாமியின் உயர்ந்த நிலையை இனம் கண்டுபிடிப்பது மிகவும் கடினமான செயலாகும். இதனால் ஒரு சாதுவை பார்ப்பதன் மூலம் அவரை அங்கீகரிக்காமல், அவரிடமிருந்து கேட்பதன் மூலம் அஙகீகரிக்க வேண்டும். எனவே ஒரு சாதுவை அல்லது ஒரு மகானை பார்ப்பதற்காக அணுகாமல் அவரிடமிருந்து கேட்பதற்காக ஒருவர் அணுக வேண்டும்.
இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் சங்கிலி மாகாணத்தில் "சுகாச்சாரி" என்றழைக்கப்படும் இடத்தில் சுகதேவ கோஸ்வாமி தனது இறுதி நாட்களை அங்கு கழித்ததாகக் கருதப்படுகிறது. அவர் அங்கு ஒரு குகையில் இருந்து தனது கடைசி மூச்சு வரை பகவானை நினைத்து தியானம் செய்ததாக அறியப்படுகிறது. சுகதேவ் கோஸ்வாமி இங்கு இருந்தார் என்பதை நினைவூட்டும் வகையில் இன்றும் அந்த இடத்தை சுற்றி ஏராளமான கிளிகள் உள்ளன.
ஹரே கிருஷ்ண 🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
Telegram செயலி
🍁🍁🍁🍁🍁🍁
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
👇
https://t.me/joinchat/VaBAs5fOiAeHgexI
ஆன்மீக கதைகளை படிக்க 👇
https://t.me/joinchat/HIm4JGufgEgG7jw
🍁🍁🍁🍁🍁🍁
வலைதளம் / website
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
https://suddhabhaktitamil.blogspot.com/?m=1
Comments
Post a Comment