ஶ்ரீ ராம நவமி விரதம் அனுஷ்டிக்கும் முறை
வழங்கியவர் :- ஶ்ரீல பிரபுபாதர்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
"ஸுக்ர்தி" என்றால் யஜ்ன- தான - தப - க்ரியா. ஒருவர் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளதுபோல் யாகங்களை செய்யவேண்டும். மேலும் தான் கடினமாக உழைத்து ஈட்டிய செல்வதை பகவான் கிருஷ்ணருக்காக அளிக்கவேண்டும். இதுவே "தானம்" ஆகும். யஜ்னம், தானத்தை தொடர்ந்து தபஸ்யா. "தபஸ்யா" என்றால் தவம் இருப்பது. இன்று ஸ்ரீ ராம நவமி. ராம நவமி அன்று பக்தர்கள் அனைவரும் சூரிய உதயத்திலிருந்து சூரிய அஸ்தமனம் வரை விரதம் ஏற்பார்கள். இதுவே உண்மையான தபஸ்யா. அதேபோல் ஏகாதசி அன்றும் நாம் வயிறு நிறைய உணவருந்த கூடாது. சிறிது பூ, பழங்களை மட்டும் உண்ண வேண்டும். இதையும் தவிர்ப்பது நல்லது. உண்மையான ஏகாதசி என்றால் நீர் கூட அருந்தாமல் இருப்பது தான். ஆனால் கலி யுகத்தின் கால மாற்றம் காரணமாக நம்மால் இதை கடைபிடிக்க இயலாது. ஆகையால் சிறிது பாலும் பழங்களும் ஏற்கலாம். இது அணுகல்பம் என்று அழைக்கப்படுகிறது. பல்வேறு வகையான தவங்களும் யஜ்னங்களும் உள்ளன. இது "ஸங்கீர்த்தினை பிரயைர் யஜனை யஜந்தி ஹீ ஸு மேதஸஹ்". கலி யுகத்தில் அஸ்வமேத யாகம், கோமேத யாகம், ராஜசூய யாகம் - இவைஅனைத்தும் செய்யமுடியாது. ஏனெனில் இதற்கான மூல பொருட்கள் கிடைப்பதில்லை. உதாரணமாக யாகத்தின் போது பயன்படுத்த ஆயிரக்கணக்கான லிட்டர் தூய நெய் தேவைப்படுகிறது. ஆனால் நம்மிடம் ஒரு சொட்டு கூட தூய நெய் இல்லை. ஆகையால் அணைத்து யாகங்களையும் மறந்து விடுங்கள். கலி யுகத்திற்கு ஏற்ற யாகம் "சங்கீர்தன யாகமாகும்".
ஶ்ரீல பிரபுபாதர் / ராம நவமி உபன்யாசம் / பாம்பை
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
Comments
Post a Comment